புதுடில்லி: புதுடில்லியில் வசிக்கும் ஏழை மக்களின் மாத தேவையை சமாளிக்க ரூ.600 மட்டும் போதும் என மாநில முதல்வர் ஷீலா தீட்ஷித் தெரிவித்துள்ளார்.
பல்வேறு திட்டங்களின் கீழ் அரசால் வழங்கப்படும் பணப் பலன்கள் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தும் திட்டம் வரும் ஒன்றாம் தேதி முதல் அமலாக உள்ளது. அதன் முன்னோடியாக புதுடில்லியி்ல் உள்ள தியாகராஜா மைதானத்தில் அன்னஸ்ரீ உணவுதிட்டம் அறிமுகப்படுத்தும் விழா நடைபெற்றது. விழாவில் பேசிய மாநில முதல்வர் ஷீலா தீட்ஷித் நான்கு பேர் கொண்ட ஏழை குடும்பம் ஒன்றிற்கான ஒரு மாத உணவுத்தேவையை சமாளிக்க ரொட்டி ,பருப்பு போன்றவை வாங்குவதற்கு ரூ.600 போதுமானது என தெரிவித்துள்ளார்.
முதல்வர் கருத்துக்கு எதிர்ப்பு:
மாநில முதல்வர் தெரிவித்துள்ள இந்த கருத்துக்கு புதுடில்லி நகர பெண்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேற்கு டில்லியை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில் நோய், மற்றும் தங்குமிடம், பற்றாக்குறைகளை சமாளிக்க போதுமானது அல்ல என தெரிவித்தனர். மற்றொருவர் கூறுகையில் தற்போதைய விலைவாசி நிலவரப்படி ஏழு பேர் கொண்ட குடும்பத்திற்கான உணவுத்தேவையை சமாளிக்க குறைந்தபட்சம் ரூ.3 ஆயிரம் தேவைப்படுகிறது. இந்நிலையி்ல் அரசு தரும் 600 ரூபாயில் எப்படி நிர்வகிக்க முடியும் என கூறினார்.
சர்ச்சையில் தலைவர்கள் :
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திட்டக்கமிஷன் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதன்படி கிராமங்களில் வசிக்கும் ஒரு குடிமகன் நாள் ஒன்றுக்கு 22 ரூபாயும், அதுவே நகர்ப்புறமாக இருந்தால் குறிப்பிட்ட குடிமகன் நாளொன்றுக்கு 28 ரூபாயும் சம்பாதிக்கும் பட்சத்தில் அவர்கள் ஏழைகளல்ல எனக்கூறப்பட்டிருந்தது. இவர்கள் எல்லாம் இனிமேல் அரசாங்கத்தில் வரையறுக்கப்பட்ட வறுமைக்கோட்டிற்கு கீழ் வசிப்போராக கருதப்பட மாட்டார்கள் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. இதனால் திட்டக்குழு தலைவர் அலுவாலியா சர்ச்சையில் சிக்கினார். தற்போது புதுடில்லி மாநில முதல்வரும் இது போன்ற கருத்தையே வலியுறுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
மக்களின் வரி பணத்தில் ஆட்சி செய்துகொண்டு, நீங்களே முடிவெடுத்து, 600 ரூபாயில் மாத செலவு என்றால், அந்த 4 பேரு கொண்ட குடும்பம் பாராளுமன்றத்தில் உள்ள கான்டீன் ல தான் சாப்பிடணும்.. என்ன ஆச்சர்யம்னா விலைவாசிய பத்தி தெரியாத இந்த அம்மா எப்படி CM அனான்கரதுதான்.. உங்களிடம் யாரும் பணம்(பிச்ச) கேட்கவில்ல, புதுசு, புதுசா பிரட்சனைய(காஸ், அந்நிய முதலீடு, பெட்ரோல், விலைவாசி) கொண்டுவராதேனு சொல்லுறோம்.
நான்கு உறுப்பினர்கள் கொண்ட ஒரு ஏழைக் குடும்பத்தில் மாதம் ரூ 600 அதாவது தலைக்கு நாள் ஒன்றுக்கு ரூ 5 ல் நான்கு அல்லது ஐந்து முறைகள் 100 மிலி தேநீர் (சாய் பானி) / 200 மிலி நீராரம் / ஒரு முறை நான்கு ரொட்டிகளும் பருப்பும் (தால்) / ஒரு முறை அரை வயிறு சோறு ... இதுபோல மட்டும் சாப்பிடமுடியும். இவ்வாறு மட்டுமே எத்தனையோ நாட்கள் உண்டு ஆனால் உழைத்துத் தேயும் ஏழை மக்கள், சந்ததிக்கும் அப்படியே மடிவதேல்லாம், ஷீலா போன்ற ஆயிரக்கணக்கானோர் நாட்டின் வளமையைக் கொள்ளையடிப்பதால் தான். ஒவ்வொரு அரசியல் உறுப்பினரும் ஒரு நாள் ஒரு ஸ்லம் குடிசையில் மாதம் ஒரு நாளேனும் தனியாகத் தானே உழைத்து வாழ்ந்தால் தான் அவர் /அவள், பொறுப்பிலும் கட்சியிலும் தொடரலாம் என்று நடைமுறைப்படுத்தும் கட்சிக்கே இனி மக்கள் வாக்களிக்க வேண்டும்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.