புதுடில்லி :டில்லியில், பஸ்சில் சென்ற மருத்துவக் கல்லூரி மாணவியை கற்பழித்த வழக்கில், பஸ் டிரைவர் உள்ளிட்ட இருவரை, போலீசார் நேற்றிரவு கைது செய்தனர். அவர்களிடமிருந்து, இரும்பு கம்பிகளையும் கைப்பற்றினர்.மருத்துவக் கல்லூரியில் படிக்கும், 23 வயது மாணவி ஒருவர், தன், நண்பருடன், டில்லி, சாகெட் பகுதியில் உள்ள, தியேட்டரில், நேற்று முன்தினம் இரவு, படம் பார்த்து விட்டு, பின்னர் இருவரும் துவாரகா பகுதிக்குச் செல்லும் பேருந்தில் ஏறினர். அப்போது, அந்த பேருந்தில் இருந்த, நான்கு பேர், திடீரென எழுந்து, மருத்துவக் கல்லூரி மாணவியை, பாலியல் பலாத்காரம் செய்தனர். பின், இருவரையும், பஸ்சிலிருந்து தூக்கி எறிந்தனர். டில்லி போலீசார், இந்த வழக்கு தொடர்பாக, பேருந்து ஓட்டுனர் உள்ளிட்ட இருவரை, நேற்றிரவு கைது செய்தனர். அவர்கள் பெயர், எந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் என்ற விவரங்கள் தெரியவில்லை.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.