திருநெல்வேலி : நெல்லை அருகே லாரி ஏஜென்டிடம் தங்க நகைகள், பணத்தை பறித்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர். நெல்லை அருகேயுள்ள மூன்றடைப்பு பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் முப்பிடாதி(47). டிப்பர் லாரி ஏஜென்ட். நேற்றுமுன்தினம் இவர் மோட்டார்பைக்கில் கொங்கந்தான்பாறை வழியே இட்டேரிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது காக்கி பேன்ட், சட்டை அணிந்து போலீசார் போல தோற்றம் அளித்த இருவர் முப்பிடாதியை வழிமறித்தனர். பைக்கை நிறுத்திய முப்பிடாதியிடம் இருந்து ஒன்றே முக்கால் பவுன் தங்கச்செயின், ஒரு பவுன் மோதிரம், 3,500 ரூபாயை பறித்து விட்டு தப்பினர். இதுகுறித்து முப்பிடாதி முன்னீர்பள்ளம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.