திருநெல்வேலி : கிராம சுகாதாரப்பணியாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள் காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கவேண்டும் என தமிழக அரசுக்கு நெல்லை மாவட்ட கிராம சுகாதார செவிலியர்கள் சங்க செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நெல்லை மாவட்ட கிராம சுகாதார செவிலியர் சங்க கூட்டம் நெல்லை டவுனில் நடந்தது. மாவட்ட தலைவர் பர்வதம் தலைமை வகித்தார். சங்கரன்கோவில் சுகாதார மாவட்ட தலைவர் கலைச்செல்வம், பொதுச் செயலாளர் பாப்பா, மாநில செயலாளர் மரியசெல்வம், இணைச் செயலாளர் ரெமா, நிர்வாகிகள் லதா, மங்கையர்கரசி, இருதய ஜோதி உட்பட பலர் பேசினர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்க மஸ்தூர் பணியாளர்களை நியமிக்கவேண்டும். காலியாகவுள்ள சுகாதார ஆய்வாளர்பணியிடங்களை நிரப்பி கொசு ஒழிப்பு பணியை தீவிரப்படுத்தவேண்டும். கிராம சுகாதார செவிலியர்கள் தாய்சேய் நலப்பணி, தடுப்பூசி பணி, குடும்ப நலப்பணிகளில் ஈடுபடுவதால் மற்ற பணிகளில் கூடுதலாக ஈடுபடுத்தப்பட்டால் அனைத்து பணிகளும் பாதிக்கப்படும். தாய் சிசு மரணம் குறைப்பு விகிதம் பாதிக்கப்படும். கிராம சுகாதார செவிலியர்கள் அதிகப்பணி செய்தாலும் நெல்லை மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குனரும், சங்கரன்கோவில் துணை இயக்குனரும், செவிலியர்களை மனம் புண்படும் படியாகவும், கண்ணிய குறைவாகவும் பேசுகின்றனர். இதை கைவிடவேண்டும். காலியாகவுள்ள கிராம சுகாதார செவிலியர் பணியிடங்களை நிரப்பவேண்டும். அரசு மருத்துவமனைகள் இருந்தும் கூட தொலை தூரத்தில் இருக்கும் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தான் பிரசவிக்கும் பெண்களை அழைத்து வரவேண்டும் என கட்டாயப்படுத்துவது கண்டிக்கதக்கது. பிரசவ நேரங்களில் தாயினை அலைக்கழிப்பதும், கிராம சுகாதார செவியர்களை அலைக்கழிப்பதும் நல்லதல்ல. இதுபோன்ற செயல்களை தடுக்கவேண்டும். அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களில் கம்ப்யூட்டர் இயக்க ஆப்ரேட்டர் நியமிக்கவேண்டும். ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் துணை செவிலியர்களை தொலை தூர கிராமங்களுக்கு மாற்றுப்பணிக்கு அனுப்பக்கூடாது என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் நெல்லை கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.