Advertisement
பதிவு செய்த நாள் : டிசம்பர் 16,2012,23:37 IST
கருத்துகள் (13)  கருத்தை பதிவு செய்ய
எழுத்தின் அளவு:

புதுடில்லி: அரசுப் பணி பதவி உயர்வில், தாழ்த்தப்பட்டோர் மற்றும் மலைவாழ் பழங்குடியினருக்கு, இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதாவை நிறைவேற்றுவதில், மாயாவதிக்கும், முலாயம் சிங் யாதவுக்கும் இடையே ஏற்பட்ட மோதலுக்கு முற்றுப் புள்ளி வைக்க, மத்திய அரசு வியூகம் வகுத்துள்ளது.

""வரும், 20ம் தேதிக்குள், லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில், இந்த மசோதா நிறைவேற்றப்படும்,'' என, மத்திய அமைச்சர் கமல் நாத் அறிவித்துள்ளார்.
"அரசுப் பணி பதவி உயர்வுகளில், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு, (எஸ்.சி., மற்றும் எஸ்.டி.,) இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும். இந்த மசோதாவை, பார்லிமென்டில் நிறைவேற்ற வேண்டும்' என, மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி, வலியுறுத்தி வருகிறது.

முலாயம் சிங் யாதவின் சமாஜ்வாதி கட்சி, இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில், இம்மாதம், 13ம் தேதி, இந்த மசோதா, ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்பட்டது. இதை எதிர்த்து, சமாஜ்வாதி கட்சி எம்.பி.,க் கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். அதனால், அந்தக் கட்சியை சேர்ந்த, இரண்டு எம்.பி.,க்கள், சபையிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

மிரட்டல்: இந்த விவகாரங்களால், ஆத்திரம் அடைந்துள்ள முலாயம் சிங் யாதவ், "பதவி உயர்வில் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றினால், மத்திய அரசுக்கு, வெளியிலிருந்து அளித்து வரும் ஆதரவை, வாபஸ் பெறுவது குறித்து பரிசீலிப்போம்' என, பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளார்.அதேநேரத்தில், மாயாவதியும், "மசோதாவை நிறைவேற்றியே ஆக வேண்டும்' என, பிடிவாதமாக உள்ளார். இந்த இரண்டு கட்சிகளுமே, காங்கிரஸ் தலைமையிலான, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசை வெளியிலிருந்து ஆதரிப்பதால், இரண்டு கட்சிகளையும் பகைத்துக் கொள்ள முடியாத, தர்ம சங்கடமான சூழல், காங்கிரசுக்கு ஏற்பட்டுள்ளது.

சரிக்கட்ட வியூகம்: இதையடுத்து, மாயாவதியையும், முலாயமையும் சரிக்கட்ட, காங்கிரஸ் மேலிட தலைவர்கள், தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். பிரதான எதிர்க்கட்சியான, பா.ஜ., பதவி உயர்வு மசோதாவை, சில திருத்தங்களுடன், பார்லிமென்டில் நிறைவேற்றுவதற்கு, பச்சைக்

கொடி காட்டி விட்டது.பா.ஜ., தலைமையிலான, தே.ஜ., கூட்டணியில் அங்கம் வகிக்கும், ஐக்கிய ஜனதா தளம் கட்சியும், மசோதாவை ஆதரிக்கப் போவதாக, அந்த கட்சியின் தலைவரும், பீகார் முதல்வருமான, நிதிஷ் குமார் அறிவித்து விட்டார். இதனால், மசோதாவை எப்படியாவது நிறைவேற்றியே தீருவது என்ற விஷயத்தில், மத்திய அரசு உறுதியாகஉள்ளது.

இது தொடர்பாக, மாயாவதியுடனும், முலாயம் சிங் யாதவுடனும், காங்கிரஸ் தலைவர்கள், தொடர்ந்து பேச்சு நடத்தி வருகின்றனர். மசோதாவை நிறைவேற்றுவதில், மத்திய அரசு ஆர்வமாக இருப்பதால், மாயாவதி தரப்பு, உற்சாகமடைந்து உள்ளது. "மத்திய அரசுக்கு எந்த நெருக்கடியையும் ஏற்படுத்தக் கூடாது' என்ற முடிவுக்கு, பகுஜன் சமாஜ் கட்சியினர் வந்து விட்டனர்.சொத்து குவிப்பு வழக்கு: இதற்கிடையே, முலாயம் சிங் யாதவை சரிக்கட்டுவதற்கும், மறைமுக முயற்சிகள் அரங்கேறி வருகின்றன.

முலாயம் சிங் யாதவுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கை, தொடர்ந்து விசாரிக்க, சி.பி.ஐ.,க்கு, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு உள்ளதால், "மத்திய அரசுக்கு எதிரான நடவடிக்கைகளை அடக்கி வாசிக்கலாமா' என, முலாயம் சிங் யாதவ் தரப்பு கருதுவதாக, அக்கட்சி வட்டாரங்கள் கருதுகின்றன.

20ம் தேதிக்குள்: இதற்கிடையே, காங்., மூத்த தலைவரும், பார்லிமென்ட் விவகாரத் துறை அமைச்சருமான, கமல் நாத் நேற்று கூறுகையில், ""பதவி உயர்வு மசோதாவை, எந்தவிதப் பிரச்னையும் இல்லாமல், ராஜ்யசபாவிலும், லோக்சபாவிலும், வரும், 20ம் தேதிக்குள் நிறைவேற்றி விடுவோம். இதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன,'' என்றார்.

இந்நிலையில், இரண்டு நாள் விடுமுறைக்கு பின், பார்லிமென்ட், இன்று மீண்டும் கூடுகிறது.

Advertisement

ராஜ்யசபாவில், பதவி உயர்வு மசோதா தொடர்பாக, இன்று ஓட்டெடுப்பு நடக்கவும் வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது."ராஜ்யசபாவில், மசோதாவெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டால், லோக்சபாவிலும், பெரிய அளவிலான எதிர்ப்பு இன்றி, மசோதா நிறைவேறும்' என, டில்லி அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.

பூச்சாண்டி வேலை பா.ஜ., கிண்டல்:பா.ஜ., துணை தலைவர் முக்தார் அப்பாஸ் நக்வி கூறியதாவது: "பதவி உயர்வில், இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றினால், மத்திய அரசுக்கு, வெளியிலிருந்து அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெறுவோம்' என, முலாயம் சிங் , மிரட்டல் விடுத்துள்ளார். அரசியலில் பூச்சாண்டி காட்டுவதற்காக, இதுபோன்ற மிரட்டலை, அவர் விடுத்துள்ளார்.பகுஜன் சமாஜ் கட்சியும், சமாஜ்வாதி கட்சியும், காங்கிரசுடன், மறைமுகமாகக் கைகோர்த்து செயல்படுகின்றன. ஆனால், வெளியில், காங்கிரசை எதிர்ப்பது போல் நடிக்கின்றன. பல்வேறு சந்தர்ப்பங்களில், இந்த இரண்டு கட்சிகளுமே, காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசை, காப்பாற்றியுள்ளன என்பது, அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். இவ்வாறு, முக்தார் அப்பாஸ் நக்வி கூறினார்.




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (13)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nandu - Chennai,இந்தியா
17-டிச-201210:27:27 IST Report Abuse
Nandu இந்த இரண்டு கட்சிகளும் மக்களைப் பணயம் வைத்து கண்ணாமூச்சி ஆடுகிரவர்கலென்று யாருக்குத்தான் தெரியாது... இன்று விருந்துண்பார்கள், நாளை விருந்துண்டவர்களை எதிர்த்து போராட்டம் நடத்துவார்கள், மறுநாள் மீண்டும் விருந்துண்பார்கள். நம்மூருக்குள்ளும் இப்படி ஒரு ஆள் இருக்கிறார்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
Swaminathan Nath - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
17-டிச-201209:06:29 IST Report Abuse
Swaminathan Nath தாழ்த்தப்பட்ட மக்கள் முன்னுக்கு வரவேண்டும் , அரசாங்கம் அவர்களுக்கு உதவி செய்யவேண்டும், ,,, ஆனால் Pramotion தகுதி அடிபடையில் கொடுத்தால்தான் அந்த பதவிக்கு அது அழகு. ... நாட்டுக்கும் நல்லது.
Rate this:
0 members
0 members
3 members
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
17-டிச-201208:58:13 IST Report Abuse
Pugazh V வேளையில் சேர்ந்த நாள் முதல் , மேல் ஜாதி பாஸ்களால் மற்றும் சக அலுவலர்களால், ஒதுக்கப்பட்டும், குறைவாக மதிப்பிடப்பட்டும், மன அழுத்தத்தில் உழல்வது தான் தாழ்த்தப்பட்ட பிற்ப்படுத்தப்பட்ட பல அலுவலர்களின் நிலை. எப்படியாவது செயல்திறன் மதிப்பீட்டில் ( Performance evaluation) குறைவாக மதிப்பெண் அளித்து, ப்ரமோஷன் வராமல் செய்துகொண்டே இருப்பார்கள். இது போல இட ஒதுக்கீடு வர வேண்டும். தாழ்த்தப்பட்ட பிற்ப்படுத்தப்பட்ட அலுவலர்களுக்கு. இதில் மாற்றுக் கருத்துக்கு இடமே இல்லை. இந்த மசோதாவை ஆதரிப்பது, எதிர்ப்பது போன்ற அரசியல் சித்து விளையாட்டுக்கள் பற்றிப் பேச விரும்பவில்லை. இந்த பதவி உயர்வுக்கான இட ஒதுக்கீடு அவசியம் சட்டமாக்கப் பட வேண்டும் தான்.
Rate this:
2 members
0 members
0 members
Share this comment
Cancel
T.R.Radhakrishnan - Nagpur,இந்தியா
17-டிச-201206:47:18 IST Report Abuse
T.R.Radhakrishnan நாட்டில் அனைத்து அரசு சார்ந்த வேலை வாய்ப்புகளையும் இட ஒதுக்கீடு கீழ் வருபவர்களுக்கே என்று ஒதுக்கி விடலாம். பொதுப் பிரிவில் வருபவர்களுக்கு விரல் சூப்பும் வித்தையை கற்றுக் கொடுக்கலாம். நாடு நல்லா உருப்படும்.
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
Cancel
villupuram jeevithan - villupuram,இந்தியா
17-டிச-201206:17:59 IST Report Abuse
villupuram jeevithan காங்கிரஸ் ஒரு சிறந்த ரிங் மாஸ்டர். கருணா, மாயா, முலாயம் போன்ற கொடிய விலங்குகளை ஒரே கூண்டில் அடைக்க கூடிய திறமையை நன்கு வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள். கட்டாயம் 14 வரை மட்டுமல்ல, அதற்கு பிறகும் அவைகள் வாலாட்டாமல் பார்த்துக் கொள்ளும் காங்கிரஸ்.
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
Cancel
Pannadai Pandian - wuxi,சீனா
17-டிச-201205:52:51 IST Report Abuse
Pannadai Pandian முலாயம் சிங் யாதவ், மாயாவதி, கருணாநிதி - இந்த மூவரையும் எளிதாக மத்திய அரசு வளைத்து போட்டு விடலாம். காரணம் உலகறிந்த விஷயம். ஊழல், ஊழல், ஊழல் & கிரிமினல் குற்றங்கள். இவர்களுக்கு வெக்கமோ மானமோ கிடையாது. அதனால் தான் செல்வத்தில் திளைக்கிறார்கள். மானங்கெட்டவனுக்கு மார்பு மட்டும் சோறு என்பது பழமொழி.
Rate this:
0 members
0 members
2 members
Share this comment
Cancel
naagai jagathratchagan - mayiladuthurai ,இந்தியா
17-டிச-201205:02:12 IST Report Abuse
naagai jagathratchagan ஊழலை ஒத்துக்கொண்டு போனால் சட்டம் நிறை வேற்றுவதிலோ ....மீண்டும் தேர்தலில் கூட்டு போடுவதோ காங்கிரசுக்கு எந்த வித சங்கடமும் இல்லை ....இரண்டு கட்சிகளுமே வெளியே ஆதரவு ...உள்ளே எதிர்ப்பு ...என்று மங்காத்த ஆட்டம் ஆடுகின்றன ....அவர்களது வழக்கினை காணாமல் விட்டுவிட்டால் ..ஊழலோடு கைகோர்த்துக்கொள்ள காங்கிரசுக்கு நல்ல வாய்ப்பு ...மக்களையும் மண்ணை கவ்வ வைக்கலாம் ..
Rate this:
0 members
0 members
15 members
Share this comment
Cancel
Thangairaja - tcmtnland,இந்தியா
17-டிச-201204:39:09 IST Report Abuse
Thangairaja இட ஒதுக்கீடு தேவை என்பதால் தானே அத்தனை கட்சிகளும் ஆதரிக்கின்றன, முலாயம் முரண்டு பிடித்து என்ன பிரயோஜனம். திமுக ஆதரவு இருக்கும் வரை மத்திய அரசுக்கு எந்த பாதகமும் வராது.
Rate this:
7 members
0 members
2 members
Share this comment
17-டிச-201207:13:37 IST Report Abuse
அறிவாலயம் c / o போயஸ் இட ஒதுக்கீட்டை எந்தக் கட்சி மனதார ஆதரித்தது?எல்லாம் ஒட்டுக்காகப் போடும் வெளிவேஷம் தான்...
Rate this:
0 members
0 members
2 members
Share this comment
17-டிச-201207:14:59 IST Report Abuse
அறிவாலயம் c / o போயஸ் இட ஒதுக்கேடுட்டுக்காக போராடுவதாக நாடகம் ஆடும் ஒரு தமிழகத் தலைவர் தாழ்த்தப்பட்ட பெண்ணை மணந்ததற்காக தன மூத்த மகனையே வீட்டை விட்டு வெளியேற்றி தென் மண்டலத்துக்கு அனுப்பியது எங்களுக்குத் தெரியாதா?...
Rate this:
0 members
0 members
2 members
Share this comment
Cancel
Tamil A - chennai,இந்தியா
17-டிச-201201:03:52 IST Report Abuse
Tamil A முலாயம் இந்த பதவி உயர்வில் இட ஒதுக்கீடு மசோதாவை ஆதரிக்காவிடிலும் எதிர் கட்சியான பாஜக ஆதரிப்பதால் எந்த பிரச்சினையும் ஏற்பட போவதில்லை ,பிறகு எதற்கு முலாயமை சமாதான படுத்த போகிறார்கள் .சமாஜ்வாடி மற்றும் சிவசேனா தவிர பாராளுமன்றத்தில் தொண்ணூறு சதவீத உறுப்பினர்கள் இதை ஆதரிக்கிறார்கள் .இதை எதிர்க்க எந்த கட்சிக்கும் திராணி இல்லை இந்த இரண்டு கட்சியை தவிர .
Rate this:
0 members
0 members
32 members
Share this comment
Cancel
Jai - ,கனடா
17-டிச-201200:48:46 IST Report Abuse
Jai வோட்டு பிச்சைக்காக, காங்கிரஸ் கட்சியாலும், தமிழகத்தில் சில முட்டாள் பகுதரிவற்றவர்களாலும், கேட்காமலேயே லஞ்சமாக கொடுகபடுவதுதான் இந்த ஒதுக்கீடு. நூறு சதவிகிதம் இருந்தாலும் பத்தாது. ஒவ்வொரு தேர்தலுக்கும் இவர்களுக்கு குறைந்தது ஒரு பத்து சதவீதமாவது யாருக்காவது ஒதுக்கீடு செய்து, லஞ்சம் கொடுக்கவேண்டும். அதை அனுபவிப்பவர்கள், பொருளாதரத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் என்றால் நியாயமே, ஆனால் உலகமகா பணகாரகுடும்பங்களும் ஒதுக்கீடு பெறுவது என்பது உலகமகா அநியாயம். இவர்களால் இந்திய மக்கள் பெற்ற நன்மை, ஒவ்வொரு தேர்தலின் பொழுது ஒரு பத்து சதவியித மக்களை, பின்னுக்கு தள்ளுவதே. ஏற்கனவே பிந்தகியவர்கள் பெற்ற நன்மையை, மேலும் ஒரு பத்து சதவியித மக்களை அதில் சேர்த்து, கிடைப்பதை பறிப்பதே. யாரையும் முன்னேற்றும் எண்ணம் இல்லை.
Rate this:
4 members
0 members
16 members
Share this comment
s.maria alphonse pandian - CHENNAI-88,இந்தியா
17-டிச-201208:00:40 IST Report Abuse
s.maria alphonse pandianகடவுளுக்கு பணியாற்றும் தொழிலை கூட ஒரு குறிப்பிட்ட ஜாதியினருக்கு மட்டுமே என ஜாதி அடிப்படையில் இட ஒதுக்கீடை துவங்கி வைத்தது யார்?...
Rate this:
2 members
0 members
0 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.