Jaitley confident of BJP returning to power in Gujarat | குஜராத் வெற்றி யாருக்கு ? களை கட்டும் சூதாட்டம் | Dinamalar
Advertisement
குஜராத் வெற்றி யாருக்கு ? களை கட்டும் சூதாட்டம்
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

புதுடில்லி: குஜராத் சட்டசபை தேர்தலில் பா.ஜ. அமோக வெற்றி பெறும், என்றும் ஆளும் பா.ஜ., மற்றும் காங்கிரஸ், எத்தனை இடங்களை பிடிக்கும் என பணம் செலுத்தி சூதாட்டம் பெட் கட்ட துவங்கியுள்ளனர். இதே நேரத்தில் இங்கு மீண்டும் மோடியே முதல்வராவார் என பா.ஜ. மூத்த தலைவர் அருண்ஜேட்லி கூறியுள்ளார்.
குஜராத் சட்டசபைக்கு இரு கட்டங்களாக தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டிருந்தது. முதல் கட்ட தேர்தல் கடந்த 13-ம் தேதி நடந்தது. இரண்டாம் கட்டமாக நாளை (17-ம் தேதி ) நடக்க உள்ளது. நேற்றுடன் பிரசாரம் ஓய்ந்தது.இதில் பா.ஜ., காங்., ஜி.பி.பி. (குஜராத் பரிவர்த்தன் கட்சி) என மும்முனைப்போட்டி நிலவுகிறது. எனினும் பா.ஜ.வின் செல்வாக்குமிக்க தலைவரான முதல்வர் நரேந்திர மோடிக்கு வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

மீண்டும் மோடி தான் முதல்வர்:

இந்நிலையில் பா.ஜ. மூத்த தலைவரும், பார்லிமென்ட் ராஜ்யசபா எதிர்க்கட்சித்தலைவருமான அருண்ஜேட்லி நிருபர்களிடம் கூறியதாவது; கடந்த 10 வருடங்களாக குஜராத்தில் நல்லாட்சி நடத்தி வரும் முதல்வர் நரேந்திரமோடி குறித்து, குஜராத் மக்களிடம் பெய்யான தகவல்களை காங். பரப்பி வாக்காளர்களை குழுப்புகிறது.

அதனை குஜராத் மக்கள் நம்பமாட்டார்கள். தேர்தல் முடிவுகள் பா.ஜ.விற்கு தான் சாதமாக அமையும். மீண்டும் பா.ஜ. அமோக வெற்றி பெற்று முதல்வராக நரேந்திரமோடி வருவார். மத்தியில் நடக்கும் காங். ஆட்சியால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.இது 20-ம் தேதி வெளிவரப்போகும் இமாச்சல், குஜராத் சட்டசபை தேர்தல் முடிவுகளில் தெரியும். முந்தைய தேர்தலை காட்டிலும் இம்முறை குஜராத்தில் 7 சதவீதம் கூடுதலாக பதிவாகியுள்ளது முதற்கட்ட வாக்குப்பதிவில் ‌தெரியவந்துள்ளது.இதில் பெரும்பான்மை வாக்குகள் பா.ஜ.விற்கு தான் பதிவாகியுள்ளது. இதன் மூலம் பா.ஜ.வின் வெற்றி உறுதியாகியுள்ளது. மீண்டும் மோடி முதல்வராக பதவி ஏற்பார் என்றார்.

இதற்கிடையில் அங்குள்ள வாக்காளர்கள் யாருக்கு எத்தனை சீட் கிடைக்கும் என 100 முதல் ஆயிரம் வ‌ரை பெட் கட்ட துவங்கியுள்ளனர். அவரவர் தகுதிக்கு ஏற்றால் போல பெட் கட்டி வருகின்றனர். இது மாநிலம் முழுவதும் பரவலாக பரவி வருகின்றன.

Advertisement
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (14)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Arivu Azhagan - Texas,யூ.எஸ்.ஏ
17-டிச-201201:40:05 IST Report Abuse
Arivu Azhagan பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்ட மோடி, எதற்கும் இப்போதே தன்னை ஒரு முதல்வராக முடி சூட்டி அலங்கரித்துக்கொண்டு போட்டோ ஒன்று எடுத்து வைத்துக்கொள்வது நல்லது. வரும் 20 -ஆம் தேதி ஓட்டு எண்ணிக்கைக்கு மறுநாள், அதாவது 21-டிசம்பர்-2012 -இல் உலகம் அழியப்போவதாக "மாயன்" கலண்டர் மூலம் தெரியவருவதாக செய்தி ஒன்று உலாவருகிறது...ஒருவேளை இது உண்மையாக இருக்குமானால், போட்டோ எடுப்பதற்கு போட்டோகிராபரும், செய்தி வெளியிடுவதற்கு பத்திரிகையாளரும் அப்போது இருக்கமாட்டார்கள்...(பின்குறிப்பு: இந்த உலகமே அழிந்தாலும் மோடி உயிருடன் இருப்பார் என்பதுதானே நிதர்சனமான உண்மை???)
Rate this:
6 members
0 members
9 members
Share this comment
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
17-டிச-201213:05:23 IST Report Abuse
Nallavan Nallavan"அறிவு பூர்வமான" கருத்துதான்...
Rate this:
0 members
0 members
3 members
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
16-டிச-201223:50:18 IST Report Abuse
Pugazh V தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தர மறுக்கும் இன துரோகிகள் கட்சியை சேர்ந்த மோடிக்கு வெற்றி என்று இங்கிருந்து காவடி தூக்கும் இன துரோகிகளுக்கு விடிவே இல்லையா? வெட்கமோ, இன உணர்வோ இல்லையா? மோடி ஜெயித்தால் என் இன விவசாயிகளுக்கு தண்ணீர் திறந்து விடப் படுமா?
Rate this:
27 members
0 members
6 members
Share this comment
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
16-டிச-201223:03:35 IST Report Abuse
g.s,rajan இதில் என்ன சந்தேகம் கட்டாயம் மோடிக்குதான் ,என்ன செய்துவிட்டார்கள் அனைத்து இந்திய இந்திரா காங்கிரஸ் கட்சியினர் குஜராத்துக்கு ?
Rate this:
5 members
0 members
15 members
Share this comment
Cancel
Thangairaja - tcmtnland,இந்தியா
16-டிச-201221:11:27 IST Report Abuse
Thangairaja பெற கட்டுமளவுக்கு போட்டி இருக்கா....அப்படீன்னா......?
Rate this:
0 members
0 members
5 members
Share this comment
nandaindia - Vadodara,இந்தியா
17-டிச-201210:03:47 IST Report Abuse
nandaindiaஅப்படின்னா காங்கிரஸ் இந்த முறையும் காலி, தேறாதுன்னு அர்த்தம். புரிந்ததா ???...
Rate this:
0 members
0 members
8 members
Share this comment
Cancel
தமிழ் குடிமகன் - போயஸ்கார்டன் ,இத்தாலி
16-டிச-201221:03:00 IST Report Abuse
தமிழ் குடிமகன் அடுத்த பிரதமர் மோடிதான். அதில் சந்தேகம் இல்லை .
Rate this:
3 members
0 members
12 members
Share this comment
Cancel
iravi - Chennai,இந்தியா
16-டிச-201220:09:29 IST Report Abuse
iravi அதிகப்படியான 7 சதவீத வாக்குகளில் பெரும்பான்மை கிடைத்து வெற்றி பெரும் மோடி (மஸ்தான்) பெயரிலும் சூதாட்டம் களை கட்டிவிட்டதல்லவா, மக்களுக்கு இனி என்ன கவலை
Rate this:
9 members
0 members
1 members
Share this comment
Cancel
villupuram jeevithan - villupuram,இந்தியா
16-டிச-201219:59:15 IST Report Abuse
villupuram jeevithan There are people who say : Once is a mistake, twice is an oversight, thrice is just stupidity.
Rate this:
11 members
0 members
0 members
Share this comment
மதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ
17-டிச-201201:29:51 IST Report Abuse
மதுரை விருமாண்டிதமிழ்நாட்டுக்கு ரொம்ப பொருந்தும்.. முட்டாள் ஜனங்கள்......
Rate this:
2 members
0 members
9 members
Share this comment
Cancel
Mohamed Nawaz - Sakaka,சவுதி அரேபியா
16-டிச-201219:41:37 IST Report Abuse
Mohamed Nawaz மோதியே வெற்றி பெறட்டும். இல்லையென்றால் மீண்டும் அங்கு கலவரங்கள் வெடிக்கும். மக்கள் பாதிக்க படுவர்.
Rate this:
13 members
0 members
5 members
Share this comment
Cancel
G.Prabakaran - Chennai,இந்தியா
16-டிச-201217:23:45 IST Report Abuse
G.Prabakaran நிச்சயம் மோடிக்கு தான் வெற்றி
Rate this:
35 members
2 members
33 members
Share this comment
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
17-டிச-201200:17:47 IST Report Abuse
Nallavan Nallavanசந்தேகமென்ன?...
Rate this:
0 members
0 members
7 members
Share this comment
மதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ
17-டிச-201201:33:00 IST Report Abuse
மதுரை விருமாண்டிவெற்றி மோடிக்குத் தான்.. ஆனால், பிஜேபி அதை தன் வெற்றியாக எடுத்துக் கொண்டால் அதை விட முட்டாள்தனம் எதுவும் இருக்காது.. மோடி ஒரு மைக்ரோ கிளைமேட்.. இந்தியாவில் ஒரு தேசியக் கட்சியும் கிடையாது.. அது தான் நிதர்சனம்.. எல்லாம் கூட்டணி, கூட்டுக்கொள்ளை தான்......
Rate this:
4 members
1 members
4 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்