மின்வெட்டு பிரச்னையில் வெள்ளை அறிக்கை: கேட்கிறார் கருணாநிதி
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

சென்னை:"மின்வெட்டு பிரச்னை குறித்து, தமிழக அரசு, வெள்ளை அறிக்கை அளிக்க முன் வருமா' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி, கேள்வி எழுப்பியுள்ளார்.

அவரது அறிக்கை:மின்துறை அமைச்சர் பேசுகையில், "ஜூன் மாதத்திற்கு பின், மின் தட்டுப்பாடு என்பது வானத்தில் இருக்கலாம். தமிழகத்தில் இருக்காது' என்றார்.ஆனால், தமிழக முதல்வரோ, கடந்த ஆண்டு, கவர்னர் உரை மீதான விவாதத்திற்கு பதிலளிக்கையில், "தற்போதுள்ள, 3 மணி நேர, மின்வெட்டை, 2 மணி நேரமாகக் குறைப்போம், 2011ம் ஆண்டு, ஜூலை முதலே, தமிழகத்தில் மின் பற்றாக்குறை முழுவதும் தீர்க்கப்படும்' என்றார்.

அதே முதல்வர், கடந்த மாதம் கூறுகையில், "2013ம் ஆண்டு இறுதிக்குள், மின் பற்றாக்குறை தீர்க்கப்படும் என, கூறியிருக்கிறார். முதல்வர் கூறியது உண்மையா? அமைச்சர் கூறியது உண்மையா?தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணைய, முன்னாள் தலைவர் கபிலன் ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில், "இன்னும் இரண்டு ஆண்டுகளில், மின்சாரத் தேவையில், தன்னிறைவு பெற்ற மாநிலமாக, தமிழகம் விளங்கும்' என, கூறியிருக்கிறார். முதல்வர் கூறியது உண்மையா? மூத்த அதிகாரி கூறியது உண்மையா?

தமிழகத்திலே, மின்வெட்டுப் பிரச்னை எப்போதும் நீங்கும்? கடந்த ஆட்சியிலும், இந்த ஆட்சியிலும் துவங்கப்பட்ட மின்திட்டங்கள் குறித்த, உண்மை விவரங்களை மக்களுக்குத் தெரிவிக்கும் வகையில், அரசு வெள்ளை அறிக்கையை, அளித்திட முன் வருமா?இவ்வாறு, கருணாநிதி கூறியுள்ளார்.

Advertisement


தொடர்புடைய செய்திகள்:


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (109)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Giri Srinivasan - chennai ,இந்தியா
17-டிச-201223:41:05 IST Report Abuse
Giri Srinivasan தலைவா உங்களைவிட்டால் தமிழ்நாட்டில் கேள்விகேட்க ஒரு நாதியும் இல்லை அதே போல ஒரு நாதியற்ற பதிலும் இல்லை உங்களை கொலைகாரன் , கொள்ளைக்காரன் என கருத்து சொல்லும் எவருமே தமிழர் இல்லையோ என எண்ணத்தோன்றுகிறது .
Rate this:
Share this comment
Cancel
g.k.natarajan - chennai,இந்தியா
17-டிச-201223:14:18 IST Report Abuse
g.k.natarajan உண்மையான நிலவரம் பற்றி ஆறு வாரங்களுக்கு முன், ஒரு ஆங்கில தினசரி பத்திரிகையில், புட்டு, புட்டு புள்ளி விவரம் வந்திரின்ததுசென்ற ஆட்சியில்[இரண்டு முறை] 5% கூட உற்பத்தி அதிகரிக்கவில்லை, அதே சமயம் தேவை நூறு சதவிகிதம் அதிகரித்து விட்டது இதுதான் பிரச்சினை இதை சரி செய்ய எந்த ஆட்சியாக இருந்தாலும் இன்னும் 15 வருடங்களாகும் ? ஏனெனில் ,தேவை வருடத்திற்கு 20% அதிகரிக்கின்றது இதுதான் உண்மை நடராசன்.
Rate this:
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
17-டிச-201221:52:48 IST Report Abuse
Pugazh V மின் வெட்டால் அவதிப்படும் குழந்தைகள், முதியவர்கள், நோயாளிகள், மாணவர்கள் மற்றும் தொழிலதிபர்களுக்காக கலைஞர் வெள்ளை அறிக்கை கேட்கிறார். அரசு கொடுக்கட்டுமே, என்ன தான் நிஜ காரணம் என்று பார்க்கலாமே. இன்னுமா கடந்த ஆட்சியினையும், மத்திய அரசையும் குறை சொல்லிக் கொண்டிருப்பது? அப்போ இரண்டாண்டுகளாக இந்த ஆட்சி என்ன தான் செய்தது என்றும் அறிக்கையில் சொல்லப்படுமல்லவா? ஈகோ பார்க்காமல் அரசு வெள்ளை அறிக்கை சமர்ப்பித்தால் தான் என்னவாம்? யார் கேட்கிறார் என்று பார்க்க வேண்டாமே, என்ன கேட்கப் படுகிறது, அதில் நியாயம் இருக்கிரகுடா என்று மட்டும் பாருங்களேன். வலித்தாலும் நடிக்கிறானே தமிழன்,,எப்பவுமே இப்படியா, இப்படித்தான் எப்பவுமேவா?
Rate this:
Share this comment
Cancel
sankar - trichy,இந்தியா
17-டிச-201221:21:00 IST Report Abuse
sankar வெள்ளை அறிக்கை கொடுத்தா நீங்க என்ன ஆணி புடுங்குவிங்க. அத முதலில் சொல்லுங்க. மத்திய அரசிடம் சொல்லி மின்சாரம் வாங்கி தருவிங்களா???????
Rate this:
Share this comment
Cancel
sethu - Chennai,இந்தியா
17-டிச-201221:10:01 IST Report Abuse
sethu அட தமிழன் வீணா போக உதவியவரே ,சிங்களனுக்கு காவடி எடுத்தவரே , வெளிநாட்டுக்கு சிகப்பு கம்பளம் விரிப்பவரே ,இன்று பேப்பர் படித்தீரா கோவைக்குள் எந்த ரயிலும் வராமல் பார்த்துக்கொள்ளும் தென்னக ரயில்வேக்கு எதற்கு சென்னையில் தலைமை அலுவலகம். உங்கள் பார்வை எப்போ மக்களின் துயத்தில் படும். நீங்கள் ஒரு வெள்ளை அறிக்கை கொடுப்பீரா.
Rate this:
Share this comment
Cancel
alriyath - Hongkong,சீனா
17-டிச-201219:51:42 IST Report Abuse
alriyath 5 முறை ஆட்சி செய்தீர்களே, கேள்வி கேட்பதோடு விட்டு விடாமல் கொஞ்சம் யோசனையும் கொடுத்தால் நல்லா இருக்கும்.. அது என்ன மாயமோ தெரியலே இந்த கேள்விகளெல்லாம் கையில் ஆட்சி இருக்கும் போது தாத்தாவும், பாட்டியும் மறந்து விடுகிறார்கள்...
Rate this:
Share this comment
Cancel
KAARTHI - Paris,பிரான்ஸ்
17-டிச-201219:37:31 IST Report Abuse
KAARTHI சொம்புகளா ....அந்த அய்யா கேட்பதை இந்த அம்மா தருவதில் என்ன சிரமம் உள்ளது என்று தெரிவித்தால் நல்லது..
Rate this:
Share this comment
Cancel
Pushparaj Ramakrishnan - Mannachanallur,இந்தியா
17-டிச-201219:29:59 IST Report Abuse
Pushparaj Ramakrishnan தாங்கள் தோற்றதற்கு காரணமான ஒரு விஷயத்தையே மீண்டும் வெற்றி பெறுவதற்காக உயர்த்திப் பிடிக்கிறார்கள் தி.மு.க.வினர்.
Rate this:
Share this comment
Cancel
ANBE VAA J.P. - madurai,இந்தியா
17-டிச-201218:56:19 IST Report Abuse
ANBE VAA J.P. எப்படியோ நீங்கள் எவ்வளவு பாவங்கள் பண்ணி இருந்தாலும் உங்களின் இந்த போராட்ட அறிவிப்பால் எங்களுக்கு 2 நாளைக்கு தங்கு தடை இல்லாத மின்சாரம் கிடைத்து கொண்டிருகின்றது எங்கள் பணி செவ்வனே நடை பெற்று கொண்டிருகின்றது . உங்களுக்கு ஆன்மீகத்தில் நம்பிக்கை இல்லாவிடிலும் அந்த புண்ணியம் உங்களுக்கு சேரட்டும்
Rate this:
Share this comment
Cancel
Samuel Christopher - sharjah ,ஐக்கிய அரபு நாடுகள்
17-டிச-201218:28:49 IST Report Abuse
Samuel Christopher "தமிழக மக்கள் ஏமாற்ற படுகிறார்கள் என்பது மட்டும் உண்மை"1. தமிழக அரசாங்கம் கரண்டு கொடுக்காமல் ஏமாற்றுகிறது 2.இயற்கை மழையை கொடுக்காமல் ஏமாற்றி விட்டது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்