E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
அரசு கேபிள் நிறுவனத்துக்கு டிஜிட்டல் உரிமம் : பிரதமர் தலையிட முதல்வர் கடிதம்
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

மாற்றம் செய்த நாள்

18 டிச
2012
00:10
பதிவு செய்த நாள்
டிச 16,2012 23:45

சென்னை:"அரசு கேபிள் நிறுவனத்துக்கு, டிஜிட்டல் உரிமம் வழங்க, மத்திய தகவல் தொடர்பு அமைச்சகத்துக்கு, பிரதமர் உத்தரவிட வேண்டும்' என, முதல்வர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை மாநகரில், கேபிள் இணைப்புகளை டிஜிட்டல் மயம் செய்ய மத்திய அரசு உத்தரவிட்டதையடுத்து, அரசு கேபிள் நிறுவனம், டிஜிட்டல் உரிமத்துக்கு விண்ணப்பித்திருந்தது. ஐந்து மாதங்களாகியும், அரசு கேபிள் நிறுவனத்துக்கு, மத்திய தகவல் தொடர்பு துறை உரிமம் வழங்கவில்லை.இதனால், சென்னை மாநகரில், கேபிள் ஒளிபரப்பை டிஜிட்டல் மயமாக்குவதில், தாமதம் ஏற்பட்டு வருகிறது. ஏற்கனவே, டிஜிட்டல் உரிமம் வைத்துள்ள தனியார் கேபிள் நிறுவனங்கள், "செட்-டாப் பாக்ஸ்'களை வழங்கி, டிஜிட்டல் மயமாக்கும் வேலையை துரிதப்படுத்தி வருகின்றன.இப்பிரச்னையில் பிரதமர் தலையிட்டு, தமிழக அரசு கேபிள் நிறுவனத்துக்கு, டிஜிட்டல் உரிமம் வழங்க வேண்டும் என, முதல்வர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார்.

பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு, அவர் எழுதியுள்ள கடிதம்:தமிழக அரசு, கடந்த ஆண்டு, செப்டம்பர் மாதம், அரசு கேபிள் நிறுவனத்தை துவங்கியது. 70 ரூபாய்க்கு, 100 சேனல்கள், இதன் மூலம் வழங்கப்படுகிறது. உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்கள், 23 ஆயிரம் பேர், அரசு கேபிள் நிறுவனத்தில் உறுப்பினராகி உள்ளனர்.அரசு கேபிள் நிறுவனத்தின் மூலம், 60 லட்சம் இணைப்புகள் வழங்கப் பட்டுள்ளன. நாட்டிலேயே, அதிக இணைப்புகளைக் கொண்ட கேபிள் ஒளிபரப்பு நிறுவனமாக, தமிழக அரசு கேபிள் நிறுவனம் உள்ளது; மிகக் குறைந்த கட்டணத்தில், கூடுதல் சேனல்களை வழங்குகிறது.ஆனால், தனியார் கேபிள் ஆபரேட்டர்கள், 30 முதல் 70 சேனல்களை மட்டும் வழங்கி, அதற்கு 150 ரூபாய் முதல் 250 ரூபாய்வரை வசூலிக்கின்றனர்.

கேபிள் இணைப்புகளை, டிஜிட்டல் மூலம், மாநகரங்களில் வழங்க வேண்டும் என, மத்திய அரசு, புதிய சட்டத்தை உருவாக்கியுள்ளது. கடைகோடி வாடிக்கையாளருக்கும், இந்த வசதி, குறைந்த கட்டணத்தில் கிடைக்க, அரசு கேபிள் நிறுவனம், 50 கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளது.
டிஜிட்டல் உரிமம் பெறுவதற்காக, இந்த ஆண்டு, ஜூலை 5ம் தேதி, அரசு கேபிள் நிறுவனம் விண்ணப்பித்தது; ஐந்து மாதங்களுக்கு மேலாகியும், டிஜிட்டல் உரிமத்தை, மத்திய தகவல் தொடர்புத் துறை வழங்காமல் உள்ளது. டிஜிட்டல் மயமாவது, இதனால் தடைபட்டுள்ளது. ஆனால், டிஜிட்டல் உரிமம் வேண்டி விண்ணப்பித்த தனியாருக்கு மட்டும், மத்திய அரசு உரிமம் வழங்கியுள்ளது.

மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர், தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆகியோரை, அ.தி.மு.க., பார்லிமென்ட் குழுத் தலைவர் தம்பிதுரை தலைமையில், தமிழக எம்.பி.,க்கள் சந்தித்து வலியுறுத்தியும், இதுவரை டிஜிட்டல் உரிமம் வழங்கப்படவில்லை . இப்பிரச்னை தொடர்பாக, அ.தி.மு.க., - எம்.பி.,க்கள் குழு, உங்களையும் சந்தித்து, டிஜிட்டல் உரிமம் வழங்க வலியுறுத்தியும், பலனில்லாமல் உள்ளது.இதற்கிடையே, தமிழக அரசு கேபிள் நிறுவனத்துக்கு, டிஜிட்டல் உரிமம் வழங்க வேண்டும் என, மதுரை ஐகோர்ட் கிளையும் உத்தரவிட்டுள்ளது. எனவே, தமிழக அரசு கேபிள் நிறுவனத்துக்கு, டிஜிட்டல் உரிமத்தை உடனடியாக வழங்க, நீங்கள் தலையிட்டு, நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, ஜெயலலிதா கூறியுள்ளார்.



தொடர்புடைய செய்திகள்:


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (39)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mirudan - kailaayam,இந்தியா
19-டிச-201210:32:05 IST Report Abuse
mirudan கபில் சிபல் அவர்களுக்கு கொடுக்க வேண்டியதை கொடுத்தால் லைசென்சே உடனே கிடைக்கும். லஞ்சம் கொடுக்காமல் அரசு துறையில் எந்த காரியமும் நடக்காது என்பதை ஜெயலலிதா அறிய வில்லையோ ?
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
Ab Cd - Dammam,சவுதி அரேபியா
17-டிச-201212:42:12 IST Report Abuse
Ab Cd முதலில் டிவி பார்க்க மின்சாரத்தை கொடுங்க, கேபிள் கொடுப்பதை பற்றி பின்னர் யோசிக்கலாம்.
Rate this:
2 members
1 members
43 members
Share this comment
Cancel
v. sundaramoorthy - Ariyalur,இந்தியா
17-டிச-201209:48:31 IST Report Abuse
v. sundaramoorthy பிரதமரா யார் அவர் எங்கே இருக்கிறார்? யாரும் தமிழ்நாட்டை பற்றி நினைப்பதாக இல்லை, ஏன் இந்த முயற்சி வீணான முயற்சி.
Rate this:
3 members
4 members
4 members
Share this comment
Snake Babu - Salem,இந்தியா
17-டிச-201215:21:44 IST Report Abuse
Snake Babuஅத பத்தி எல்லாம் கவலையில்லை, பிரச்சனைய திர்க்க முடியல, ஒரு கடிதம் போட்டோம்னா கொஞ்ச நாளைக்கு ப்ரீயா இருக்கலாம் அதான்...
Rate this:
1 members
0 members
19 members
Share this comment
Cancel
எம்.ஆர்.பி.குமார் - CHENNAI,இந்தியா
17-டிச-201209:36:56 IST Report Abuse
எம்.ஆர்.பி.குமார் அப்படியே கரண்ட் வாங்கி கொடுத்தா நல்ல இருக்கும்
Rate this:
1 members
0 members
15 members
Share this comment
Cancel
sombu - chennai,இந்தியா
17-டிச-201209:04:25 IST Report Abuse
sombu மின்வெட்டு பிரச்சினையிலிருந்து மக்களை திசை திருப்பவே இந்த லெட்டெர். அரசு கேபிள் நிறுவனத்தின் மொத்த மொத்த வருமானமே 10 கோடிதான். அதிலும் 3 கோடி நட்டம். அம்மா நிர்வாக புலி.
Rate this:
6 members
0 members
25 members
Share this comment
Cancel
குடியானவன்-Ryot - தண்ணீர் இல்லா தேசம் ,இந்தியா
17-டிச-201208:02:22 IST Report Abuse
குடியானவன்-Ryot பணமுதலைகள் அதரவாக செயல்படும் மத்திய அரசுக்கு இதுபோன்ற மக்கள் பயனடையும் திட்டங்களுக்கு முட்டுகட்டையாக செயல்படுவதில் வியப்பொன்றும் இல்லை. மாநில அரசை கலைக்க 356 பிரிவு போல் மக்கள் விரோத போக்கை கடைபிடுக்கும் மத்திய அரசை கலைக்க பிரிவு ஒன்று தேவை.
Rate this:
17 members
0 members
6 members
Share this comment
Cancel
s.maria alphonse pandian - CHENNAI-88,இந்தியா
17-டிச-201207:52:57 IST Report Abuse
s.maria alphonse pandian திமுகவினர் குடும்பம் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்கள் இந்த கேபிள்மூலம் சம்பாதிப்பாக கூறிவிட்டு அதை தன வசம் எடுத்த அரசு,இப்போது அரசு கேபிள் நட்டத்தில் இயங்குகிறது என கூறப்படுவது ஏற்கத்தக்கதல்ல....அந்த கோடிக்கணக்கான பணம் யார் வீட்டுக்கு செல்கிறது என்பதை மக்களுக்கு தெளிவு படுத்த வேண்டும்...
Rate this:
20 members
1 members
41 members
Share this comment
Cancel
Raj - Chennai,இந்தியா
17-டிச-201207:49:02 IST Report Abuse
Raj அரசு நிறுவனத்திற்கு டிஜிட்டல் வுரிமம் தருவதில்லை என்பது TRAI கொள்கை. அது சரியானதே சன் டிவி, கலைஞர் டிவி, ஜெயா டிவி எல்லாவற்றிலும் ஒரே செய்தியை எப்படி எல்லாம் தருகிறார்கள் ஊரறிந்த "ரகசியம்". இந்த லட்சணத்தில் டிஜிட்டல் வுரிமம் கிடைத்தால் எப்படி இருக்கும்?
Rate this:
0 members
0 members
11 members
Share this comment
Cancel
ஆரூர் ரங - chennai,இந்தியா
17-டிச-201207:00:14 IST Report Abuse
ஆரூர் ரங இதிவும் கேடி சகோதரர்களின் வேலைதான். எப்படியாவது தங்களது செட்டாப் பக்ஸ் கனெக்ஷனை விற்க வேண்டுமெனபதற்காக அரசு கேபிளுக்கு முழு அனுமதி கிடைக்கவிடாமல் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்பது வெட்டவெளிச்சமாகி விட்டது. போதாததற்கு மாநில அரசுகள் டிவி சானல் மற்றும் கேபிள் நடத்துவது தவறு என நோட்டீஸ் வேறு அனுப்பப் படுகிறதாம். முன்பு கருணாநிதி காலில் விழுந்து அரசு கேபிள் நிறுவனத்தை அடக்கமாக ஆக்கியவர்கள், இதுவும் செய்வர் இதற்கு மேலும் செய்வர். பி எஸ் என் எல் லயன்களைத் திருடி தனது டிவி சானலுக்குப் பயன்படுத்திய கேஸ் மூன்று வருடமாக தூங்கிகிறது . ஏர்டெல் மேக்சிஸ் கேஸோ கைவிடப்படும் நிலையில் மற்ற பிரச்னைகளுக்கு பச்சைம்மாவோடு பேரம் பேச சரத்குமார் இருக்கிறார் ,அதாவது இன்றைய நிலவரப்படி சோனியாவுக்கு அடுத்தபடி அதிக செல்வாக்கு உள்ள இந்தியர்கள் கேடிகள்
Rate this:
35 members
0 members
17 members
Share this comment
Cancel
T.R.Radhakrishnan - Nagpur,இந்தியா
17-டிச-201206:23:11 IST Report Abuse
T.R.Radhakrishnan கொள்ளையர்களின் பிடியில் நாடே சிக்கித் தவிக்கிறது என்ற கூற்றுக்கு இந்த செய்தி ஒன்றே சாட்சி.......
Rate this:
11 members
0 members
8 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.