சூரிய மின்சக்தி உற்பத்தியை மக்கள் இயக்கமாக மாற்றுங்கள்: முதல்வர் அறிவுறுத்தல்

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

சென்னை :"" மழை நீர் சேகரிப்பு திட்டத்தைப் போல், சூரிய மின்சக்தி உற்பத்தியை மக்கள் இயக்கமாக ஆக்க, மாவட்ட கலெக்டர்கள், தூண்டுகோலாக இருக்க வேண்டும்,'' என்று முதல்வர் ஜெயலலிதா, அறிவுரை வழங்கினார்.

சென்னையில், நடந்த கலெக்டர்கள், மாவட்ட எஸ்.பி.,க்கள் மாநாட்டில், "தொலை நோக்குத் திட்டம் -2023' ஐ, செயல்படுத்துவது தொடர்பாக, முதல்வர் ஜெயலலிதா பேசியதாவது: அத்தியாவசியப் பொருட்களின், விலை உயர்வு பிரச்னை மிகுந்த கவலையளிக்கிறது. விலை உயர்வை கட்டுப்படுத்தும் வகையில், பொது வினியோக திட்டத்தில், விலையில்லா அரிசி, பருப்பு, எண்ணெய் போன்றவை வழங்கப்பட்டு வருகின்றன. அனைத்து மாவட்டங்களிலும், தேசிய மக்கள் தொகை பதிவின் கீழ், விரல்ரேகை பதிவுடன் கூடிய மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி, நடந்து வருகிறது.அந்த பணி முடிந்ததும், பொது வினியோக திட்டத்திற்காக, அந்த தகவல்களை பயன்படுத்திக் கொண்டு, போலி குடும்ப அட்டைகளை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும்.


டெங்குக்கு அதிக கவனம்...:

அனைவருக்கும் மருத்துவ வசதி, என்ற இலக்கை அடையும் வகையில், " முதல்வர் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம்' துவக்கப்பட்டுள்ளது. குழந்தை இறப்பு, பேறுகால இறப்பு வீதம் போன்ற முக்கிய பிரச்னைகளில், கலெக்டர்கள் சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும்.சமீபத்தில் பாதிப்பை ஏற்படுத்திய, டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட எளிதில் பரவும் நோய்கள் விஷயத்தில், வேகமான நடவடிக்கை எடுக்க வேண்டும். பெண்களுக்கு, பள்ளியில் துப்புரவு வசதிகள் வழங்குவதில் கவனம் செலுத்த வேண்டும். கலெக்டர்கள், பள்ளிகள், விடுதிகள் உள்ளிட்டவற்றின் தூய்மை குறித்து அடிக்கடி ஆய்வு நடத்த வேண்டும்.


கண்காணிப்பு அவசியம்:

நகர்ப்பகுதி உள்ளாட்சி மன்றங்கள், திடக்கழிவுகளை கொட்டுவதற்கான இடங்களை தேர்வு செய்வதில், பிரச்னைகளை சந்தித்து வருகின்றன. குப்பைகளற்ற நகரங்களை உருவாக்க, பாதாள சாக்கடை, திடக்கழிவு மேலாண்மை திட்டங்களை உருவாக்குவது அவசியம்.நகர்ப்புற அடிப்படை கட்டமைப்பு வசதி திட்டங்களின் முன்னேற்றங்களை, மாவட்ட கலெக்டர்கள், தவறாமல் கண்காணிக்க வேண்டும். அனைத்து பணிகளையும் உரிய நேரத்தில் முடிப்பதற்கான வசதிகளையும் செய்துத் தரவேண்டும்.தமிழகத்தை திறந்த வெளியில் மலம் கழிப்பதில் இருந்து விடுவிக்க, மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட அனைவரும் பயன்படுத்தும் வகையில், போதிய கழிப்பிடங்களை ஏற்படுத்தி, அவர்களாகவே, வலிய செல்லச் செய்ய வேண்டும். திறந்த வெளியில் மலம் கழிப்பதை ஊக்குவிக்கக் கூடாது.


சூரிய மின் சக்தி:

"தமிழ்நாடு சூரிய மின்சக்தி கொள்கை-2012' சமீபத்தில் வெளியிடப்பட்டது. வரும், 2015ம் ஆண்டில், நாட்டை முன்னேற்ற, 3000 மெகாவாட் சூரிய மின்சக்தி உற்பத்தி செய்ய, இக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. இக் கொள்கை, தமிழகத்தை சூரிய மின் உற்பத்தியில் தலைமையகமாக மாற்றும் வேளையில், மின்சக்தி பாதுகாப்பு மற்றும் கரியமில வாயுவை அதிகரிக்கும் தூள் வெளியேற்றத்தை குறைக்கவும் உதவும்.மழை நீர் சேமிப்பு திட்டம் போல், சூரிய மின்சக்தி உற்பத்தியை மக்கள் இயக்கமாக செயல்பட, அனைத்து மாவட்ட கலெக்டர்களும் தூண்டுகோலாக இருக்க வேண்டும்.படித்த இளைஞர்கள் தொழில் முனைவோராக மாற்றுவதற்கான திட்டத்தை செயல்படுத்துவது குறித்து, கணகாணிக்க வேண்டும். தொலை நோக்குத் திட்டம் தமிழ்நாடு- 2023ன் இலக்கை அடைய அரசுக்கு உதவ வேண்டும்.இவ்வாறு முதல்வர் பேசினார்.


இன்றும்... நாளையும்... :

கலெக்டர்கள் மாநாட்டில், துறை செயலர்கள், மாவட்ட கலெக்டர்கள் கலந்து கொள்ளும் மாநாடு இன்று நடக்கிறது. இதில், மின்வெட்டு பிரச்னை, சூரிய மின் சக்தியை செயல்படுத்துதல், மருத்துவ காப்பீட்டுத் திட்டம், பயிர் இழப்பு பிரச்னை, குடிநீர் விநியோகம் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படுகிறது. போலீஸ் உயர் அதிகாரிகள், மாவட்ட எஸ்.பி.,க்கள் மாநாடு, நாளை நடக்கிறது. இதில், சட்டம்- ஒழுங்கை பராமரித்தல், போலீசாருக்கான தேவைகளை நிறைவேற்றுதல் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படுகிறது.

Advertisement


தொடர்புடைய செய்திகள்:


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (81)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
viswanathan - madurai,இந்தியா
18-டிச-201221:12:33 IST Report Abuse
viswanathan முதலில் ஒவ்வொரு ரேஷன் கார்டு இணைப்புடன் 300W சோலார் பேனல் இலவசமாக அளியுங்கள். அப்படி செய்தால் இத்திட்டம் மக்கள் திட்டமாக மாற்றப்படும்.
Rate this:
Share this comment
Cancel
N.KALIRAJ - VANIYAMBADI,இந்தியா
18-டிச-201218:07:40 IST Report Abuse
N.KALIRAJ மழை நீர் சேமிப்பு திட்டம்.....இப்போது...சூரிய மின் சக்தி திட்டம்......என்ன செய்வது.........பிடித்த முயலுக்கு மூன்றே கால்கள் தான்.......
Rate this:
Share this comment
Cancel
kamarud - ooty,இந்தியா
18-டிச-201217:53:12 IST Report Abuse
kamarud அதாவது மக்களே வேண்டியதை அவங்க காசிலே யே வாங்கி போட்டு மின்சாரம் உண்டாக்கி உபயோகிசுக்கணும் . Government மின்சாரம் கிடையாது அப்படிதானே
Rate this:
Share this comment
Cancel
T.C.MAHENDRAN - LUSAKA,ஜாம்பியா
18-டிச-201213:49:51 IST Report Abuse
T.C.MAHENDRAN :"" மழை நீர் சேகரிப்பு திட்டத்தைப் போல், சூரிய மின்சக்தி உற்பத்தியை மக்கள் இயக்கமாக ஆக்க, மாவட்ட கலெக்டர்கள், தூண்டுகோலாக இருக்க வேண்டும்,'' என்று முதல்வர் ஜெயலலிதா, அறிவுரை வழங்கினார். அம்மா நீங்க கலெக்டர்களை மாதத்திற்கு மூன்றுமுறை பந்தாடாமல் இருப்பீர்களா ?.
Rate this:
Share this comment
Cancel
Mohi - Chennai,இந்தியா
18-டிச-201213:47:17 IST Report Abuse
Mohi சொல்லவே இல்ல. எப்போ அம்மையார் உதய சூரியனை ஆதரிச்சாங்க.
Rate this:
Share this comment
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
18-டிச-201218:25:05 IST Report Abuse
தமிழ்வேல் உலகம் அழியப்போரதுக்கு இதுவும் ஒரு காரணம்......
Rate this:
Share this comment
Cancel
ANBE VAA J.P. - madurai,இந்தியா
18-டிச-201213:18:11 IST Report Abuse
ANBE VAA J.P. மழை நீர் தொட்டிகளின் இன்றைய நிலைமை என்ன என்பது இந்த முதல்வருக்கு தெரியவில்லையா ? அல்லது அந்த திட்டம் போல் ஆகட்டும் என்கின்ற ஆவலா? மின்சாரம் அரசு தருவதை விடுத்து மக்களே அவரவர்கள் உற்பத்தி செய்து கொள்ளுங்கள் என்று கூறுவதற்கு இவ்வளவு பெரிய ஆலோசனை கூட்டம் தேவையில்லாதது. இதை முதலில் அரசு செய்து வெற்றி கண்டு அதை மக்களுக்கு விநியோகிப்பது தான் ஒரு அரசின் கடமை. 3 மதத்தில் ஒளிர்ந்த தமிழ் நாடாக மாற்றி காட்டுவேன் என்று கூறி ஆட்சிக்கு வந்த நீங்கள் தான் இதற்கு பொறுப்பு
Rate this:
Share this comment
Cancel
Ding Tong - Thiruchy,இந்தியா
18-டிச-201212:27:41 IST Report Abuse
Ding Tong இரவெல்லாம் தூக்கமில்லாம இருட்டில் கொசுக்கடியில் கழித்தாலும் பகலில் சூரிய ஒளி இருப்பதால் கொஞ்சமாவது ஆறுதல் அடைகின்றோம். அதிலும் மின்சக்தி அது இதுன்னு கெடுத்துறாதிங்க. ஏன்னா உங்க ராசி அப்படி. மழை நீர் சேகரிப்புன்னு சொன்னிங்க மழையா காணோம். காற்றாலை அப்படின்னிங்க காத்த காணோம் காலையில சூரியன் வரும் அப்படின்ற தைரியத்துலத்தான் காலம் ஓடுது அதையும் கெடுத்துராதிங்க.
Rate this:
Share this comment
Arul - Chennai,இந்தியா
18-டிச-201213:20:46 IST Report Abuse
Arulநீங்களே ராசியில்லாம தானே பாவம் நாடுவிட்டு நாடு போயி கஷ்டபடுகின்றீர்கள். நீங்கல்லாம் ராசி பத்தி பேசலாமா நண்பா...
Rate this:
Share this comment
Cancel
christ - chennai,இந்தியா
18-டிச-201211:14:40 IST Report Abuse
christ அங்க சுத்தி, இங்க சுத்தி இப்போ மக்கள் தலையில் தான் விழ போகுதோ ?
Rate this:
Share this comment
Cancel
முருகவேல் சண்முகம்.. - சென்னை,இந்தியா
18-டிச-201211:08:29 IST Report Abuse
முருகவேல் சண்முகம்.. இந்த சோலார் மின்திட்டமென்பது.....நடுத்தரவர்க்கதிற்கு சாத்தியமில்லாதது... ஒரு சிறிய குடும்பத்திற்கு... அதாவது.. நன்கு tube லைட்( 40W) , பேன் 4 , Refrigerator ஒன்று டிவி 120W வைத்திருப்போருக்கு, மொத்தம் கிட்டத்தட்ட 5 KW மின்சாரம் தேவை படும். இந்த மின்திட்டத்தை, தங்கள் வீடுகளில் நிறுவ, இடம் தேவைபடுவதோடு... இதன் முதலீட்டு தொகையானது.. Rs 2.52 லட்சம், இதில் 30% மானியமுன்னுண்டு... . எல்லாம் போக.. கையிலிருந்து போடவேண்டியது Rs 1.80 லட்சம். மொத்தம் 20வருடங்கலுக்கு இது உழைக்குமேன்றாலும் கூட ஒரு Watt மின்சாரத்தின் அடக்க விலை Rs .7/- (கிட்டத்தட்ட. ), இது தவிர அவ்வபோது பராமரிப்பு செலவுகளும் உள்ளன..(battery ) ஆனால் அரசாங்க விலை ஒரு unit மின்சாரதிர்க்கானது. வெறும் 3 மூன்று ரூபாய் தான். இது சிறு மற்றும்,நடுத்தர மக்களுக்கு மிக கடினம். ஆனால் இதனை, மிக பெரிய வணிக வளாகங்களிலும், multi storage குடியிருப்புகளிலும் இதனை செய்ய சொல்லுவது நல்லது. அதவும் தவிர நகருக்கு வெளியே சிறு நகரம் மற்றும் கிராமங்களில் காலியிடங்களில் இந்த திட்டத்தை மொத்தமாக அரசே செயல்படுத்துவது சாத்தியம்.
Rate this:
Share this comment
Karkuvelrajan - chennai,இந்தியா
18-டிச-201218:18:00 IST Report Abuse
Karkuvelrajanமுருகவேல் குறிப்பிட்டுள்ள தொகை மிகைப்படுத்தப்பட்டதாக தெரிகிறது .. எனது சகோதரர் வீட்டில் 45000 ரூபாய்க்கு இதை பொருத்தியுள்ளனர்.. அவர்கள் refrigerator இல்லாமல் mixie உபயோகப்படுத்தி கொள்கிறார்கள்.. இப்பொழுது அடக்க விலையை கணக்கிட்டு பார்த்தால் இது ஒரு சேமிப்பாகவே தெரியும் .. மேலும் உலக வெப்பமயமாவதை தடுக்க நம்மாலானதை செய்யவும் முடியும்.. நன்றாக விசாரித்தால் இதனினும் கம்மி விலையிலும் இதை பொருத்தலாம் .....
Rate this:
Share this comment
NS நாயுடு - சீர் கெட்ட சென்னை,இந்தியா
18-டிச-201219:37:23 IST Report Abuse
NS நாயுடு5KW சோலார் பேணல்கள், சார்ஜர், பேட்டரி மற்றும் இன்வெர்ட்டர் எல்லாம் சேர்த்தால் ரூபாய் 5,00,000/- மாணிபம் போக மீதி 3,50,000/- ரூபாய் செலவாகும்....
Rate this:
Share this comment
Cancel
Giri - Chennai,இந்தியா
18-டிச-201211:07:48 IST Report Abuse
Giri Clever Decision by Honble CM,which could be compared with most of the Top Countries Leaders , who are all utilizing the Natural resources for the production of Power and Water for their national welfare as advised in "U.S Green Building Council".
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்