Jayalalithaa participate in central government function | மத்திய அரசு விழாவில் முதல்முறையாக ஜெயலலிதா பங்கேற்பு: மதுரைக்கு "துரந்தோ' ரயில் சேவையை துவக்கினார் - Jayalalitha | Dinamalar
பதிவு செய்த நாள் :
கருத்துகள் (51)  கருத்தை பதிவு செய்ய
எழுத்தின் அளவு:

சென்னையில் இருந்து, மதுரை மற்றும் திருவனந்தபுரத்திற்கு, அதிவேக, "துரந்தோ' ரயில் சேவையை, முதல்வர் ஜெயலலிதா நேற்று துவக்கி வைத்தார். இந்த முறை, ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, முதல் முறையாக, மத்திய அரசு விழாவில் முதல்வர் பங்கேற்றது, அரசியல் வட்டாரத்தில் திருப்பத்தை ஏற்படுத்துவதாகக் கருதப்படுகிறது.

சென்னை சென்ட்ரலில் இருந்து, கோவை, டில்லி - நிஜாமுதீன் உள்ளிட்ட பகுதிகளுக்கு, இடை நிற்காமல் செல்லும், துரந்தோ ரயில்கள், ஏற்கனவே இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சென்னை சென்ட்ரலிலிருந்து, மதுரை மற்றும் திருவனந்தபுரம் இடையே, துரந்தோ ரயில் சேவை துவக்க, தெற்கு ரயில்வே முடிவெடுத்தது.இந்த

ரயில் சேவையை, முதல்வர் ஜெயலலிதா, நேற்று மாலை, சென்னை சென்ட்ரலில் இருந்து துவக்கி வைத்தார். முதலில், பச்சை விளக்கு, அடுத்ததாக, பச்சைக் கொடியை, முதல்வர் அசைத்ததும், ரயில்கள் புறப்பட்டுச் சென்றன.நிகழ்ச்சியில், தமிழக அமைச்சர்கள், தெற்கு ரயில்வே பொது மேலாளர் விட்டல் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். அழைப்பிதழில், தமிழக எம்.பி., கனிமொழியின் பெயர் இடம் பெற்றிருந்தது; ஆனால், அவர் பங்கேற்கவில்லை.

தமிழகத்தை பொறுத்தவரை, மின்சாரப் பிரச்னை, காவிரி நீர்ப் பிரச்னை, பொது வினியோகத் திட்டத்திற்கு மண்ணெண்ணெய் தராதது மற்றும் சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு ஆகியவற்றில், மத்திய அரசை, தமிழக முதல்வர், கடுமையாக விமர்சித்துவருகிறார்.

இந்நிலையில், மத்திய அரசுடன் இணைந்து செயல்படும் வகையில், துரந்தோ ரயில் சேவை துவக்க விழாவில், முதல்வர் ஜெயலலிதா நேற்று பங்கேற்றார்.இதன் மூலம், அடுத்த லோக்சபா தேர்தலில், கூட்டணி திருப்பங்கள் ஏற்படலாம்; புது அணி உருவாகலாம் என, அரசியல் வட்டாரத்தில் பேச்சு எழுந்துள்ளது. விழாவில், முதல்வர் ஜெயலலிதா பங்கேற்றது, காங்கிரசார் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.

காங்கிரசுடன் இணக்கம்?
அகில இந்திய அளவில், செல்வாக்குள்ள மாநிலக் கட்சிகளுடன், கூட்டணி

Advertisement

வைக்க, காங்கிரஸ் முயற்சித்து வருகிறது. அந்த வகையில், தமிழகத்தில் அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைக்கும் முயற்சியில், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த மூத்த தலைவர் ஒருவர் சட்டசபை வைர விழாவில், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பங்கேற்பதற்கு முக்கிய காரணியாக, அந்த மூத்த தலைவர் இருந்துள்ளார் என்றும், அ.தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணிக்கு, தற்போது அவர் தூதராகவும் செயல்படுகிறார் என்ற பேச்சு, காங்கிரஸ் வட்டடாரத்தில் அடிபடுகிறது. அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைக்க, காங்கிரஸ் வர விரும்பினால், அது குறித்து பரிசீலிக்க, அ.தி.மு.க., தலைமை தயாராக இருப்பதாகக் கூறப்படுகிறது. அதே நேரத்தில், கூட்டணிக்காக, வலியச் சென்று பேச்சு நடத்த, அ.தி.மு.க., தலைமை விரும்பவில்லை என்றும் கூறப்படுகிறது.

- நமது நிருபர்-

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (51)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Babu. M - tirupur,இந்தியா
17-டிச-201216:47:56 IST Report Abuse
Babu. M நீங்க எதை வேண்டுமானாலும் விடுங்கள். ஆனால் காங்கிரஸ் கட்சி உடன் மட்டும் கூட்டணி வைக்க வேண்டாம். மக்கள் நங்கள் sethoom
Rate this:
Share this comment
Cancel
Muruganandam Palanisamy - Udumalpet,இந்தியா
16-டிச-201218:50:31 IST Report Abuse
Muruganandam Palanisamy தனது மாநிலத்திற்கான பொது திட்டத்தை தொடங்கி வைப்பது கடமையேயன்றி வேறுதுவும் இல்லை
Rate this:
Share this comment
Cancel
muthu Rajendran - chennai,இந்தியா
16-டிச-201218:13:13 IST Report Abuse
muthu Rajendran அப்ப காங்கிரசுக்கு அடுத்தவர் தோளில் ஏறி திருவிழா பார்ப்பதில் வாய்ப்பு தொடர்ந்து இருக்கு என்கிறீர்களா ?
Rate this:
Share this comment
Cancel
meekannan - Chennai,இந்தியா
16-டிச-201217:21:04 IST Report Abuse
meekannan ஏன் இந்த கருத்தை யாருமே பகிர்ந்து கொள்ளவில்லை என்பது புரியவில்லை, அதாவது விறைப்பாக இருந்தால் நாம் எதுவும் சாதிக்க முடியாது என்று உணர்ந்து எதுவாக காங்கிரஸ்சிடம் சரண்டர் ஆகிவருகிறார். இனி தமிழ்நாட்டிற்கு கரண்ட் கிடைக்கும், தண்ணி கிடைக்கும், நிதி கிடைக்கும். இப்போவாவது அம்மாவிற்கு புத்தி வந்ததே இனி நம்ம தமிழ்நாட்டிக்கு நல்ல காலம் தான்.
Rate this:
Share this comment
Cancel
Hari - Chennai,இந்தியா
16-டிச-201217:12:38 IST Report Abuse
Hari நடக்கும் ஆனால் நடக்காது
Rate this:
Share this comment
Cancel
Maria Lawrence - Manjampatti Post, Manaparai,இந்தியா
16-டிச-201216:46:48 IST Report Abuse
Maria Lawrence "நிற்காமல் செல்லும் துராந்தோ ரயில்" சென்னை to மதுரை 11 மணி நேரம் எடுக்கிறதா? கொடுமை வெகு எளிதில் 4 மணி நேரத்தில் அடைய செய்யலாம் (மாலை 6 to 10)
Rate this:
Share this comment
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
16-டிச-201215:31:53 IST Report Abuse
g.s,rajan இந்நேரம் யாருக்கோ வயத்துல புளியைக்கரைச்சுருக்கும் ஜி.எஸ்.ராஜன் சென்னை .
Rate this:
Share this comment
Sundeli Siththar - Hyderabad,இந்தியா
17-டிச-201200:49:24 IST Report Abuse
Sundeli Siththarஅறிவாலயம் பக்கம் வருவாரா.. இல்லை வயிறு சரியில்லை என்று வீட்டிலேயே முடங்கியிருப்பாரா என்று சந்தேகம் எழுப்புகிறீர்களா......
Rate this:
Share this comment
Cancel
CGS Kumar - Chennai,இந்தியா
16-டிச-201214:48:50 IST Report Abuse
CGS Kumar முதல்வர் ஜெயா மத்திய அரசு நிகழ்சிகளில் கலந்து கொள்வது ஆரோக்கியமான விஷயம். பாராட்ட வேண்டும். மத்திய அரசுடன் இணக்கமான சமயத்தில் சாதிக்க கொள்ள வேண்டும். கொள்கை அளவில் சண்டை போடாலாம். அதுதான் ராஜதந்திரம். பீகார் முதல்வர் நல்ல எடுத்துகாட்டு. பா.ஜ.க கூட்டணியில் இருந்தாலும், ஜனாதிபதி தேர்தலில் பிரனாபை ஆதரித்து தான் மாநிலத்துக்கு 20,000 கோடி வாங்கி கொண்டார். புத்திசாலித்தனம்...முதல்வர் ஜெயா அந்த வழியில் சென்றால் பாராட்டுவோம்.
Rate this:
Share this comment
Cancel
Abdul Khader - Riyadh,சவுதி அரேபியா
16-டிச-201213:54:32 IST Report Abuse
Abdul Khader As I said earlier, every movements of Tamil Nadu Chief Minister who is the intellectual personality, is some constructive meaning. To win on Central election, there is no need for ADMK to approach Congress for alliance, instead, Congress should approach ADMK for alliance because ADMK Chief is a IRON LADY. I wish her to become the PRIME MINISTER OF INDIA.
Rate this:
Share this comment
Cancel
Shaikh Miyakkhan - jeddah,சவுதி அரேபியா
16-டிச-201213:01:45 IST Report Abuse
Shaikh Miyakkhan மத்திய அரசின் விழாவாக இருந்தாலும் இந்த மாநிலத்தின் முதல்வர் மக்கள் பயன் படகூடிய விழாவில் கலந்து கொள்வதை கூட்டணி அச்சாரம் என்று சொல்லுவது ஏற்பதுடையது அல்ல. மேலும் அதிமுக வெற்றி பெற்றதுமே முதல்வர் அம்மா அவர்கள் தெள்ள தெளிவா சொன்னார்கள் மத்திய அரசுடன் மோதல் போக்கை கடை பிடிக்க மாட்டான் என்று சொன்னதை நினைவு கூர்ந்து பார்க்க வேண்டும். ஆனால் மத்திய அரசு மண்ணெண்ணெய்குறைப்பு மத்திய தொகுப்பில் இருந்து மின்சாரம் கொடுக்காதது இது எல்லாம் மத்திய அரசு கூட்டணி தர்மம் என்ற காரணத்தால் சில நிர்பந்தவாதிகளால் முட்டு கட்டை போடுவதால் வழங்குவதை குறைக்கிறது. அதானல் அது எல்லாம் மத்திய அரசு செய்கின்ற தவறு.ஆனால் அதை எல்லாம் பொருட் படுத்தாமல் மக்களுக்கு பயன் படகூடிய விழாவில் பங்கேற்றது பாராட்டகூடியது .இவர் கலந்து கொண்டதால் அங்கே ஒருவர்க்கு தூக்கம் இல்லாமல் புலம்ப போகிறார் . எப்படி இந்த அம்மாவை கூப்பிட்டு விழா நடத்தலாம் என்று புலாகிதம் அடைய போகிறார் .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.