Advertisement
கோவை நகர பஸ் ஸ்டாப்கள் கண்காணிப்பு :மாணவர்கள் மோதல் எதிரொலி
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள் : டிசம்பர் 16,2012,23:55 IST

கோவை நகர பஸ் ஸ்டாப்களில், மாணவர்கள் மோதல் மற்றும் குற்றச் சம்பவங்களை தடுக்க, போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.கோவை நகரின் முக்கிய பகுதியாக இருப்பது டவுன்ஹால். இப்பகுதியில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் செயல்படுகின்றன. மேலும், கோவை புறநகர் பகுதிகளில் இருந்து, நகரின் பிற பகுதிகளில் உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியரும் தங்கள் ஊர்களுக்கு திரும்ப, பஸ்சுக்காக டவுன்ஹாலுக்குத்தான் வருகின்றனர். தினமும் இந்த பஸ் ஸ்டாப்களில் மாலை 4.00 மணி முதல், மாணவர்கள் கூடுகின்றனர். இவர்கள், தங்களுக்கென்று ஒரு கும்பலை சேர்த்துக் கொள்கின்றனர். இவர்களில் சிலர், கும்பலாக சேர்ந்து கொள்கின்றனர். பஸ்சுக்காக காத்திருக்கும், பள்ளி மாணவியர் மற்றும் பெண்களை கேலி செய்கின்றனர். சில நேரங்களில், மாண வர்களின் கும்பல்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டு, பழிதீர்க்கும் செயல்களும் அடிக்கடி நடக்கின்றன. கடந்த இருநாட்களுக்குமுன், டவுன்ஹால் மணிக்கூண்டு அருகில், இதே பகுதியில் செயல்படும் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட மாணவர் கும்பல், அதே பள்ளியை சேர்ந்த ஒரு மாணவனை தாக்கி, காம்பஸால் குத்திவிட்டு தப்பியோடியது. காயமடைந்த மாணவனை மீட்ட உக்கடம் போலீசார், மருத்துவமனையில் அனுமதித்தனர். விசாரணையில், அந்த மாணவனின் கும்பல், சில நாட்களுக்கு முன் மற்றொரு மாணவனை தாக்கியதால், இச்சம்பவம் நடந்ததும் தெரிந்தது. இதையடுத்து, மறுநாள் போலீசார் மாணவனின் பள்ளிக்கு சென்று விசாரித்தனர். இருதரப்பினரையும் சமாதானம் செய்தனர். இப்பிரச்னையை அடுத்து, கோவை நகர பஸ் ஸ்டாப்களில், மாணவர்கள் மோதல் மற்றும் குற்றச் சம்பவங்களை தடுக்க, போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பிரச்னைக்கு தீர்வு இதுகுறித்து, பெற்றோர்கள் கூறுகையில்,""ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைகளின் பள்ளி முடியும் நேரம் என்ன, அவர்களுக்கு தங்கள் ஊருக்கு வரும் பஸ்சின் நேரம் என்ன, வீட்டுக்கு எப்போது வந்து சேர்கிறார்கள் என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். ""தாமதமாக வந்தால், அதற்கான காரணம் கேட்டு கண்டிக்க வேண்டும். பள்ளி நிர்வாகம், பெற்றோர் கூட்டத்தை நடத்தி, மாணவர்களின் நடவடிக்கை குறித்து விவாதிக்க வேண்டும்,'' என்றனர்.

- நமது நிருபர் -




வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (1)
Guru - Batam,இந்தோனேசியா
17-டிச-201206:37:44 IST Report Abuse
Guru மாணவர்களிடம் ஒழுக்கம் குறைத்துவருவதர்க்கு இதுஒரு உதாரணம்
Rate this:
0 members
0 members
2 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.