Sheila Dikshit says Rs. 600 enough for family of five, slammed | ஐந்து பேர் குடும்பத்திற்கு மாதம் ரூ.600 போதும்: டில்லி முதல்வர் ஷீலா தீட்ஷித் பேச்சு | Dinamalar
Advertisement
ஐந்து பேர் குடும்பத்திற்கு மாதம் ரூ.600 போதும்: டில்லி முதல்வர் ஷீலா தீட்ஷித் பேச்சு
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

புதுடில்லி:""ஐந்து உறுப்பினர்களை கொண்ட குடும்பத்திற்கு, மாதம், 600 ரூபாய் இருந்தால் போதும்; அவர்களின், அரிசி, பருப்பு போன்ற, உணவு தேவைகள் நிறைவேறி விடும்,'' என, டில்லி முதல்வர், ஷீலா தீட்ஷித் பேசியுள்ளார். இதற்கு, பா.ஜ., கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

சோனியா தலைமை:டில்லியில், நேற்று முன்தினம், "அன்னஸ்ரீ யோஜனா' என்ற, உணவு பாதுகாப்பு திட்டம் துவக்கி வைக்கப்பட்டது. காங்கிரஸ் தலைவர் சோனியா தலைமையில் நடந்த அந்த விழாவில், டில்லி முதல்வர், ஷீலா தீட்ஷித் பேசியதாவது:அன்னஸ்ரீ யோஜனா, அருமையான திட்டம். இதில், மானிய விலையில் வழங்கப்படும் உணவு பொருட்களுக்கான மானியம், பொதுமக்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். "ஆதார்' அடையாள அட்டை மூலம், பொதுமக்களின் வங்கிக்கணக்கில், 600 ரூபாய் நேரடியாக சென்று சேர்ந்து விடும்.இந்தப் பணத்தை கொண்டு, மிக அழகாக குடும்பம் நடத்த முடியும். ஐந்து பேர் கொண்ட குடும்பத்திற்கு, இந்த தொகை போதுமானது. "ஆதார்' அடையாள அட்டை வைத்துள்ள, குடும்ப உறுப்பினர்களில், மிக மூத்த வயதுடையவரின் கணக்கில், இந்தத் தொகை வரவு வைக்கப்படும்.இவ்வாறு, ஷீலா தீட்ஷித் தெரிவித்தார்.

இதற்கு, பா.ஜ., கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர், முக்தார் அப்பாஸ் நக்வி கூறும்போது, ""நூறு ஆண்டுகளுக்கு முன் வேண்டுமானால், இந்த தொகை போதுமானதாக இருக்கலாம். இப்போது, நிச்சயம் போதாது. இது போன்று பேசுவதன் மூலம், ஏழை மக்களை, காங்., அவமரியாதை செய்கிறது,'' என்றார்.

26 ரூபாய்போதும்:"பணக்காரர்கள் நிறைந்த காங்., கட்சியில், ஏழைகளுக்கு இடமில்லை' என, பொதுவாக கூறப்படுவது உண்டு. காங்., தலைமையிலான, மத்திய அரசின், திட்டக் கமிஷனின், துணை தலைவராக இருக்கும், மாண்டேக் சிங் அலுவாலியா, "தனிநபர் உயிர் வாழ, நாள் ஒன்றுக்கு, நகரங்களில், 32 ரூபாயும், கிராமங் களில், 26 ரூபாயும் போதும்' என, தெரிவித்திருந்தார்.அதற்கு அப்போதே கடும் எதிர்ப்பு கிளம்பியது; காங்., பொது செயலர், ராகுல் கூட, மாண்டேக் சிங்குக்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.

நிலைமை இவ்வாறு இருக்க, டில்லி முதல்வர், ஷீலா தீட்ஷித்தும், ஏழை மக்களின் துயரம் பற்றி தெரியாமல், குடும்பத்தை நடத்த, 600 ரூபாய் இருந்தால் போதும் என, தெரிவித்துள்ளது, "ஏழைகள் மீது அந்த கட்சிக்கு இருக்கும் அக்கறையை வெளிப்படுத்துகிறது' என்கிறார், டில்லி அரசியல் பார்வையாளர் ஒருவர்.

ஐந்து பேர் கொண்ட குடும்பத்திற்கு, மாதம், 600 ரூபாய் இருந்தால் போதும் என, திருவாய் மலர்ந்துள்ள ஷீலா தீட்ஷித், மாத சம்பளமாக, ஒரு லட்சம் வரை பெறுகிறார். அவரின் மகனும், கிழக்கு டில்லி தொகுதி, காங்., எம்.பி.,யு மான, சந்தீப் தீட்ஷித், அதே அளவுக்கு பெறுகிறார்.

செழிப்பான குடும்பம்:பஞ்சாபின் பணக்கார குடும்பத்தை சேர்ந்த ஷீலாவின், மறைந்த கணவர், உமாசங்கர் தீட்ஷித், உத்தர பிரதேசத்தின், செல்வ செழிப்பான குடும்பத்தை சேர்ந்தவர்.ஷீலா, சிறு வயது முதல், மக்கள் பிரதிநிதியாகவும், அமைச்சராகவும் இருந்தவர் என்பதால், அவருக்கு சாமானிய மக்களின் துயரம் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை என, எதிர்க்கட்சி பிரமுகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

Advertisement


தொடர்புடைய செய்திகள்:


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (56)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Jana - rajapalayam,இந்தியா
17-டிச-201223:33:41 IST Report Abuse
Jana மந்திரியாரே நாட்டில் மாதம் மும்மாரி மழை பொழிகிறதா போன்ற அதிகார மமதையில் உளறுகிறார்
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
Cancel
v.sundaravadivelu - Tiruppur,இந்தியா
17-டிச-201222:44:18 IST Report Abuse
v.sundaravadivelu தலைக்கு நூறு ரூபா போட்டா ஐநூறு ரூபா போதும்.. எக்ஸ்ட்ரா நூறு சேர்த்து அறுநூறா கொடுக்க முன்வந்த தயாளகுணம் நிரம்பிய தாயே...வாழ்க உமது வள்ளல் தன்மை... வளர்க உமது கொடை உள்ளம்... ஹே ஷீலா... எங்க ஷகீலாவை கொஞ்ச நாலு டில்லி முதல்வரா போட்டுப் பாரு.. தலைக்கு ஆயிரம் போட்டுக் குடுக்கும் அந்தப் பிஞ்சு உள்ளம்.. நீயும் தான் இருக்கியே..
Rate this:
0 members
0 members
3 members
Share this comment
Cancel
G.SUBRAMANIAN.KUMBAKONAM - KUMBAKONAM ,இந்தியா
17-டிச-201221:00:01 IST Report Abuse
G.SUBRAMANIAN.KUMBAKONAM சொல்லுதல் யாருக்கும் எளியது ....அது போல செய்தால் ...தெரியும்....அதில் உள்ள கஷ்டங்கள் ....????
Rate this:
0 members
0 members
3 members
Share this comment
Cancel
Samuel Christopher - sharjah ,ஐக்கிய அரபு நாடுகள்
17-டிச-201218:12:40 IST Report Abuse
Samuel Christopher உங்களுடைய ஒரு நாள் செலவு எவ்வளவு என்று மக்களுக்கு தெரியபடுத்துங்கள். பின்பு இந்த மாதிரி எல்லாம் பேசுங்கள் ''மக்களின் தரத்தை என்று குறைத்து மதிக்கின்றீர்களோ அன்றே நீங்கள் உயர்த்தவர்கள் அல்ல"
Rate this:
0 members
0 members
4 members
Share this comment
Cancel
Samuel Christopher - sharjah ,ஐக்கிய அரபு நாடுகள்
17-டிச-201218:08:31 IST Report Abuse
Samuel Christopher இப்படி சொல்லி சொல்லியே மக்களை சோம்பேறிகளாக ஆக்கி வருகிறது இந்திய அரசாங்கம்
Rate this:
0 members
0 members
3 members
Share this comment
Cancel
SHANMUGAM - Kanchipuram,இந்தியா
17-டிச-201217:34:57 IST Report Abuse
SHANMUGAM நீ பொம்பளைய உன்னை தேர்தல் நிக்க வச்சது தப்பு. நீ போய் நல்ல டாக்டர் பாரு.
Rate this:
1 members
0 members
6 members
Share this comment
Cancel
B.J.P. Madhavan - chennai ,இந்தியா
17-டிச-201217:27:12 IST Report Abuse
B.J.P. Madhavan காலத்தின் கோலம் இது. எதை பேசுகிறோம் என்ற சுய நினைவில்லாமல் பேசிவிட்டார் போலும். சம்பந்தப்பட்டவர்கள் தான் இதற்கு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது எனது கருத்து.
Rate this:
0 members
0 members
5 members
Share this comment
Cancel
Giri - nagercoil,இந்தியா
17-டிச-201217:24:03 IST Report Abuse
Giri போதும் போதும்... நீங்கள் மக்களிடம் திட்டு வாங்குவதற்கு இந்த ஒரு சொல் போதும். நா நினைக்குறேன்... ஒருவேள இந்த அம்மா 5 பேருன்னு சொன்னது இவங்க வீட்டுல வாழுற எறும்பு கூட்டத்துக்கா இருக்குமோ... அம்மா இது 2012... 2ஆம் நூற்றாண்டு இல்லை...
Rate this:
0 members
0 members
3 members
Share this comment
Cancel
உரல்பட்டி ஊமையன் - தமிழ்நாடு ,இந்தியா
17-டிச-201216:39:16 IST Report Abuse
 உரல்பட்டி ஊமையன் இந்த அம்மா வுக்கு மாசம் 600 ரூபாய் கொடுத்து குடும்பம் நடத்த சொல்லணும் ....
Rate this:
0 members
0 members
33 members
Share this comment
Cancel
K. Kannan - coimbatore,இந்தியா
17-டிச-201213:24:10 IST Report Abuse
K. Kannan முதலில் சொன்னவர்கள் வாழ்ந்து காட்டட்டும் பின்னால் மக்கள் வாழுவதைபற்றி யோசிக்கலாம்
Rate this:
0 members
1 members
34 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்