E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
தி.மு.க., உட்கட்சி தேர்தல் தள்ளி போகுமா? கோஷ்டி மோதலால் கருணாநிதி கலக்கம்
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

மாற்றம் செய்த நாள்

16 டிச
2012
00:19
பதிவு செய்த நாள்
டிச 15,2012 23:44

தி.மு.க., தலைவர் கருணாநிதி, பொருளாளர் ஸ்டாலின், மத்திய அமைச்சர் அழகிரி, ராஜ்யசபா எம்.பி., கனிமொழி ஆகியோரின் ஆதரவாளர்கள் என்ற முத்திரையுடன், கட்சியினர் செயல்படுவதால், தி.மு.க., உட்கட்சித் தேர்தல் நடத்துவதில், குழப்பம் உருவாகிஉள்ளது.

கோஷ்டி மோதல்களை தவிர்க்க, லோக்சபா தேர்தலுக்கு பின், உட்கட்சி தேர்தலை நடத்தலாமா அல்லது போட்டியை தவிர்த்து, சமரச முயற்சியில், பதவிகளை பங்கீட்டு வழங்கலாமா என்று, மேலிடம் ஆலோசனை நடத்தி வருவதாக, அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.லோக்சபா தேர்தலுக்கு தயாராகும் வகையில், மாவட்ட வாரியாக, ஆய்வுப் பணியை, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் நேற்று துவக்கினார். புதிய உறுப்பினர்களுக்கான, அட்டை வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட வாரியாக, நடக்கிறது. சில மாவட்டங்களில் வெட்டு, குத்துகள் கட்சியினர் மத்தியில் அரங்கேறி வருகின்றன.

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு ஒன்றிய தி.மு.க.,வில் நடந்த தகராறு காரணமாக, சில ஊராட்சிகளுக்கு உறுப்பினர்கள் அட்டை வழங்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.தேனி மாவட்டத்தில், உட்கட்சி தொடர்பாக, கட்சியினர் கொலை வெறித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனால், கட்சித் தலைமை கலக்கம் அடைந்துள்ளது.இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், உட்கட்சித் தேர்தலை தள்ளி வைக்கலாமா என, தி.மு.க., தலைமை யோசித்தது.

இதுகுறித்து, பெயர் வெளியிட விரும்பாத தி.மு.க., நிர்வாகி கூறியதாவது:
உட்கட்சி தேர்தல் நடத்தினால், பெரிய அளவில் குளறுபடி ஏற்படும். பதவி கிடைக்காதவர்கள், லோக்சபா தேர்தலில், பணியாற்ற முன் வரமாட்டார்கள். இதனால், கட்சி வேட்பாளர்களின் வெற்றி பாதிக்கும்.எனவே, லோக்சபா தேர்தலுக்கு முன், உட்கட்சித் தேர்தல் நடத்தாமல், தேர்தல் முடிந்த பின் நடத்தலாம் என, மேலிடம் ஆலோசித்து வருகிறது. கட்சியில் கருணாநிதி, ஸ்டாலின், அழகிரி, கனிமொழி ஆகியோரின் ஆதரவாளர்கள் என்று நான்கு கோஷ்டிகளாக, செயல்படுகின்றனர்.உட்கட்சித் தேர்தலில், நான்கு கோஷ்டிகளுக்கும் பதவி வழங்க வேண்டும் என்ற நெருக்கடி இருப்பதால், கட்சி தேர்தல் நடத்துவதில், மாவட்ட வாரியாக குழப்பம் உருவாகியுள்ளது.அடுத்த ஆண்டு தேர்தல் வருமானால், உட்கட்சித் தேர்தல் தள்ளி போகும். ஆனால், 2014ம் ஆண்டில், லோக்சபா தேர்தல் நடத்தினால், உட்கட்சித் தேர்தல் தள்ளி போக வாய்ப்பு இல்லை.போட்டியை தவிர்க்கும் வண்ணம், இருதரப்பினரையும் அழைத்து பேசி, சமரசமான முறையில் பதவிகளை பகிர்ந்து அளிக்கவும், மேலிடம் திட்டமிட்டிருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இவ்வாறு, அவர் கூறினார்.

கருணாநிதியை முந்தும் ஸ்டாலின் :



தி.மு.க.,வினர் நான்கு பிரிவுகளாக பிரிந்து நிற்கும் நிலையில், ஸ்டாலின் கையே ஓங்கியிருக்கிறது. கட்சியில் ஸ்டாலின் ஆதரவாளர்களாக செயல்படுவதை, பெரும்பாலான, முன்னாள் அமைச்சர்கள், மாவட்டச் செயலர்கள் விரும்புகின்றனர். இவர்களுக்கு அடுத்த இடத்தில், அழகிரி, கனிமொழி ஆதரவாளர்கள் உள்ளதாக கூறுகின்றனர், தி.மு.க.,வினர்.

உப்பு சப்பில்லாத செயற்குழு:



தி.மு.க., செயற்குழு, பொதுக்குழுக் கூட்டம் என்றால், பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. ஆனால், சமீபத்திய தி.மு.க., செயற்குழு உப்பு சப்பில்லாமல் முடிந்ததோடு, கணிசமானவர்கள் வருகை தராமல் புறக்கணித்து, அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளனர்.இந்த கூட்டத்தில் அழகிரி, கனிமொழி ஆகியோர் பங்கேற்காததால், அவர்களது ஆதரவாளர்கள் கூட்டத்தை புறக்கணித்துள்ளனர். செயற்குழு உறுப்பினர்களுக்கு, எழுச்சியுரை ஆற்ற வேண்டிய கருணாநிதி, நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து தன் கடமையை முடித்துக் கொண்டுள்ளார். பழனிமாணிக்கம் மட்டும், குரலை உயர்த்தி, தனது இருப்பை காட்டிக் கொண்டார் என்கின்றனர் தி.மு.க.,வினர். நேரு, வெள்ளக்கோவில் சாமிநாதன், குத்தாலம் கல்யாணம் போன்றவர்கள் பேச்சிலும் சுவாரஸ்யம் இல்லை.நடிகை குஷ்பு பேசுகையில், ""இளைய தலைமுறையினர், பெரும்பாலும் இணையதளத்தை தான் பயன்படுத்துகின்றனர். "டுவிட்டர்' மற்றும் "பேஸ்புக்'கில், மின்வெட்டு பிரச்னையை பற்றி அதிகமாக தெரிவிக்க வேண்டும்,'' என்றார்.மின்வெட்டு தொடர்பாக போராட்டம் நடத்தப்படும் என்ற தீர்மானத்தை ஸ்டாலின் வாசிக்கும் போது, "கை தட்டுங்கள்' என, கருணாநிதி கூறவும், அதன் பின், செயற்குழு உறுப்பினர்கள் கை தட்டியுள்ளனர். மொத்தத்தில், ஆளுங்கட்சியை பற்றிய எவ்வித விமர்சனங்களும் இல்லாமல், உப்பும்சப்பும் இல்லாமல், செயற்குழு முடிந்ததாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

- நமது நிருபர் -



தொடர்புடைய செய்திகள்:


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (35)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
GUNAVENDHAN - RAMAPURAM , CHENNAI,இந்தியா
18-டிச-201209:24:46 IST Report Abuse
GUNAVENDHAN தி.மு.கவில் நான்கு கோஷ்டிகளாம், அந்த நாலு கோஷ்டிகளுமே கருணாநிதி குடும்பத்தவர்களுடையதுதான். கருணாநிதி தன் கட்சியில் பதவியை வைத்து கொள்ளையடிப்பதாக இருந்தாலும் சரி, கோஷ்டிகளை ஏற்படுத்துவதாக இருந்தாலும் சரி அதிலெல்லாம் தன் குடும்பத்தினர் தான் முன்னணியில் இருப்பதை விரும்புவார். தன் குடும்பத்தினருக்கு தான் கட்சியில் முதல் மரியாதை என்பதை ஏற்றுகொள்பவர்கள் மட்டுமே கட்சியில் இருக்க முடியும் என்பதை எப்போதோ கட்சி மூத்தவர்களுக்கும் புரியவைத்து விட்டார். எனவே தான், எக்கேடாவது கெட்டுபோகட்டும் என்று மற்ற மூத்த தலைவர்களும் வாய் மூடி மவுனியாக இருந்து கொண்டுள்ளார்கள். கருணாநிதி தன் கண் முன்னாலேயே கட்சியை தன் குடும்பத்தினர் அழிப்பதை பார்க்கத்தான் போகிறார். தன் குடும்பத்தினர் எல்லோரையும் கட்சியை விட்டு ஒதுங்கியிருக்க சொல்லி , ஒதுக்கினால் தான் கட்சி உருப்படும். அண்ணா எப்படி தனக்குப்பின் , தன் கட்சியில் உள்ள மூத்த தலைவர்களில் யார் வேண்டுமானாலும் கட்சிக்கு தலைமை தாங்கி நடத்தட்டும் என்று பெருந்தன்மையாக  விட்டுவிட்டு போனாரோ அப்படி கருணாநிதி தன் குடும்பத்தினரின் ஆதிக்கத்தில் இருந்து கட்சியை விடுவித்து விட்டு போனால், ஏதோ இன்னும் சில வருடங்களுக்கு பிறகாவது கட்சி வளரும், ஆட்சியை பிடிக்கும் நிலையை எட்டிபிடிக்ககூடும். ஆனால் கருணாநிதி அந்தளவுக்கு பெருந்தன்மையுடையவர் இல்லை என்பது எல்லோரும் அறிந்ததே. லட்சகனக்கானோரின் கடுமையான உழைப்பு, பலரின் உயிர் தியாகம் , போன்றவைகளினால் இமயம் போல் எழுந்து நின்ற கட்சியை கருணாநிதியும் , அவர் குடும்பத்தினரும் அசிங்கப்படுத்தி, கேவலப்படுத்தி, குற்றுயிரும் கொலைவுயிருமாக ஆக்கிவிட்டனர். இந்தியாவிலேயே துணிந்து கோடி கோடியாக சுருட்டுவதில் வல்லவர்கள் இவர்கள் தான் என்று டெல்லியில் பேசக்கூடிய அளவுக்கு சென்றுவிட்டார்கள். கருணாநிதி தன் கடைசி காலத்தில் தன்னை இந்தளவுக்கு வளர்த்த, தன் குடும்ப உறுப்பினர்களை எல்லாம் பல்லாயிரக்கணக்கான கோடிகளுக்கு சொந்தகாரர்களாக்கிய கட்சிக்கும் , கட்சிக்கு உண்மையாக உழைத்து உழைத்து ஓடாய் போன தொண்டர்களுக்கும் நல்லது செய்ய நினைத்தால், உடனடியாக தன் குடும்பத்தினர்கள் எல்லோரையும் ஒட்டுமொத்தமாக கட்சியை விட்டு ஒதுங்கசொல்லி தயவு தாட்சண்யமில்லாமல் சொல்லவேண்டும். அப்படி சொன்னால் வீட்டில் கண்டபடி எல்லோரும் பேசுவார்களே, அல்லது மகன்களில் ஒருசிலர் தன்னை அடிக்க கூட வருவார்களே என்றெல்லாம் பார்க்ககூடாது. துணிந்து அவர்களை வெளியேற்றிவிட்டு , கட்சியை கட்சியில் உள்ள மூத்தவர்கள் பார்த்துக்கொள்ளட்டும் என்று விட்டுவிட்டால் , வரலாறு பின்னாளில் இவரை கொஞ்சமாவது நல்லவர் என்றோ, அல்லது கட்சி காலத்தில் நல்லது செய்தார் என்றோ பேசும்.
Rate this:
1 members
1 members
15 members
Share this comment
Cancel
Theepori Thirumugam - Kundangulam,இந்தியா
17-டிச-201219:20:05 IST Report Abuse
Theepori Thirumugam "Divide and Rule".. இது தாத்தாவின் formula.. எது எப்படியோ .., கட்சி தன குடும்ப கட்டுபாட்டுக்குள் இருந்தால் சரி..
Rate this:
0 members
1 members
6 members
Share this comment
Cancel
rama kumaran - Singapore,சிங்கப்பூர்
17-டிச-201213:36:08 IST Report Abuse
rama kumaran எங்க சிங்கம் அழகிரி அண்ணன் தான் அடுத்த தலிவர், அவர் அறிவு, தெறமை யாருக்கு வரும் தி.மு.க. ல???
Rate this:
2 members
1 members
17 members
Share this comment
Cancel
LAX - Trichy,இந்தியா
17-டிச-201213:27:31 IST Report Abuse
LAX அட்ரா.. அட்ரா.... அட்ரா சக்க...... அன்றே சொன்னது....
Rate this:
17 members
0 members
9 members
Share this comment
Cancel
தமிழ் குடிமகன் - போயஸ்கார்டன் ,இத்தாலி
17-டிச-201211:46:17 IST Report Abuse
தமிழ் குடிமகன் பெருசு கண்ணு முன்னாடியே கட்சி அழியபோகிறது .................
Rate this:
18 members
0 members
23 members
Share this comment
Cancel
T.Indran - Pudukottai,இந்தியா
17-டிச-201211:30:23 IST Report Abuse
T.Indran என்னதான் புலம்பினாலும் திமுக வை அடுத்த நிலைக்கு தலைமை பதவி ஏற்று நடத்த திறமை பெற்றவர் அழகிரி ஒருவர் தான். தகுந்த நேரத்தில் அழகிரி அதை சாதிப்பார் என்பதுதான் உண்மை நிலை.
Rate this:
10 members
0 members
14 members
Share this comment
Cancel
jagan - Chennai,இந்தியா
16-டிச-201223:34:34 IST Report Abuse
jagan தல சொன்ன -மதவாதம் இல்லாத கட்சிகளை ஊக்குவிப்போம்- இப்போ புரியுது... அஞ்சா நோஞ்சான் கட்சி மாதிரி பல இருக்கு போல.....
Rate this:
26 members
0 members
10 members
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
16-டிச-201222:34:48 IST Report Abuse
Nallavan Nallavan வீரபாண்டியார் கட்சியைக் கைப்பற்ற நினைத்ததாகவும் அதன் முடிவால் அவர் மர்ம மரணம் அடைந்ததாகவும் சேலத்தில் ஒரு பேச்சு உண்டாமே?
Rate this:
21 members
0 members
22 members
Share this comment
s.maria alphonse pandian - CHENNAI-88,இந்தியா
17-டிச-201212:07:45 IST Report Abuse
s.maria alphonse pandianஎம்ஜிஆர் மரணத்தில் கூட மர்மம் உண்டாமே? ஒரு பேச்சு அடிபடுகிறது...ஜெயா கூட, ஜானகி மோரில் விஷம் வைத்து கொன்றதாக அப்போது கூறினார்..ஜெயா கூட ராஜீவை சந்தித்து தன்னை முதல்வராக்கும்படி கூறியதாக கூட ஒரூ செய்தி உண்டு......
Rate this:
24 members
0 members
18 members
Share this comment
Neeraja - Bangalore,இந்தியா
17-டிச-201217:11:44 IST Report Abuse
Neerajaமரியா அறிவாளி.. உங்கள எல்லாம் திருத்தவே முடியாது. எத சொன்னாலும் தி.மு.க நல்ல கட்சி மாதிரியும் அ.தி.மு.க கேட்ட கட்சி மாதிரியுமே பேசுங்க. செய்தி என்னவோ அதுக்கு கருத்து சொல்லுங்கள். தி.மு.க உடைய போகுதாமே அதுக்கு கருத்து என்ன?...
Rate this:
5 members
0 members
22 members
Share this comment
Cancel
S.M.Noohu - Jeddah,சவுதி அரேபியா
16-டிச-201221:46:43 IST Report Abuse
S.M.Noohu தலைவருக்கு கலக்கமுமில்லை , குழப்பமுமில்லை , தி மு க வை கண்டு தான் பலருக்கும் ( தினமலர் உள்பட) கலக்கம்.
Rate this:
10 members
0 members
14 members
Share this comment
Vengatesan - chennai,இந்தியா
18-டிச-201203:25:44 IST Report Abuse
Vengatesanஅட கூறு கெட்ட குக்கரு உங்க கட்சியை முதல்ல காப்பத்துற வழியை பாரு...
Rate this:
2 members
0 members
5 members
Share this comment
Cancel
g.k.natarajan - chennai,இந்தியா
16-டிச-201220:11:38 IST Report Abuse
g.k.natarajan மாறன் அவர்கள், எந்த கட்சி? பேசாமல், திரு. ஸ்டாலின்தான் அடுத்த தலைவர் என்று அறிவித்து விடலாம்...? இல்லையென்றால், குழப்பம்தான்...?பெரியவரும் ஓய்வு எடுக்கலாம்..உடல் நிலை சரியாக இல்லாதலால்...
Rate this:
2 members
1 members
13 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.