திருநெல்வேலி : ஐகிரவுண்ட் போலீஸ் ஸ்டேஷனுக்கு மகாராஜநகரில் புதிய கட்டடம் கட்ட வலியுறுத்தி வார்டு விழிப்புணர்வு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பாளை., ஐகிரவுண்டில் போலீஸ் - பொதுமக்கள் வார்டு விழிப்புணர்வு கூட்டம் உதவி கமிஷனர் ராஜமன்னார் தலைமையில் நடந்தது. ஐகிரவுண்ட் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் பீர்முகைதீன் முன்னிலை வகித்தார். சமூக சேவகர் ஜமால்முகமது ஈஸா, பேராசிரியர் கட்டளை கைலாசம், பாரத், ஜெயின்உசேன், கவுன்சிலர் ராஜா உட்பட பலர் பேசினர். மகாராஜநகர், வேலவர் காலனி, வசந்தம் நகர், ஜெயா நகர், ஐகிரவுண்ட் பகுதி குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். குற்றங்களை தடுக்க மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், போக்குவரத்து நெருக்கடியை தடுப்பது, போலீசாருக்கு உரிய தகவல்களை கூறி ஒத்துழைப்பு தருவது குறித்து கலந்துரையாடல் நடந்தது. ஐகிரவுண்ட் ஆஸ்பத்திரி வளாகத்தில் செயல்படும் போலீஸ் ஸ்டேஷனில் தகுந்த வசதிகள் இல்லை, ஆஸ்பத்திரி வளாகத்தில் ஸ்டேஷன் உள்ளதால் இரவு கேட் பூட்டப்பட்டு புகார் அளிக்க மக்கள் வர சிரமமாக உள்ளது, எனவே மகாராஜநகர் போஸ்ட்ஆபீஸ் பின்புறம் உள்ள அரசு இடத்தில் ஐகிரவுண்ட் ஸ்டேஷனுக்கு புதிய கட்டடம் கட்டுவது, விபத்துக்களை தவிர்க்க அதிவேகமாக பஸ்களை ஓட்டுவதை டிரைவர்கள் நிறுத்துவது, ஆஸ்பத்திரி வளாக ரோடுகளை சீர்செய்வது, பிரசவ வார்டு அருகே வேகத்தடை அமைப்பது, பொன்மணி காலனி, வேலவர் காலனி பகுதிகளில் திருட்டை தடுக்க ரோந்துப்பணியை தீவிரப்படுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சப்-இன்ஸ்பெக்டர் வேல்கனி நன்றி கூறினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.