சென்னை:"டெல்டா மாவட்டங்களை, பேரிடர் பாதித்த மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும்;விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
அவரது அறிக்கை:டெல்டா மாவட்ட பாசனத்திற்கு, 30 டி.எம்.சி., தண்ணீர் கொடுக்காவிட்டால், 45 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள மகசூல், பாதிக்கக் கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது. டெல்டா மாவட்டங்களை, "பேரிடர்' பாதித்த மாவட்டங்களாக அறிவிப்பதற்கு, தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
மின்வெட்டு, தண்ணீர் பற்றாக்குறை போன்ற காரணத்தால், கருகும் சம்பா பயிர்களுக்கு, ஏக்கர் ஒன்றுக்கு, 40 ஆயிரம் ரூபாய் வீதம், இழப்பீடு வழங்க வேண்டும்.தி.மு.க., எம்.பி.,க்கள் அனைவரும் ஒருங்கிணைந்து, பிரதமரைச் சந்தித்து, நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பினை, அரசிதழிலே வெளியிட வேண்டும் என, வலியுறுத்தவுள்ளோம்.இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.
இன்று ஆர்பாட்டம் கருணாநிதி பங்கேற்பு:
மின்வெட்டு பிரச்னையை கண்டித்து, தமிழகம் முழுவதும், இன்று தி.மு.க., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படுகின்றன. சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு, தி.மு.க., தலைவர் கருணாநிதி, காஞ்சிபுரத்தில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு பொருளாளர் ஸ்டாலின் ஆகியோர் தலைமை வகிக்கின்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
\\\\ அதை கெடுத்தார், இந்த தீயசக்தி அப்படின்னு பொழம்புரதுக்கா.. என்ன... கொஞ்சம் தெளிவா சொல்ல சொல்லுங்க... ஒன்னும் அவசரமில்லை... என்ன ஒங்க ஜெயா இப்போ சிறுதாவூரில் ரெஸ்ட் ல இருக்காங்க. இங்கே வந்தவுடன் சொல்ல சொல்லுங்க..என்ன..? பாவம் ரொம்ப அசதியா இருப்பாங்க....//// என்கிறார் திரு. முருகவேல் சண்முகம். உண்மைதான் அவர் செம்மொழி மாநாடு, மானாட மயிலாட என்றெல்லாம் மக்கள் பலனடையும் விதத்தில் பொழுதைக் கழிக்கவில்லை. பொறுப்பு மிக்க முதல்வர் பதவியில் இருக்கும்போது ஏற்காடு, மாமல்லபுரம் என்றெல்லாம் சென்று வசனம் எழுதிக் கொண்டு மக்கள் பிரச்னைகளை மறந்து திரியவில்லை. திமுக தலைவரும், திருவாரூர் எம்.எல்.ஏ. வும், மாஜி முதல்வருமாகிய கலைஞரைப் பார்த்து இந்நாள் முதல்வர் கற்றுக்கொள்ள வேண்டும். காவிரியில் ஒரு உருப்படியான தீர்ப்பைப் பெற்றாரே, அது தவறு "ஒற்றுமை, இறையாண்மை" என்றெல்லாம் பேசிப் பிரச்னையைத் திசை திருப்பி தற்போது "கலைக்க வேண்டும்" என்று உளறியிருக்க வேண்டும் என்ன செய்வது ஜே கத்துக் குட்டிதானே
\\\\ மொதல்ல..ஒங்க ஜெயா என்ன செய்ய போறாங்களாம் அத சொல்ல சொல்லுங்க பார்க்கலாம்....//// என்கிறார்கள் திமுக ஆதரவாளர்கள் ஏன்? தமது தலைவர் சொல்படி மத்திய அரசு நடக்கிறது,,,, மத்திய அரசிடமிருந்து மண்ணெண்ணெய் பெறுவதில் இருந்து மின்சாரம் பெறும்வரை திமுகவின் தலையீடு இருக்கிறது என்பதற்கு இவர்கள் தரும் ஒப்புதல் வாக்கு மூலம் "நாங்கள் குறுக்கே நிற்கிறோம் முடிந்தால் பெற்றுக் காட்டுங்கள்" என்று சவால் விடுகிறார்கள் இவர்களின் தலைவரைத்தான் நாம் தமிழினத் தலைவர் என்று அன்புடன் அழைக்கிறோம்
கட்டுமரம் சர்க்காரியா வழக்குகளினின்றும் விடுதலை பெற இந்திரா முன்வைத்த நிபந்தனைகளில் ஒன்று கபிணி அணை கட்டிக்கொள்ள கர்நாடகாவை அனுமதிக்க வேண்டும் என்பதாகும். மறு பேச்சுப் பேசாமல் ஒப்புக்கொண்டார் அண்ணல். எதற்கு? டெல்டா விவசாயிகளைப் பாதுகாக்கத்தான் அன்று முதல் காவிரி நீர் என்பது கானல் நீராகிப் போனது டெல்டா விவசாயிகள் கலைஞருக்கு நன்றிக் கடன் பட்டுள்ளார்கள் என்று திமுக வாசகர்கள் எழுதக்கூடும். கச்சத் தீவைத் தாரை வார்க்க மறு பேச்சுப் பேசக்கூடாது என்று மற்றொரு நிபந்தனை. அண்ணல் அதையும் ஒப்புக் கொண்டார். நேருவின் மகளே வருக நிலையான ஆட்சி தருக என்று சரணடைந்தார். எதற்காக? தமிழக மீனவர்களின் உரிமையை மீட்டெடுக்க
அம்மா அவர்கள் தானாகவே முன்வந்து விவசாயிகளுக்கு இழப்பீடு கொடுத்து விட்டால் எங்கே தன்னை மக்கள் மறந்து விடுவார்களோ என்று இவ்வாறு புலம்பி வருகின்றார். ஒருவேளை அம்மா அவர்கள் இழப்பீடு கொடுத்தால், தான் கேட்டுகொண்டதால் தான் கொடுத்தார் என பிதற்றி கொள்ளலாம் அல்லவா. அல்லது இவர் கேட்டதால் அம்மா அவர்கள் ஈகோ காரணமாக கொடுக்காமல் போனால் இதனை வைத்தே போராட்டங்கள் அறிவிக்கலாம் அல்லவா. அதற்காகத்தான் இவ்வாறு புலம்பி உள்ளார்.
செய்தி அரைகுறையாகவும் திரிக்கபட்டும் வெளியிடப்பட்டுள்ளது. ( அம்மா பண்ணுன அலப்பறையில ) தண்ணி வந்துடும் என்று வட்டிக்கு வாங்கி விவசாயம் செய்த விவசாயிகளில் 6 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இது மேலும் தொடர்வதற்கு முன் விவசாயிகளும் விவசாய சங்கங்களும் வைத்திருக்கும் கோரிக்கையான பேரிடர் பகுதியாக அறிவிக்க வேண்டும் ஏக்கருக்கு 40,000 ரூ வழங்க வேண்டும் ஆகியவற்றை தமிழக அரசு போர்கால அடிப்படையில் நிறைவேற்ற வேண்டும் என்பதே செய்தி. விவசாயியின் வாழ்கையில் விளையாடதீர்கள் என்று ஏற்கனவே பதிவு செய்திருந்தேன். அவன் சேற்றில் கால் வைத்தால்தான் நாம் சோற்றில் கை வைக்க முடியும்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.