Advertisement
பதிவு செய்த நாள் : டிசம்பர் 17,2012,00:20 IST
கருத்துகள் (2)
பள்ளிக்கல்வித்துறை சார்பில், கடந்த, 2010-11ம் கல்வியாண்டு, தரம் உயர்த்தப்பட்ட 284 நடுநிலைப்பள்ளிகளில், தலைமை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. இதனால், பள்ளி நிர்வாக பணி பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும், கல்வித்தரத்தை மேம்படுத்துவதற்காக, ஆரம்ப பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகளாகவும், நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகளாகவும், உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப்பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்பட்டு வருகின்றன.கடந்த, 2010-11ம் கல்வியாண்டு, பள்ளிக்கல்வித்துறை சார்பில், தமிழகம் முழுவதும், 284 பள்ளிகள், ஆரம்பப்பள்ளியிலிருந்து, நடுநிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டன. இப்பள்ளிகளில்,தற்போது வரை, தலைமை ஆசியர்கள் நியமிக்கப்படவில்லை

பள்ளி ஆசிரியர்களே (பொறுப்பு) தலைமை ஆசிரியராக கூடுதல் பொறுப்பை ஏற்றுள்ளனர். ஆசிரியர் தகுதி தேர்வு மூலம், 18 ஆயிரம் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள், மிகவும் குறுகிய காலத்தில் தேர்வு செய்யப்பட்டு, பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது.
பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டு இரண்டு ஆண்டுகள், கடந்த நிலையில், காலியாக உள்ள, தலைமை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, இதுவரை நடவடிக்கைஎடுக்கப்படவில்லை.

இதுகுறித்து, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, மாநில பொது செயலாளர் முருக செல்வராஜ் கூறியதாவது: தலைமை ஆசிரியர்கள் பதவி, பள்ளிகளில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. பள்ளிகல்வித்துறை சார்பில்,
Advertisement
நடைமுறைப்படுத்த வேண்டிய அனைத்து செயல்பாடுகள், நலத்திட்டங்களுக்கு, தலைமை ஆசிரியர்களே பொறுப்பனவர். இதுபோன்ற, சூழலில் தலைமை ஆசிரியர் பதவிகள், காலியாக இருப்பது ஏற்புடையதல்ல. மேலும், இப்பொறுப்பிற்கு ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், பதவி உயர்வு கலந்தாய்வில், நிரப்பப்படவேண்டும். அவ்வாறு நிரப்பப்படும் போது, ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் இடம் காலியாக அறிவிக்கப்பட்டு, அந்த இடத்திற்கு பட்டதாரிஆசியர்கள் பணிமூப்பு அடிப்படையில், தேர்வு செய்யப்படுவர்.இவ்வாறு பதவி உயர்வு பெறும் ஆசிரியர்களின் பணி இடங்கள் காலியாக அறிவிக்கப்பட்டு, புதிய பணி நியமன எண்ணிக்கையில் சேர்த்துக்கொள்ளப்படும். தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில், தலைமை ஆசிரியர்கள் இடம், நிரப்பப்படாமல் இருப்பதால், இதுபோன்ற நிர்வாக ரீதியாக பல நடைமுறை சிக்கல்கள் உள்ளன.காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.-நமது நிருபர்-



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (2)
KMP - குட்டி ஜப்பான் ,இந்தியா
17-டிச-201217:26:27 IST Report Abuse
KMP இது தான் இந்த ஆட்சியின் நூறாண்டு சாதனை ?
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
chandran - vellore  ( Posted via: Dinamalar Android App )
17-டிச-201215:14:56 IST Report Abuse
chandran super சரியான தகவல் நன்றீ
Rate this:
0 members
0 members
0 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.