அ.தி.மு.க.,வால் தட்டிபறிக்கப்பட்ட ராஜ்யசபா எம்.பி., பதவியை தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்து பெற, தே.மு.தி.க., தலைமை ரகசிய பேச்சுவார்த்தையில் இறங்கியுள்ளது.
விஜயகாந்த் மீது மட்டுமின்றி, தே.மு.தி.க., - எம்.எல்.ஏ.,க்கள் சிலர் மீதும், நில அபகரிப்பு மற்றும் அரசுக்கு எதிராக அவதூறாக பேசியதாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.இதனால், தே.மு.தி.க., எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் அடக்கி வாசித்து வருகின்றனர். டில்லி அரசியலில் பலமாக கால்பதித்தால் மட்டுமே, இதுபோன்ற நெருக்கடிகளை தவிர்க்க முடியும், கட்சியையும் வளர்க்க முடியும் என, தே.மு.தி.க., நிர்வாகிகள் சிலர், விஜயகாந்திற்கு ஆலோசனை வழங்கி உள்ளனர்.இதை ஏற்கனவே கணித்து வைத்திருந்த வியகாந்த், மா.கம்யூ., கட்சி ஆதரவுடன், அடுத்தாண்டு ராஜ்யசபா எம்.பி., பதவியை கைப்பற்றி விடலாம் என, கணக்கு போட்டிருந்தார்.
தன் மைத்துனர் சுதீசை ராஜ்யசபா எம்.பி.,யாக்கி, டில்லிக்கு அனுப்பி, அவர் மூலம், லோக்சபா தேர்தலுக்கான கூட்டணி ஏற்பாடுகளை கவனித்துக்கொள்ளலாம் என்ற எண்ணமும் அவருக்கு இருந்தது.ஆனால், தலைமை செயலகத்தில், முதல்வர் ஜெ.,வை சந்தித்த, நான்கு தே.மு.தி.க., - எம்.எல். ஏ.,க்களால், விஜயகாந்தின் கனவில் மண் விழுந்து விட்டது.ஜெ., சந்தித்த பிறகு தே.மு.தி.க., நடவடிக்கைகளில் பங்கேற்பதை தவிர்த்து வரும் எம்.எல். ஏ.,க்கள், விஜயகாந்திற்கு எதிராகவும் பேசி வருவதே, இதற்கு காரணமாக அமைந்துள்ளது.
இதனால் அடுத்தக்கட்டமாக, தி.மு.க., ஆதரவுடன் ராஜ்யசபா எம்.பி., பதவியை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கில், தே.மு.தி.க., தரப்பில் ரகசியமாக காய்கள் நகர்த்தப்பட்டு வருகின்றன. கடந்த ஆட்சியில், திருமண மண்டபம் இடிப்பு, வருமானவரித்துறை "ரெய்டு' போன்றவைகளால், எதிரும், புதிருமாக இருந்த தி.மு.க.,வும் தே.மு.தி.க.வும், எதிரிக்கு எதிரி நண்பன் என்ற விதிப்படி, நட்பு பாராட்டி வருகின்றன.பழைய பகையால், ஒருவரை, ஒருவர் சந்திக்காவிட்டாலும், விஜயகாந்தும், தி.மு.க., தலைவர் கருணாநிதியும், கூட்டணி நட்பை மெல்ல, மெல்ல வளர்க்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.
"மதவாத சக்திகள் ஆட்சிக்கு வராமல் இருக்க புதிய கட்சிகளுடன் இணைந்து கூட்டணி அமைக்கப்படும்' என, தி.மு.க., தலைவர் சமீபத்தில் அறிவித்ததில் இருந்தே, லோக்சபா தேர்தலில், அக்கூட்டணியில் தே.மு.தி.க., இணைவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாகி வருவது வெட்டவெளிச்சமாகி உள்ளது.விஜயகாந்தும், தன் பங்கிற்கு தி.மு.க.வுடன், தே.மு.தி.க.,வுடன் கூட்டணி அமைக்குமா என்ற பத்திரிகையாளர்களின் கேள்விக்கு, "எதுவும் நடக்கலாம்' என்று பதில் அளித்துள்ளது, கூட்டணிக்கான அச்சாரமாக அமைந்துள்ளது. தி.மு.க.,வை விமர்சிக்க கூடாது என, கட்சி நிர்வாகிகளுக்கு விஜயகாந்த் உத்தரவிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதேநேரத்தில், லோக்சபா தேர்தலுக்கு முன்பே, ராஜ்யசபா தேர்தல் நடக்க இருப்பதால், அதற்குள், தங்களுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளின் எண்ணிக்கையை இறுதி செய்வதற்கான, இறுதிக்கட்ட பேச்சுவார்த்தையில் தே.மு. தி.க., தலைமை தற்போது இறங்கியுள்ளதாக தெரிகிறது.
இதுதொடர்பான பேச்சுவார்த்தையில், விஜயகாந்தின் உறவினரும், தி.மு.க., சார்பில், அக்கட்சியின் வாரிசு தலைவரும் ஈடுபட்டுள்ளனர். அடுத்தாண்டு மார்ச் மாத வாக்கில், ராஜ்யசபா சீட் ஆதரவு மற்றும் தி.மு.க., - தே.மு.தி.க., இடையிலான கூட்டணி ஒப்பந்தமும், இறுதி வடிவம் பெறும் வாய்ப்புள்ளது.
- நமது நிருபர்-
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
மீண்டும் ஒரு கட்டுக்க் கதை. இதுபோன்ற செய்திகளால் மக்களை குழப்ப முடியுமே தவிர வேற எதுக்கும் பயன்படாது. குடும்ப அரசியல் குடும்ப அரசியல் என்ற கூச்சல் வேறு. யார்தான் செய்யவில்லை. குடும்பம் இருந்து அரசியலில் இருக்கும் அனைவருமே அதைத்தான் செய்கிறான். குடும்பமே இல்லாதவர்கள் அதை செய்யததில் ஒன்றும் ஆச்சரிய படுவதிற்கில்லை.
நாலு எம் எல் எ க்களை கையில் வைத்து கொள்ள முடியாத வன் எம் பி களை எம்பி விடாமல் பார்த்து கொள்ள முடியுமா, இது தாண்டா அரசியல், அடுத்தவன் கட்சியில் இருந்தும் அடுத்தவன் வீட்டில் இருந்து எப்படி வந்தாலும் வேட்க்கமிலாமல் வேட்கையுடன் ஏற்றுகொள்வார்கள் மானங் கெட்ட மனிதர்கள். இருக்கட்டும் வீதிக்கு வீதி நிற்போர் போவோரை நிறுத்தி மக்களே மக்களே நான் சொல்வதை கேளுங்கள் என்று சொல்லி தி மு க வையும் அதிமுக வையும் பேசி இரண்டு பேரிடமும் உறவும் கொள்ளலாம், பி ஜே பி காங்கிரச கம்யூனிஸ்ட் இப்படி உறவும் உனக்கென்று என்ன இருக்கு, ஏன் கட்சிகளின் உறவு, தனித்தே நிற்பேன் என்ற அடம் அடங்கி போனது, உறவுகள் தொடர்கதை, உன்னையும் கமேடியனையும் வைத்து நல்லா அரசியல் நடந்துடிச்சி, கூடிய கூடமெல்லாம் வோட்டு கிடைக்காது, மக்களுக்கு முன் மரியாதை கொடுங்க, வாய்க்கு வந்ததை பெசாந்திங்க, குடும்ப அரசியல் வேண்டாம் என்றால் நீ அரசியலை விட்டு ஒதுங்கி மற்றவர்களுக்கு இடம் கொடுக்கலாம், யாரவது ஒருவர் எம் எல் எ வாகி சிஎம் ஆகலாம் யாராவது எம் பி ஆகி பிரதமர் ஆகலாம், பின் ஒருகாலத்தில் ப்ரெசிடெண்ட் ஆகலாம், இது தானே இந்திய அரசியல்,
இடை தேர்தல்ல இரண்டாம் இடம் பிடித்த க்வாட்டர் காந்த், கிழவரை தூக்கி தோளில் வைத்துக்கொண்டு டெல்லி போவ போறார்,, ஆனாலும் இவர்கள் யார் யாருடன் கூட்டணி வைத்தாலும்,,, மக்களுக்கு பெரிய குழப்பம் காத்திருக்கு.. அஞ்சிக்கு ரெண்டு பழுதில்லை என்று சொல்ல எந்த அரசியல் கட்சியுமே இல்லையே.. மக்களாகிய நாம் ஏதாவதொரு திறனற்ற அரசியல்வாதிய ஆதரிக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தில் அல்லவா நிற்க வேண்டி உள்ளது.. .தாத்தா, பாட்டி, பாட்டில், சானியார், இவங்கள தவித்து எங்க போவ முடியும், ஒபமாவுக்கா ஒட்டு போட முடியும்,, அட கஷ்ட்ட காலமே

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.