ஈரோடு: காவிரி நடுவர் மன்றம் வெளியிட்ட இறுதி தீர்ப்பை அரசிதழில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அறிவிப்பை இந்திய மக்கள் இயக்கம் வரவேற்றுள்ளது.
இந்திய மக்கள் இயக்க ஆலோசனை கூட்டம் ஈரோட்டில் நடந்தது. கள அமைப்பாளர் நல்லசாமி தலைமை வகித்தார்.கூட்டத்தில், 2007ல் காவிரி நடுவர் மன்றம் வெளியிட்ட இறுதி தீர்ப்பை டிசம்பர் இறுதிக்குள் அரசிதழில் வெளியிட நடவடிக்கை மேற்கொள்ளப்படும், என்று மத்திய நீர்வளத்துறை அறிவித்துள்ளது. அதன்பின், காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் ஒழுங்குமுறை குழு உருவாக்கப்படும். இவை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும். பிரதமர் தலைமையிலான காவிரி ஆணையம் மற்றும் காவிரி கண்காணிப்பு குழு கலைக்கப்படும். எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவை இந்திய மக்கள் இயக்கம் வரவேற்கிறது.காவிரி பிரச்னையில் டிசம்பர் முடிய தமிழகத்துக்கு, 12 டி.எம்.சி., நீர் திறந்து விட காவிரி கண்காணிப்புக்குழு உத்தரவிட்டுள்ளது. இதை இயக்கம் வரவேற்கிறது. பிறப்பிக்கப்பட்டிருக்கும் ஆணை, உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும். தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் பயிரை காயவைப்பதாக இருக்கும். பயிர்கள் காய்ந்த பிறகு தண்ணீர் திறப்பதால், பெரியளவிலான பயன் ஏற்படப்போவதில்லை என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.ஈரோடு மாவட்ட அமைப்பாளர்கள் கோபிநாத், தங்கராசு, ராமசாமி, தமிழக விவசாயிகள் சங்க தலைவர் ராமசாமி, தமிழ்நாடு கள் இயக்க மாநில அமைப்பாளர்கள் ராமசாமி, கதிரேசன் உள்பட பலர் பங்கேற்றனர்
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.