புதுடில்லி: தலைநகர் டில்லியில் ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவி கற்பழிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டில்லியில் தெற்கு பகுதியான முனிர்கா பகுதியிலிருந்து பாலம் பகுதிக்கு செல்வதற்காக, நேற்றிரவு மருத்துவ மாணவி ஒருவர் தனது உறவினர் மற்றும் நண்பருடன் பஸ்சில் ஏறியுள்ளார். பஸ் கிளம்பிய சில நிமிடங்களில், அவர்கள் அருகே வந்த கும்பல் ஒன்று, தாங்கள் வைத்திருந்த இரும்பு கம்பியால் மாணவியின் உறவினரையும், நண்பரையும் அடித்துள்ளது. பின்னர் அந்த மாணவியை கற்பழித்துள்ளது. அத்துடன் நில்லாமல், அவர்கள் அனைவரையும் மகிபால்பூர் மேம்பாலத்தில் பஸ்சில் இருந்து வெளியே வீசியுள்ளது. சம்பவத்தில் பாதிக்கப்பட்ட அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தலைநகர் டில்லி பெண்களுக்கு பாதுகாப்பில்லாத இடமாக இருப்பது மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
ஐயா
சிவா அவர்களே இதை கொஞ்சம் படித்து பாருங்கள்
நியு யூயார்க்: அமெரிக்காவின் கானிக்டிகட் பகுதியில் கிண்டர்கார்டன் பள்ளியில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 20 குழந்தைகள்உட்பட 28 பேர் பலியாயினர். துப்பாக்கிச்சூடு நடத்திய நபரும் சுட்டுக்கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
கானிக்டிக்ட் பகுதியில் உள்ள சான்டி ஹூக் பள்ளியில் , 20 வயது மதிக்கத்தக்க அந்த நபர் இரண்டு துப்பாக்கிகள் மூலம் துப்பாக்கிச்சூடு நடத்தினான். அவனும் பலியாகிவிட்டதாக கூறப்படுகிறது. அந்த நபர் குறித்த தகவல் இதுவரை தெரியவில்லை. இந்த சம்பவம் அந்நாட்டு நேரப்படி 9.27 என தெரிகிறது.
இதனையடுத்து மாகாண கவர்னரின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், கவர்னர் சூழ்நிலையை தீவிரமாக கண்காணித்து வருவதாகவும், போலீசாருடன் தொடர்பில் இருப்பதாகவும் கூறினார்.
சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்த போலீசார், அங்கு உயிருடனுள்ள மாணவர்களை பத்திரமாக மீட்டனர். இந்த சம்பவத்தில் எத்தனை குழந்தைகள் காயமடைந்துள்ளனர் என்பது பற்றி தெரியவில்லை.
சம்பவ இடத்திலிருந்து மாணவர்கள் பயத்தில் கதறியபடி பலத்த பாதுகாப்புடன் வெளியேறும் காட்சிகளை அந்நாட்டு டிவிக்கள் ஒளிபரப்பின. இந்த சம்பவம் குறித்து அறிந்த பெற்றோர்கள், பள்ளியை முற்றுகையிட்டுள்ளனர். அதிகாரிகள் தொடர்ந்து பள்ளியை சோதனை செய்து வருகின்றனர். துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு 223 காலிபர் ரக துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தங்களை பள்ளியிலிருந்து வெளியேற்றும் முன்னர், ஒவ்வொரு மாணவரையும் போலீசார் தீவர சோதனை செய்ததாக மாணவர் ஒருவர் கூறினார்.
போலீசாருக்கு உதவ மீட்பு படையினர் அனுப்பப்பட்டுள்ளனர். ஆயுதங்களுடன் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மருத்துவர்களும் மருத்துவமனைக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.
ஒபாமா இரங்கல்:
20 குழந்தைகள் உட்பட 28 பேர் பலியான சம்பவத்திற்கு அமெரிக்க அதிபர் ஒபாமா இரங்கல் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் மாளிகை செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறுகையில்,இந்த துயரமான சம்பவத்திற்கு அதிபர் சார்பாகவும், எனது சார்பாகவும், பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்வதாக கூறினார்.மேலும் அவரிடம், அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் கட்டுப்படுத்தப்படுமா என கேட்டதற்கு, இது பற்றி விவாதிக்க இது சரியான நேரமல்ல என கூறினார்.
ஏன் சுட்டான் ? எதற்கு சுட்டான் ?
இந்நிலையில், துப்பாக்கிச்சூடுக்கான காரணம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. அப்பள்ளியில் பணியாற்றும் நான்சி லான்சா என்பவரது மகன் ஆடம் லான்சா (20) தனது தாய் மீதான கோபம் காரணமாகவே இந்த பயங்கரத்தை செய்துள்ளதாக கூறப்படுகிறது. தனது தாயுடன் காரில் பள்ளிக்கு சென்ற ஆடம், முதலில் தனது தாயையும், பின்னர் ஆத்திரம் அடங்காமல் குழந்தைகளையும் மற்றவர்களையும் சுட்டுக்கொன்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், வீட்டில் தனது தாய் நான்சி லான்சாவை கொலை செய்து விட்டு, பள்ளிக்குச் சென்ற மற்றவர்களை கொன்றதாக மற்றொரு தகவல் தெரிவிக்கிறது. சம்பவம் குறித்து ஆடமின் சகோதரர் தியான் லான்சாவிடம் விசாரணை நடந்து வருகிறது.இத்தருகு என சொல்வீர்கள் .........பாதிகப்பட்ட பெண்ணிற்கு மறுவழாயு அளிக்க பல ஆண்கள் உண்டு 20 குழந்தைகள் பலியான சம்பவத்திற்கு உங்கள் நாட்டை என்ன சொல்வது தனிப்பட்ட ஒரு நபரின் செய்யலுகா ஒரு நாட்டை குறை கூறுவது நல்லதல்ல....
\\\\ Four men, including three law students of Jamia Milia Islamia, gang-raped a 16-year-old girl from Nepal in south Delhi’s Bharat Nagar for about two months. The four arrested on Monday were also charged with kidnapping. The girl, a Class 11 student, who was previously sharing an apartment with a female fri, had just moved in with the four accused in September. “The day she moved into their apartment, they raped her and threatened to her. She tried to escape, but they locked her up,” said a police officer, who did not want to be named. In her statement to police, the girl said she was raped not just by them but also their fris who came visiting. Police said she had told her erstwhile flatmate before moving in that she knew the men and they could be trusted as they were in the police force a claim which later turned out to be false. Last week, the girl finally managed to escape and informed the local police. The medical examination of the girl has confirmed rape. //// Such incidents in Delhi are common, in the same way defining poverty by Congress party

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.