Train fare hike is necessary: MoS Railways | ரயில் கட்டணம் அடுத்த ஆண்டு உயரும் : அமைச்சர் ரெட்டி தகவல்| Dinamalar

ரயில் கட்டணம் அடுத்த ஆண்டு உயரும் : அமைச்சர் ரெட்டி தகவல்

Added : டிச 16, 2012 | கருத்துகள் (11)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Train fare hike is necessary: MoS Railways

விசாகபட்டினம் :""ரயில்வேயின் நிதி நிலைமை மோசமாக இருப்பதால், அடுத்த ஆண்டு ரயில் கட்டணம் உயர்த்தப்படும்,'' என, ரயில்வே துறை இணை அமைச்சர், கோட்லா சூரிய பிரகாஷ் ரெட்டி கூறினார்.

விசாகபட்டினம் - சென்னை, விசாகபட்டினம் - ஷிர்டி வாரந்திர எக்ஸ்பிரஸ் ரயில்களை, நேற்று விசாகபட்டினத்தில், கொடியசைத்து துவக்கி வைத்த, அமைச்சர் சூரிய பிரகாஷ் ரெட்டி கூறியதாவது:ரயில்வே திட்டங்களை நிறைவேற்ற முடியாத வகையிலும், ரயில்வேயில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள முடியாத நிலையிலும், பயணிகளுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க முடியாத அளவிலும், ரயில்வே துறையின் நிதி நிலைமை மோசமாக உள்ளது. அதனால், ரயில் கட்டணத்தை உயர்த்த வேண்டியது அவசியம்.

அடுத்த ஆண்டு கட்டணம் உயர்த்தப்படும்; இந்த நிலவரங்களை எல்லாம் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். அனேகமாக ரயில்வே பட்ஜெட்டில், கட்டணம் உயர்த்தப்படும். உலகிலேயே, இந்திய ரயில்வேதான், பயணிகளிடம் மிக குறைவான கட்டணம் வசூலிக்கிறது. அத்துடன், ரயில் விபத்துக்களும் தற்போது குறைந்துள்ளன.

ஆந்திராவில், 25 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ரயில்வே திட்டங்கள் நிலுவையில் உள்ளன. இவற்றுக்கு நிதி வழங்குவதில், பிரச்னை உள்ளதால், இந்த திட்டங்களை நிறைவேற்றி முடிக்க கால அவகாசமாகும்.இவ்வாறு, சூரிய பிரகாஷ் ரெட்டி கூறினார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kamarud - ooty,இந்தியா
17-டிச-201220:16:31 IST Report Abuse
kamarud கட்டணங்கள் அடுத்த ஆண்டு உயரும்னா ? என்னமோ அடுத்த ஆண்டு க்கு இன்னம் பல மாசம் இருக்கற மாரி அடுத்த மாசம் உயருதுன்னு சொல்லிட்டு போங்களேன், அந்த போடோவுல பாருங்க கட்டனத்த uyarthura மந்திரி எப்படி சிரிச்சிட்டு இருக்கார்னு நம்ம வயித்து எரிச்சல கொட்டிக்கிட்டு .........
Rate this:
Share this comment
Cancel
P.Mohan - chennai,இந்தியா
17-டிச-201219:40:04 IST Report Abuse
P.Mohan திரு லல்லு பிரசாத் அவர்களிடமே மீண்டும் ரயில்வே துறையை ஒப்படைக்கலாம், அவராவது, கட்டணத்தை எற்றாமலேயே, மற்ற வழிகளில் முயற்சி செய்து, லாபகரமாக நடத்தியவர். இந்தியாவின் அண்டை நாடுகளே, அவரை ஒரு உதாரணமாக பார்க்கின்றன. அவரிடம் பாடம் கேளுங்கள்.
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
17-டிச-201217:01:45 IST Report Abuse
Nallavan Nallavan இந்த முறை ஏற்றப்பட்டால் ஒரே ஆண்டிற்குள் மூன்று முறை ஏற்றி மக்களுக்கு உதவிய அரசு என்ற நற்பெயரைப் பெறலாம்
Rate this:
Share this comment
Cancel
T.C.MAHENDRAN - LUSAKA,ஜாம்பியா
17-டிச-201214:04:50 IST Report Abuse
T.C.MAHENDRAN லாலு பிரசாத் ரயில்வே அமைச்சராக இருந்தபோது ஆண்டுக்கு 20,000 கோடி லாபத்தில் ஓடிய ரயில்வே துறையின் இன்றைய நிலைமை "எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன் " என்பதைப்போல் உள்ளது .
Rate this:
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
17-டிச-201212:04:44 IST Report Abuse
Pugazh V ஆஹா அடுத்த அமளிக்கு சான்ஸ் அவனது விட்டது. இந்த ரயில் கட்டண உயர்வு லோக் சபாவில் சமர்ப்பிக்கப் படும் போது, ஒரே கலாட்டா தான். ஜாலி தான். மேலும், அடுத்து மத்தியில் ஆட்சிக்கு வரும் கட்சி எதுவாக இருப்பினும், அவர்களுக்கு கவலையே வேண்டாம். இந்த ஆட்சியைக் குறை சொல்லியே ஐந்து வருடத்தையுமே கடத்தி விடலாம். எந்தக் கட்சியாவது, நாங்கள் பெட்ரோல் விலை குறைப்போம் என்றோ...ரயில் கட்டணம் குறைப்போம் என்றோ, பள்ளி, கல்லூரிக் கட்டணங்கள் குறைப்போம் என்றோ வாக்குறுதி தருமா? அது போல செய்யுமா? அல்லது வழக்கம் போல, இலவசங்களை அறிவிக்குமா? இப்போதைய அரசை குறை சொல்லி, இபோதைய அமைச்சர்கள் மேல் வழக்கு மேல் வழக்குப் போட்டு,, அது பற்றியே பேசி காலத்தையும், அரசுப் பணத்தையும் வழக்குகளிலும் கைதுகளிலும் வீனடிக்குமா? யாருக்கு வாக்களிப்பது என்று முடிவெடுக்கவே முடியவில்லை.
Rate this:
Share this comment
Cancel
Swaminathan Nath - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
17-டிச-201209:38:46 IST Report Abuse
Swaminathan Nath கட்டணத்தை உயர்துவது தவறு இல்லை , எல்லா பொருள்களும் உயர்வது போல், தேவையான வசதிகளை செய்து கொடுக்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Baskaran Kasimani - Singapore,சிங்கப்பூர்
17-டிச-201206:44:21 IST Report Abuse
Baskaran Kasimani சில வருடங்களுக்கு முன்னால் ஆண்டுக்கு 20,000 கோடி லாபத்தில் ஓடிய ரயில்வே துறை இன்று நிதி நிலை சரி இல்லை என்றால் என்ன அர்த்தம்?
Rate this:
Share this comment
Cancel
Thangairaja - tcmtnland,இந்தியா
17-டிச-201205:09:31 IST Report Abuse
Thangairaja பன்சாலை விட இவரு பரவாயில்லை.....கொஞ்சம் ஆசுவாசமா பேசுறாரு.
Rate this:
Share this comment
Cancel
Jai - ,கனடா
17-டிச-201201:05:55 IST Report Abuse
Jai திரு லல்லு பிரசாத் அவர்களிடமே மீண்டும் ரயில்வே துறையை ஒப்படைக்கலாம், அவராவது, கட்டணத்தை எற்றாமலேயே, மற்ற வழிகளில் முயற்சி செய்து, லாபகரமாக நடத்தியவர். இந்தியாவின் அண்டை நாடுகளே, அவரை ஒரு உதாரணமாக பார்க்கின்றன.
Rate this:
Share this comment
17-டிச-201207:29:08 IST Report Abuse
அறிவாலயம் c / o போயஸ் லல்லு கொடுத்தது பொய்க் கணக்கு என்பது நிரூபிக்கப்ட்டுவிட்டது. அவர் லாபம் ஈட்டியிருந்தால் அந்தப் பணம் எங்கு போனது இதே ஆட்சியிலேயே எப்படி காணாமல் போனது? லாலு வின் பொய்களை அவரது மாநில மக்களே புரிந்து கொண்டு இருமுறை தோற்க்கடித்துவிட்டனர். தமிழகத்து இளிச்ச வாயர்கள் மட்டும் எப்படி நம்புகின்றனரோ?...
Rate this:
Share this comment
Cancel
Tamil A - chennai,இந்தியா
17-டிச-201200:55:44 IST Report Abuse
Tamil A வழக்கம் போல A / C கட்டணத்தை தானே கூட்ட போகறீர்கள் .இரண்டாம் வகுப்பு ஸ்லீபரில் வரும் வருவாய் பற்றாக்குறையை இதில் ஏற்றி சரி படுத்துவீர்கள் ,பயண கட்டணத்தை கூடி விபத்துகளையும் அதிக படுத்த போகிறீர்களா
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை