who is fourth | தி.மு.க.,வுக்கு நான்காவதுதலைமுறை வாரிசு தயார் ?| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

தி.மு.க.,வுக்கு நான்காவதுதலைமுறை வாரிசு தயார் ?

Added : டிச 16, 2012 | கருத்துகள் (5)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

கரூர்:தி.மு.க., வுக்கு, கருணாநிதி வரிசையில், அவரது கொள்ளு பேரனை, நான்காவது தலைமுறை வாரிசாக ஏற்றுக் கொண்டு, கரூரில் போஸ்டர் ஒட்டி உள்ளனர்.கரூரில், எம்.பி., தொகுதிக்கான செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம், நடந்தது. இதில், பங்கேற்க வந்த, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலினை வரவேற்று, கரூர் நகர் முழுவதும், "ப்ளக்ஸ்' பேனர்களை, பல வாசகங்கள் மற்றும் போட்டோக்களுடன் வைத்துள்ளனர். அதில், ஒட்டப்பட்டுள்ள ஒரு போஸ்டர் பொதுமக்கள் மட்டுமல்ல, தி.மு.க., வினரையும் வெகுவாக கவர்ந்தது.வழக்கமாக, தி.மு.க., சார்பில், ஈ.வெ.ரா., அண்ணா துரை, கருணாநிதி ஆகியோரின் படங்கள் மட்டும் வரிசையாக, இருக்கும் வகையில் அச்சடிக்கப்பட்டு ஒட்டப்படும். கடந்த சில ஆண்டுகளாக, கருணாநிதிக்கு அடுத்தப்படியாக, மதுரை உள்ளிட்ட, தென்மாவட்டங்களில் மத்திய அமைச்சர் அழகரி படமும், சென்னை உள்ளிட்ட, வட மாவட்டங்களில் ஸ்டாலின் படமும் இடம் பெற்றிருந்தன.

இந்நிலையில், கரூரில் தி.மு.க., பொருளாளர் ஸ்டாலினை வரவேற்று, தி.மு.க., மாணவரணி சார்பில், ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில், ஈ.வெ.ரா, அண்ணாதுரை ஆகியோரது படம் இல்லாமல், முதலில் ஸ்டாலின், இரண்டாவது உதயநிதி ஸ்டாலின், மூன்றாவதாக கருணாநிதியின் கொள்ளுப்பேரன் இன்பா (உதயநிதி மகன்), ஒரு ஓரத்தில் கருணாநிதி படம் அச்சடிக்கப்பட்டுள்ளது.தற்போது, தி.மு.க., பொருளாராக உள்ள ஸ்டாலினை, தி.மு.க., வின் தலைவராக, அரசியலில் கருணாநிதியின் வாரிசாக முறைப்படி அறிவிக்காத நிலையில், அரசியலில், இன்னும், முழுமையாக ஈடுபடாத, ஸ்டாலின் மகன் உதயநிதி, ஸ்டாலினின் பேரன் இன்பா, ஆகியோரது படங்கள் அச்சடிக்கப்பட்ட போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.போஸ்டரை பார்த்த, தி.மு.க., வினர், பலர் வியப்படைந்தனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Berlioz Lyautey - paris,பிரான்ஸ்
17-டிச-201216:23:18 IST Report Abuse
Berlioz Lyautey மன்னர் ஆட்சியினை வென்றோம் வெள்ளையனை வெளியேற வைத்தோம். இந்த குடும்ப ஆட்சிக்கு என்று ஒரு முடிவு காண்போம் என்பது அனைத்து இந்தியர்களின் கையில்தான் இருக்கிறது. விழிப்பு விரைவில் வந்தால் சரி. கடவுள்தான் இந்தியாவை காப்பாற்ற வேண்டும்
Rate this:
Share this comment
Cancel
villupuram jeevithan - villupuram,இந்தியா
17-டிச-201213:30:56 IST Report Abuse
villupuram jeevithan நாலாவது தலைமுறை தாயாராகி என்ன பிரயோசனம்? வழி கிடைத்தால் தானே? முதலில் அதற்கு முயற்சியுங்கள்.
Rate this:
Share this comment
Cancel
17-டிச-201207:52:07 IST Report Abuse
அறிவாலயம் c / o போயஸ் இவங்க இதுவும் செய்வாங்க இன்னமும் செய்வாங்க
Rate this:
Share this comment
Cancel
nimmi - Dindigul,இந்தியா
17-டிச-201206:18:59 IST Report Abuse
nimmi இந்திய நாட்டின் குடிமக்களே தினமலர் இந்த இதழில் வெளியாகியுள்ள இரண்டு செய்திகளை குறிப்பாக பாருங்கள். ஒன்று, இந்திய திருநாட்டில் அரசு சார்பில் நிறைவேற்றப்படும் திட்டங்களுக்கு, ஜவஹர்லால் நேரு, இந்திராகாந்தி, ராஜீவ் காந்தி ஆகியோரது பெயர்கள். இதைப்படித்த ஒரு வாசக நண்பர், ராகுல் பெயரை சேர்க்கவில்லையே என ஆச்சர்யம் தெரிவித்திருந்தார். கரூரிலும் அதே கதைதான்.வாரிசு மோகம் கொடிகட்டி பறக்கிறது. கரூர் தி.மு.க. அரசியலை சுமார் 20 ஆண்டு காலமாக பார்த்து வருகிறோம். கொங்கு வேளாள சமுதாய மக்கள் கணிசமாக வாழும் இம்மாவட்டத்தில், தி.மு.க. மட்டும் பரமத்தி சண்முகம் (இசை வேளாளர் ), கே.சி.பழனிசாமி (24 மனை தெலுங்கு செட்டியார்), நன்னியூர் ராஜேந்திரன் (செம்படவர்) போன்ற சமுதாயத்தை சேர்ந்தவர்களை முன்னிலைப்படுத்தி அரசியல் செய்கிறார்கள். ஆனால் அ.தி.மு.க., காங்கிரஸ் போன்ற கட்சிகள் அப்படியல்ல. அவர்களின் அரசியல் எதார்த்த அரசியல். கொங்கு வேளாள சமுதாயத்தினர் பெரும்பாலும் எம்.ஜி.ஆர் மற்றும் காங்கிரஸ் ஆதரவாளர்கள். தி.மு.க. வில் இருந்தாலும் அவர்கள் ஒரு போதும் கருணாநிதி குடும்பத்திற்கு அளவுக்கு மீறி துதி பாடமாட்டார்கள். அதனை மனதில் கொண்டுதான், தி.மு.க. கரூர் மாவட்டத்தில் மாற்று அரசியல் செய்து வருகிறது. பிறக்கப்போகும் 'இன்பா' வின் மகனுக்கு கூட இவர்களால் போஸ்டர் அடிக்க முடியும்.
Rate this:
Share this comment
Cancel
Aboobacker Siddeeq - Singapore,சிங்கப்பூர்
17-டிச-201205:43:04 IST Report Abuse
Aboobacker Siddeeq உண்மையை விளம்பரப்படுத்தி இருக்கிறார்கள்.... இதில் என்ன தவறு? தி.மு.க.வின் தலைவர் பதவியை ஸ்டாலினுக்கு இன்று கொடுக்கிறார், நாளை கொடுக்கிறார், பிறந்தநாளின் போது அறிவிப்பார் என இழுத்துக்கொண்டே போனால் எப்போது தான் நடக்கும்? தொண்டர்களும் பொறுமையை இழந்து அவர்களே ஸ்டாலினுக்கு தலைவர் பதவியை கொடுத்து விட்டனர்.... இனி அஞ்சா நெஞ்சர் பக்கமிருந்தும், கனியிடமிருந்தும் எவ்வாறான போஸ்டர் வருகிறது என பார்ப்போம்....இம்மூவரைத்தவிர வேறு யாரேனும் களத்தில் இருந்தாலும் ஆச்ச்சரியப்படுவதர்க்கில்லை..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை