புதுடில்லி:"குஜராத் சட்டசபை தேர்தலில், நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ., அரசு, மீண்டும் வெற்றி பெற்று, "ஹாட்ரிக்' அடிக்கும்' என, ஓட்டுப் பதிவுக்கு பின் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச மாநிலங்களில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இந்த இரு மாநிலங்களுக்கும் நடந்த சட்டசபை தேர்தலில், "எந்த கட்சிக்கு வெற்றி வாய்ப்பு' என, மீடியாக்கள் சார்பில், ஓட்டுப் பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் நேற்று நடத்தப்பட்டன. ஓட்டளித்து விட்டு, வெளியில் வந்தவர்களிடம், "யாருக்கு ஓட்டளித்தீர்கள்'என்ற கேள்வியை கேட்டு, அதன் அடிப்படையில், கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
"குஜராத் மாநிலத்தை பொறுத்தவரை, நரேந்திர மோடி தலைமையிலான, பா.ஜ., அரசு, மீண்டும் வெற்றி பெற்று, ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்யும்' என, பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் தெரிவித்துள்ளன.
"சி-ஓட்டர் மற்றும் டைம்ஸ் நவ்' நடத்திய கருத்துக் கணிப்பில், குஜராத்தில், பா.ஜ.,வுக்கு, 119 முதல், 129 தொகுதிகள் வரை கிடைக்கும் என்றும், காங்கிரஸ் கட்சிக்கு, 49லிருந்து, 59 தொகுதிகள் வரை கிடைக்கும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது."நியூஸ் 24' டிவி நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பில், பா.ஜ.,வுக்கு, 140 தொகுதிகளும், காங்கிரசுக்கு, 40 தொகுதிகளும் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. "ஹெட்லைன்ஸ் டுடே' நடத்திய கருத்துக் கணிப்பில், பா.ஜ., 118லிருந்து, 128 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும், காங்கிரஸ், 50லிருந்து, 56 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று கூறப்பட்டுள்ளது."ஏ.பி.பி., நியூஸ்' நடத்திய, கருத்துக் கணிப்பில், பா.ஜ.,வுக்கு, 116 தொகுதிகளும், காங்கிரசுக்கு, 60 தொகுதிகளும் கிடைக்கும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
இமாச்சலில் காங்.,:
அதேநேரத்தில், இமாச்சல பிரதேச மாநிலத்தை பொறுத்தவரை," பா.ஜ.,வுக்கு தோல்வி ஏற்படும்' என, கருத்துக் கணிப்புகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. "சி-ஓட்டர்' கருத்து கணிப்பில், காங்கிரசுக்கு, 30லிருந்து, 38 தொகுதிகளிலும், பா.ஜ.,வுக்கு, 27லிருந்து, 35 தொகுதிகளிலும் வெற்றி கிடைக்கும் என, தெரியவந்துள்ளது."சாணக்யா' சார்பில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில், காங்கிரசுக்கு, 40 தொகுதிகளும், பா.ஜ.,வுக்கு, 23 தொகுதிகளும் கிடைக்கும் என, கூறப்பட்டுள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
தங்கராஜா அவர்களே. ஏன் மோடியை ராஜபக்சேவுக்கு நிகராக ஒப்பிடுகிறீர்கள். ராஜபக்ஷே ஒரு இன வெறியன். இந்தியாவில் தலைசிறந்த மாநிலமாக குஜராத்தை மாற்றிக்காட்டிய பெருமை மோடி அவர்களையே சேரும். கர்நாடகா நமக்கு தண்ணீர் தரவில்லை என்றால் கன்னடர்களை தான் நாம் திட்ட வேண்டும். பி ஜே பியில் மோடி இருக்கின்ற காரணத்திற்காக அவரை நாம் திட்டுவது தவறு. முதல்வராக அவரது பணியை பாருங்கள். அருமை. சிறப்பாக செய்திருக்கிறார். அந்த அரக்கனை போல 1 லட்சம் மக்களை கொன்று குவிக்கவில்லை. ஈவு இரக்கமற்ற முறையில் நம் சகோதிரிகளை கற்பழித்து கொலை செய்யவுமில்லை. மோடி சிறந்த மனிதர்.
ராவணர்கள் கூட ஒரு 47 சதவீத வாக்கு பெற்று மூன்றாம் முறை ஆட்சி பிடிப்பார்கள் போல ... பொதுமக்களுக்கு எதிராய் ஆளும் வர்க்கமும், தொழில் அதிபர்களும் இனைந்தால் மூன்றாம் முறையும் மக்கள் விரோதிகள் ஆட்சி பிடிக்க முடியும் என்று தோணுகிறது - ராவணர்கள் கூட்டத்திற்கு ஒரு தலைவர்... இன்னும் 5 ஆண்டில் எத்தனை அதிகாரிகள் தலை வீழ போகிறதோ, எத்தனை ரயில் எரிய போகிறதோ.. எத்தனை பெண்கள் சந்து இல்லாமல் குடி நீர் இல்லாமல் தவிக்க போகிறார்களோ - இதான் சினிமா அரங்கில் கொட்டும் வியர்வை , மூச்சு அடைக்கும் காரியமல வாயு இதை வாங்கி கொண்டு விசில் காசு கொடுத்து அடித்து படம் பார்பதுபோல - குஜராத் ரசிகர்கள் மோடி படம் பார்க்க விருபுகிறார்கள் - இந்த மாயம் தீரும் நாள் அது தான் குஜராத் இன் விடிவு - அதற்கு இன்னும் 5 வருடம் பாவம் குஜராத்திகள் - நிஜம் தெரியாமல் - மாய திரையில் வாழ் நாளை வீணாய்-போக்கி- குஜராத் ஒரு தீவு போல ஆகி விட்டது அங்கு BJP இல்லை மோடி தான் ..அதற்கு BJP ஒரு போர்வை - எடியூரப்பா போல BJP மோடியுடன் கபடி விளையாட முடியாது - இது ஒருமாதிரி மாநிலம் ஒருமாதிரி மக்கள் ஒருமாதிரி மோடி ... இந்த ஒருமாதிரி வன்முறை , தீவிர வாதம் பிற பகுதிக்கு பரவாமல் இருக்க தடுப்பு நடவடிக்கை தேவை அதனை எப்படி யார் எடுப்பது என்பது தான் பொறுந்து இருந்து பார்க்க வேண்டும் ..
நீதி நீ தமிழ்நாட்டை விட்டு வெளிய போய் இருக்க மாட்ட. பாக்காமலே கருத்து சொல்லற. அங்க இருக்கற இந்து முஸ்லிம் தான் மோடிக்கு ஒட்டு போடறான். நீயும் நானும் இல்லை. அடுத்து ராவணன் தமிழன்னு சொல்லுவீங்க. இப்போ ராவண ஆட்சி சொல்லறீங்க. மோடி அளவுக்கு காங்கிரஸ் நல்லது பண்ணி இருந்தா இந்தியா முன்னேறி இருக்கும். அவங்க ராபர்ட் வதேரா மூலமும், ராஜ மு.க நு கொள்ளை கூட்டமா தான் இருக்காங்க. (கனிமொழி, களமாடி, மகாராஷ்டிரா பாசன ஊழல், நிலக்கரி ஊழல் என்று பட்டியல் பெருசு.) மோடி கை சுத்தம் அது தான் ஒட்டு போடறாங்க. குஜராத்தி உழைத்து சாப்பிட நினைக்கிரான்....
கருணாநிதியின் ஆட்சி அவலங்களை நினைத்துக் கொண்டே தூங்கப் போனால், இப்படித்தான் கனவு வரும். சார் எழுந்திருங்க.. இது வேற மேட்டர்.. இந்தியாவிலேயே முதன்மையான் மாநிலம் குஜராத் பற்றிய செய்தி. இங்கு டிவி, கேபிள், சினிமா, ரியல் எஸ்டேட்- ஹோல்சேல் குடும்பத் தொழில் அதிபர்கள் இல்லை. எந்த பத்திரிகை அலுவலகமும், ஊழியர்களை உயிருடன் வைத்து கொளுத்தப் படவில்லை. காலை நடைப்பயிற்சி செய்து உயிருடன் வரலாம். விழிமின்... எழுமின்... போய் அயராது உழைமின்.....
@புகழ்
தாங்கள் மோடியின் வெற்றியை ரசிக்கவில்லை. மதிக்கிறேன். ஆனால் தாங்கள் பதித்திருக்கும் கருத்து ஏற்புடையதல்ல. கர்நாடகாவில் ஆட்சியில் யார் இருந்தாலும், அவர்கள் முக்கியம் கொடுப்பது தங்கள் மாநில தேவைகளுக்கு தான் இருக்கும். இது ப.ஜ அல்லது காங்கிரஸ் இரண்டு கட்சிகளுக்கும் பொருந்தும். தமிழ் நாட்டில் மின் வெட்டு பிரச்னையில் மோடி என்ன செய்ய முடியும்? கடந்த இந்து ஆண்டுகளில் மின் உற்பத்தியில் வெறும் 400 MW சேர்க்கபட்டதிற்கு யார் காரணம்?

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.