மதுரை:மதுரை சோழவந்தான் கொடிமங்கலம் சுற்றியுள்ள பகுதிகளில் 500 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்ட வாழை, தண்ணீரின்றி கருகும் நிலையில் உள்ளது.
கொடிமங்கலம் முதல் காமாட்சிபுரம் வரை 300க்கும் மேற்பட்ட சிறு, குறு விவசாயிகள் 500 ஏக்கர் பரப்பளவில் வாழை பயிரிட்டுள்ளனர். 25 ஏக்கருக்கு ஒரு கிணறு என்ற அளவில் தான் தண்ணீர் வசதி இருக்கிறது.
பெரும்பாலான விவசாயிகள், கொடிக்குளம் கண்மாய் தண்ணீரையே நம்பியுள்ளனர். முதன்முதலாக கண்மாயில் தண்ணீர் இல்லாததால், விவசாயம் செய்ய முடியாத நிலைக்கு ஆளாகினர். நெல் விளையும் பூமியாக இருந்தாலும் தண்ணீர் பற்றாக்குறையால், வாழையை பயிரிட்டுள்ளனர். ஆனால் வாழைக்கும் தண்ணீர் இன்றி, விவசாயிகள் வேதனைப்படுகின்றனர்.
குமரேசன்: ஒரு ஏக்கருக்கு தொடர்ந்து 10 மணி நேரம் தண்ணீர் பாய்ச்சினால் தான் நிலம் நனையும். ஆனால் தொடர் மின்வெட்டில் ஒரு ஏக்கருக்கு தண்ணீர் கிடைக்க நான்கு நாட்களாகிறது. ஒரு மணி நேரத்திற்கு தண்ணீர் பெற ரூ.25 வாடகை தருகிறோம்.
சங்கிலி: மின்வெட்டின் போது ஆயில் மோட்டாருக்கு ஒரு மணி நேரம் இயக்க ரூ.50 ரூபாய். இவ்வளவு செலவு செய்தாலும், அடுத்தடுத்த நிலங்களுக்கு வரிசைப் படி தண்ணீர் தருவதால், மறுமுறை பாய்ச்சுவதற்கு இரண்டு வாரங்களாகிறது. எப்பவாவது மழை பெய்தால் கூட, வாழை வளரும் என்ற நம்பிக்கையில், பயிரிட்டுள்ளோம்.
காமராஜ்: பத்து மாதத்தில் வாழை தயாராகும் என்றாலும், காய் வெட்டும் வரை, தொடர்ந்து தண்ணீர் ஊற்றவேண்டும். பத்துமாதம் பாடுபட்டு, கடைசி ரெண்டு மாதம் தண்ணீர் இல்லையென்றால், உழைப்பெல்லாம், முதலீடும் வீணாய் போகும். எப்பவும் கண்மாய் தண்ணிய நம்பி பயிரிடுவோம். இந்த முறை மழை ஏமாத்திருச்சி, என்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.