திருநெல்வேலி : நெல்லை மாவட்ட மத்திய, மாநில எஸ்.சி.,எஸ்.டி., அரசு ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பில் ஓய்வு பெற்ற அரசு கூடுதல் தலைமை செயலாளர் கிறிஸ்துதாஸ் காந்திக்கு பணிநிறைவு பாராட்டு விழா வண்ணார்பேட்டையில் நடந்தது. விழாவிற்கு மத்திய, மாநில எஸ்.சி., எஸ்.டி., அரசு ஊழியர்கள் கூட்டமைப்பு மாவட்ட தலைவர் அம்பேத்கர், செயலாளர்(அரசியல் பிரிவு) பாலசுந்தரம் தலைமை வகித்தனர். மாவட்ட செயலளார் சுவாமிநாதன் வரவேற்றார். மாநில பொருளாளர் சோலைமலை துவக்கவுரை ஆற்றினார். கூட்டமைப்பின் மாநில அமைப்பாளர் கருப்பையா உட்பட பலர் பேசினர். விழாவில் ஓய்வு பெற்ற அரசு கூடுதல் தலைமை செயலாளர் கிறிஸ்துதாஸ் காந்தி ஏற்புரையில் கூறியதாவது; அரசு அலுவலகங்களில் காலியாகவுள்ள எஸ்.சி., எஸ்.டி., பணிடங்களை முழுமையாக நிரப்பப்படவில்லை. இந்த இடங்களை நிரப்ப கோரியும், இட ஒதுக்கீடு முறையை முழுமையாக தொடர்ந்து அமல்படுத்த கோரியும் எஸ்.சி., எஸ்.டி., அரசு ஊழியர்கள் ஒருங்கிணைந்து போராட வேண்டும். பொருளாதாரத்தில் பின் தங்கிய நிலையில் கிராமங்களில் உள்ள தலித் மாணவர்கள் படிப்பை பாதியில் நிறுத்துவது அதிகமாக உள்ளது. இத்தகைய மாணவர்களை எஸ்.சி., எஸ்.டி., அரசு ஊழியர்கள் கண்டறிந்து, அவர்கள் தொடர்ந்து படிக்க பொருளாதார வசதியும், டியூசன் வசதியும் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். இதன் மூலம் தலித் சமுதாயம் அனைத்து நிலைகளிலும் மேம்பட வாய்ப்புள்ளது. இவ்வாறு கிறிஸ்துதாஸ் காந்தி பேசினார். கூட்டத்தில் நெல்லை ஆர்.டி.ஓ., பெருமாள், கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் தயாளன், மனித உரிமைக்களம் இயக்குநர் பரதன், மத்திய, மாநில எஸ்.சி.,எஸ்.டி., ஊழியர்கள் சங்க நிர்வாகிகள், உட்பட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட பொருளாளர் சிவகுமார் நன்றி கூறினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.