Rajya Sabha to vote on quota bill today | இட ஒதுக்கீடு மசோதா ராஜ்யசபாவில் நிறைவேற்றம்: ஆதரவாக 206 ஓட்டுக்கள்| Dinamalar
பதிவு செய்த நாள் :
கருத்துகள் (24)  கருத்தை பதிவு செய்ய
எழுத்தின் அளவு:

புதுடில்லி: தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு ( எஸ். சி., மற்றும் எஸ்.டி., ) அரசு பணி பதவி உயர்வில் இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதா, இன்று ராஜ்யசபாவில் நிறைவேற்றப்பட்டது. மசோதாவுக்கு ஆதரவாக 206 ஓட்டுக்களும், எதிராக 10 ஓட்டுக்களும் பதிவாகின. மூன்றில் ஒரு பங்கு ஆதரவு இருந்ததால் மசோதா நிறைவேற்றப்பட்டதாக அவைத்தலைவர் ஹமீத் அன்சாரி கூறினார்.

இன்றும் சமாஜ்வாடி மற்றும் பா.ஜ., கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பியதால் பெரும் அமளி ஏற்பட்டது. ‌இதனால் பார்லி., இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டன. முக்கிய எதிர்கட்சியான பா.ஜ., மற்றும் சமாஜ்வாடி கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ள போதிலும் எங்களுக்கு போதிய ஆதரவு உள்ளது. சட்ட மசோதா நிறைவேற்றியே தீருவோம் என ஆளும் காங்., தரப்பில் கூறப்பட்டுள்ளது.

கடந்த வாரத்தில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்ட போது பா.ஜ,.வின் மூத்த தலைவர் அருண்ஜெட்லி தமது கடும் எதிர்ப்பை தெரிவித்தார்.

இது போன்று பதவி உயர்வு அளிக்கப்படும் போது உண்மையான திறமைக்கு மதிப்பு இல்லாமல் போய்விடும். ஏற்கனவே பணி நியமனம் இட ஒதுக்கீடு போதிய பலனை தந்து வருகிறது. இப்போது கொண்டு வரப்படும் புதிய முறை முற்றிலும் தவறானது என்றார்.

முரளி மனோகர் ஜோஷி தெரிவித்த கருத்தில் பொருளாதார ரீதியிலானஇட ஒதுக்கீடு என்பதுதான் வரவேற்க வேண்டிய விஷயம். இந்த புதிய அணுகுமுறை தேவையற்றது , இது பிரிவினையை தூண்டும் என விமர்சித்துள்ளார்.
50 ஆண்டுகளாக நடைமுறையில் உள்ள ஒரு சட்ட அம்சத்தில் தான் மாற்றம் கொண்டு வருகிறோம். புதிதாக காங்., கொண்டு வரவில்லை என நியாயப்படுத்துகின்றனர் காங்., தலைவர்கள் .

தி.மு.க.,மற்றும் அ,தி.மு.க., இந்த மசோதாவுக்கு தமிழகத்தில் தி.மு.க.,மற்றும் அ,தி.மு.க., மாயாவதி தலைமையிலான பகுஜன்சமாஜ் கட்சி, ஆகியோர் ஆதரிப்பதாக அறிவித்து விட்டனர். முலாயம்சிங் இந்த சட்டத்தை எதிர்த்து வருகிறார். இந்நிலையில் இன்று காலை 11 மணி அளவில் துவங்கிய

Advertisement

அவையில் நீண்ட விவாதத்திற்கு பின்னர் மசோதா ஓட்டெடுப்புக்கு விடப்பட்டது. இதில் மசோதாவுக்கு ஆதரவாக 206 ஓட்டுக்களும், எதிராக 10 ஓட்டுக்களும் கிடைத்தன.

பாகிஸ்தான் விவகாரம்: தொடர்ந்து கூடிய அவையில் சமீபத்திய பாக்., உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக் இந்திய பயணத்தின் போது விவாதிக்கப்பட்ட விவரங்கள் குறித்து உள்துறை அமைச்சர் ஷிண்டே பேசினார்.

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (24)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Enrum anbudan - dammam,சவுதி அரேபியா
17-டிச-201223:22:58 IST Report Abuse
Enrum anbudan ஏற்க்கனவே தாழ்த்தப்பட்டவர்கள் என்று கூரிக்கொண்டு தரம் தாழ்ந்து நடப்பது போதாதென்று பதவி உயர்விலும் இட ஓதிக்கிடு என்பது இன்னும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும், இதனால் என்றும் சாதியை ஒழிக்க முடியாது இன்னும் ஒரு தாழ்த்தப்பட்டவர் கூட்டம் உருவாகும் so நாட்டிற்கு ஒரு நல்ல சுயநலமில்லாத நடு நிலைமையுள்ள தலைவன் வேண்டும் அதுவரை இந்த கேடுகெட்ட சாதி மத பிரிவினைவாதிகளினால் நம் நிம்மதி கெடும் அதில் எந்த குழப்பமும் இல்லை. யாரோ already கோர்ட்டுக்கு போவதற்கு ரெடி ஆகிவிட்டார்கள் என்று தெரிகின்றது அனாலும் நாடாளுமன்றத்தில் இயற்றிய சட்டத்தை கோர்ட் ஒன்றும் செய்ய முடியாது. எல்லாம் அவன் செயல். வாழ்க வளமுடன்.
Rate this:
Share this comment
Cancel
muthu Rajendran - chennai,இந்தியா
17-டிச-201222:48:27 IST Report Abuse
muthu Rajendran பணி நியமனத்தின்போது இடஒதுக்கீடு தேவை தான். உள்ளே நுழையும்போது குறிப்பிட்ட சதவீதம் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஒதுக்கீடு செய்வது சமத்துவத்திற்கு வழிகோலுகிறது. ஆனால் பதவி உயர்வின் போது மீண்டும் ஒரு ஒதுக்கீடு வரும்போது பணியில் ஒருவரின் கீழ் பணிபுரிதுவிட்டு சிறிது காலம் சென்று அவருக்கே அதிகாரியாகும் வாய்ப்பு வரும்போது. இளையவருக்கும் ஒரு நெருடல் இருக்கும் பணியில் முதிர்ச்சி பெற்றவருக்கு ஒரு விரக்தி ஏற்படும். அதனால் துறை அளவில் ஒரு விரும்பத்தகாத சோர்வு ஏற்படும். . திறமை குறைவு ஏற்படும் என்ற வாதத்திற்கே நான் போகவில்லை. ஒரு இளைய அமைச்சர், சக முதிய அமைச்சர்களுக்கு பின்னால் முதல்வர் ஆகலாம். அது அவர்கள் கட்சியின் எம் எல் எ க்கள் கொடுக்கும் ஆதரவை பொருத்தது. ஆனால் அரசு பணியில் சேர்ந்தால் அந்த வரிசைஇடம் எதாவது தண்டனை பெற்றால் தான் பின்னுக்கு தள்ளப்பட வேண்டும். எதோ வாக்குகள் பெறவேண்டும் என்ற அரசியல் நோக்கத்திற்காக செய்கிறார்கள்.ஏற்கனவே backlog vacancies மொத்தமாக தேர்வு செய்யும் போது ஒரு சமயத்தில் அவர்கள் 75 % மேல் அதிகாரிகளாக இருக்கும் வாய்ப்பு வருகிறது இந்த நிலையில் பதவி உயர்வில் ஒதுக்கீடு என்பது மற்றவர்களை இன்னும் பின்னுக்கு தள்ளும் என்பது உண்மை
Rate this:
Share this comment
Cancel
KMP - SIVAKASI ,இந்தியா
17-டிச-201222:24:46 IST Report Abuse
KMP பொதுவாக பதவி உயர்வு என்பது அவர் அவர் செய்த பணிகளின் திறமை, மற்றும் வயது , பணி அனுபவம் மற்றும் சிலவற்றின் அடிப்படையில் வழங்கினால், அது சால சிறந்தது ...சாதியின் அடிப்படையில் வழங்குவது என்பது மக்களாட்சிக்கு எதிரானது /// மதசார்பற்ற அரசு என்று சொல்லிக்கொள்ளும் இந்த மத்தியஅரசு , இது சாதி சார்ந்த அரசா ?
Rate this:
Share this comment
Cancel
sethu - Chennai,இந்தியா
17-டிச-201222:15:55 IST Report Abuse
sethu இப்படியும் ஒரு பொழப்பா ,யூதர்கள் அமெரிக்க சென்றதுபோல இந்தியாவில் ஏற்பட்டு விட்டது ,
Rate this:
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
17-டிச-201221:47:26 IST Report Abuse
Pugazh V சமூகத்தில் ஒதுக்கப்படுபவர்களுக்கு ஆறுதலான செய்தி. நன்றி கட்சிப் பாகுபாடின்றி இந்த மசோதாவை ஆதரித்த அனைவருக்குமே நன்றி நன்றி நன்றிகள். .
Rate this:
Share this comment
Cancel
sekar - Muscat,ஓமன்
17-டிச-201221:02:41 IST Report Abuse
sekar ஆட்டு மந்தைகளை நம்பி நாம் நமது தேசத்தை ஒப்படைத்துள்ளோம்...... சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டை முதலில் எதிர்த்தார்கள், பின்பு அனைத்துக் கட்சிகளின் அமோக ஆதரவு.....இதுவும் அப்படியே ஆகி விட்டது..... நான் அடிக்கிற மாதிரி அடிக்கிறேன், நீ அழுகிற மாதிரி நடி. நடுவுல இருக்கிறவர்கள் கண்ணில் மன்னைத்தூவிட்டு நாம நினச்சேத செய்வோம்....நல்ல நாடகம்......எப்படியோ நிறைய பேரு விருப்பு ஓய்வு எடுத்துட்டு போகப் போறது நிச்சயம்......தாழ்த்தப்பட்ட மக்களின் மீது பிற பிரிவினருக்கு இதனால் வெறுப்புணர்ச்சி வராதா?...இதற்குப் பிறகுமாவது மேலும் சலுகைகளை எதிர்பாராமல் பிரிவினை இல்லாத சூழல் உருவாக அனைவரும் முன்வர வேண்டும்....அரசியல் பொறியில் வெற்றி எனும் இரைக்காக வைக்கப் படும் சிறு உணவுத்துண்டு தான் இந்தச் சலுகைகள் யாவும்.....எப்படியோ இன்னும் சில காலத்தில் ஜாதி மாறும் மசோதாக்கள் நிறைவேறினாலும் ஆச்சர்யம் இல்லை......வாழ்க பாரதம்...
Rate this:
Share this comment
Cancel
Enrum anbudan - dammam,சவுதி அரேபியா
17-டிச-201220:14:59 IST Report Abuse
Enrum anbudan மதியழகன் இந்த இட ஒதிக்கீடு மூலம் இன்னும் ஒதுக்கப்படுவீர்கள், அது இந்த சட்டம் அமுல் ஆன பின்னாடி தெரியவரும். பணியில் இட ஒதுக்கிடு என்பது எல்லோராலும் ஒத்துக்கொள்ளக்கூடியது. ஆனால் பதவி உயர்வில் இட ஒதுக்கிடு என்பது பிச்சை எடுப்பது போன்றதாகும் so ..............................
Rate this:
Share this comment
Cancel
Sridhar Natarajan - Orlando,யூ.எஸ்.ஏ
17-டிச-201220:14:42 IST Report Abuse
Sridhar Natarajan பேசாமல் எல்லா வேலையையும் sc / st கு மட்டும் கொடுத்தால், பதவி உயர்விலும் அவர்கள் மட்டும் தான் இருப்பார்கள்.
Rate this:
Share this comment
Cancel
P.Mohan - chennai,இந்தியா
17-டிச-201219:23:42 IST Report Abuse
P.Mohan இப்படி செய்தால் என்ன all SC/ST க்கு ஒரு நாடு all BC க்கு ஒரு நாடு all OC க்கு ஒரு நாடு. After that no reservation ploicy இன் இந்திய. ஓக்கவா. No ஜாதி கலவரம்
Rate this:
Share this comment
Cancel
Swami - Chennai,இந்தியா
17-டிச-201219:12:40 IST Report Abuse
Swami பணி நியமனத்தில் இட ஒதுக்கீடு என்பதே தவறான விஷயம். கல்விக்கான இட ஒதுக்கீடும், போட்டி தேர்வில் சலுகைகளுமே நியாயமானவை. பணி நியமனம் மற்றும் பதவி உயர்வு, இரண்டுமே தகுதி மற்றும் திறமை அடிப்படையில் மட்டும் வழங்கப்பட வேண்டும். இல்லை எனில் வரும் ஆண்டுகளில் இந்தியா வல்லரசாவது என்பது கனவாகவே போய்விடும். நாட்டின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் திறமையான பணியாளர்களின் பங்களிப்பில் தான் ஏற்பட முடியும். குறிப்பிட்ட சாதியை சேர்ந்தவர் திறமை குறைந்தவராக இருந்தாலும் அவருக்கு உயர் பதவி வழங்கப்பட வேண்டுமெனக் கூறுவது கேலிக்கூத்துதான். இந்தியாவில் மற்றும் தான் இப்படியெல்லாம் நடக்க முடியும். பேய் ஆட்சி செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.