circus company in kerala | கேரளாவில் துவக்கப்பட்ட சர்க்கஸ் அகாடமி| Dinamalar

பொது செய்தி

இந்தியா

கேரளாவில் துவக்கப்பட்ட சர்க்கஸ் அகாடமி

Added : டிச 17, 2012
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

கண்ணூர்:சில ஆண்டுகளுக்கு முன் வரை, சர்க்கஸ் நிகழ்ச்சிகளுக்கு, மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருந்தது. செயற்கைக்கோள், "டிவி' அதிகரிப்பு, "மிருகங்களை, அடைத்து வைத்து, அவற்றை தொந்தரவு செய்யக் கூடாது' என்ற, விலங்குகள் நல அமைப்புகளின் கெடுபிடி போன்றவற்றால், சர்க்கஸ் நிகழ்ச்சிகளுக்கு, வரவேற்பு குறைந்து வருகிறது.நாட்டின் பிரபல சர்க்கஸ் நிறுவனங்களை நடத்தி வருபவர்களில், கேரளாவை சேர்ந்தவர்களே அதிகம். மிருகங்களை பயன்படுத்த தடை இல்லாத காலங்களில், கேரள மாநிலத்தை சேர்ந்த ஏராளமானோர், சர்க்கஸ் தொழிலில் ஈடுபட்டிருந்தனர். ஆனால், இப்போது நிலைமை தலைகீழ்.இப்போது இந்த தொழிலில், வட கிழக்கு மாநிலங்களை சேர்ந்தவர்களே, அதிகம் ஈடுபடுகின்றனர். பெயரளவிற்கு, ஒரு சில விலங்குகளை வைத்தே நிகழ்ச்சிகள் இடம் பெறுகின்றன; ஜிம்னாஸ்டிக் போன்ற, மனிதர்களை வைத்து நடக்கும் நிகழ்ச்சிகள் தான், அவற்றில் அதிகம்.

இந்நிலையில், அழிந்து வரும் சர்க்கஸ் தொழிலை புனரமைக்கவும், ஏராளமானோருக்கு பயிற்சி அளிக்கவும், கேரளாவின், கண்ணூர் நகருக்கு அருகில் உள்ள, சிராகுனி என்ற கிராமத்தில், மாநில அரசின் சார்பில், 2010ல், "சர்க்கஸ் அகடமி' துவக்கப்பட்டது.துவக்கத்தில் ஏராளமானோர், இந்த கல்வி நிறுவனத்தில் சேர்ந்த நிலையில், இப்போது, வெறும், 10 பேருடன் இந்த கல்வி நிலையம், பெயரளவிற்கு இயங்குகிறது. முதலில், கேரள மாநிலத்தவர்கள் அதிகம் சேர்ந்திருந்த நிலையில், இப்போது, வட கிழக்கு மாநிலத்தவர்கள் தான் அதில் உள்ளனர்.
சர்க்கஸ் அகடமியின், தலைமை செயல் அதிகாரி, எம்.பி.வேலாயுதன் கூறியதாவது:சர்க்கஸ் துறையில், தங்கள் குழந்தைகளை ஈடுபடுத்தினால், அவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் என கருதும் பெற்றோர், இந்த பயிற்சி மையத்தை கண்டுகொள்வதே இல்லை. ஏதோ கொஞ்சம், வடகிழக்கு மாநிலத்தவர் வந்து படிக்கின்றனர்.இந்த கல்வி நிறுவனத்தை இழுத்து மூடாமல் இருக்க வேண்டுமெனில், சர்க்கஸ் கல்வி திட்டத்தை குறைத்து கொண்டு, ஜிம்னாஸ்டிக் தொடர்பான பாட திட்டங்கள் அதிகரித்தால், ஜிம்னாஸ்டிக்கில் ஆர்வம் கொண்டவர்கள் சேர வாய்ப்பு உள்ளது.இதனால், வரும் காலத்தில், ஆசிய விளையாட்டு போட்டி மற்றும் ஒலிம்பிக் போன்றவற்றில், இந்தியாவுக்கு, ஜிம்னாஸ்டிக் பதக்கங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X