DISTRICT NEWS | நீர் நிலையை ஆக்கிரமித்து தார் ரோடு போட துணிச்சல் :தப்பில்லை என்கிறது, மாநகராட்சி நிர்வாகம்| Dinamalar

தமிழ்நாடு

நீர் நிலையை ஆக்கிரமித்து தார் ரோடு போட துணிச்சல் :தப்பில்லை என்கிறது, மாநகராட்சி நிர்வாகம்

Added : டிச 18, 2012 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
நீர் நிலையை ஆக்கிரமித்து தார் ரோடு போட துணிச்சல் :தப்பில்லை என்கிறது, மாநகராட்சி நிர்வாகம்

திருப்பூர் : சென்னை ஐகோர்ட் உத்தரவுப்படி, திருப்பூர் நொய்யல் ஆற்றை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடுகள், மாநகராட்சி கட்டடங்கள், கடந்தண்டு இடிக்கப்பட்டன. தற்போது, அதே பகுதியில், மாநகராட்சி தரப்பில் ஒன்பது லட்சம் ரூபாய் செலவில் தார் ரோடு அமைக்கப்
படுகிறது. "கட்டடங்கள் கட்டுவது தவறு; ரோடு போடுவது தப்பில்லை,' என, மாநகராட்சி அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.சென்னை ஐகோர்ட் உத்தரவுப்படி, 2011, நவ., 23ம் தேதி, திருப்பூர், நொய்யல் ஆறு அணைக்காடு பகுதியில், மூளிக்குளத்துக்கு செல்லும் வாய்க்கால் மற்றும் நொய்யல் ஆற்றை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 112 வீடுகள் இடிக்கப்பட்டன. இதேபோல், மாநகராட்சி சார்பில் 23.5 லட்சம் ரூபாய் செலவில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த சமுதாய நலக்கூடம் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவையும் இடிக்கப்பட்டன.
நீர் நிலைகளை பாதுகாக்க வேண்டிய அதிகாரிகளே, அரசு நிதியை வீணடித்து, நீர் நிலையை ஆக்கிரமித்து கட்டடம் கட்டியிருந்ததும், அது இடிக்கப்பட்டதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அரசு நிதியை வீணடித்த அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதோடு, நிதியை திரும்ப பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. அப்பிரச்னையை சமாளிக்க, அப்போதைய மாநகராட்சி அதிகாரிகள், "மாஜி' கவுன்சிலர் பெயரில், 23.5 லட்சம் ரூபாயை மாநகராட்சி கருவூலத்தில் திருப்பிச் செலுத்தினர். மீட்கப்பட்ட இடத்தில் வேலி அமைத்து பாதுகாப்பது குறித்து, பொதுப்பணித்துறையினர் கண்டுகொள்ளாமல், அறிவிப்பு பலகை மட்டும் வைத்தனர். அதனால், தனியார் ஆலை நிர்வாகத்தினர் உள்ளிட்ட பலர், முக்கிய வழித்தடமாக பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், வாய்க்கால் மற்றும் நொய்யல் ஆற்றை ஆக்கிரமித்து மாநகராட்சி சார்பில் ஒன்பது லட்சம் ரூபாய் செலவில் புதிதாக தார் ரோடு அமைக்கப்பட்டு வருகிறது. ரோட்டின் மறு பகுதியில் உள்ள தொழிற்சாலை கழிவு நீர், மூளிக்குளம் வாய்க்காலில் கலக்கும் வகையில் பெரிய அளவிலான குழாய்களும் அமைக்கப்பட்டுள்ளன. இப்பணியால், வாய்க்கால் முழுவதும் சிதைந்துள்ளது.ஏற்கனவே, 23.5 லட்சம் ரூபாயை திருப்பிச் செலுத்தி, "கை'யை சுட்டுக்கொண்ட அதிகாரிகள், மீண்டும் அதேபோன்ற தவறான செயலில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது, நீர் நிலையை ஆக்கிரமித்து, 60 அடி அகலத்தில் தார் ரோடு அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மாநகராட்சி மூன்றாவது மண்டல உதவி கமிஷனர் கண்ணனிடம் கேட்டபோது,""நீர் நிலைகளை ஆக்கிரமித்து கட்டடங்கள்தான் கட்டக்கூடாது; அணைக் காடு பகுதியில் வசிக்கும் மக்களின் வசதிக்காக, புதிதாக ரோடு அமைக்கப்படுகிறது. இதனால் பாதிப்பில்லை,'' என்றார். பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், "மீட்கப்பட்ட இடத்தில் மக்கள் வசதிக்காக ரோடு அமைப்பதாக
மாநகராட்சி தெரிவித்துள்ளது. எழுத்துப்பூர்வமாக அனுமதி வழங்கப்படவில்லை. மீட்கப்பட்ட இடத்தில் கம்பி வேலி அமைத்து, மரங்கள், செடிகள் நடவு செய்து, பூங்காவாக மாற்ற திட்டமிட்டுள்ளோம்,' என்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
செந்தில் - எரோடே,இந்தியா
19-டிச-201211:24:00 IST Report Abuse
செந்தில் மக்கள் தேர்ந்தெடுத்த மக்கள் பிரதிநிதி செய்யும் அற்புத செயல்.. வாழ்க ஜனநாயகம் .. மக்கள் ஆட்சி ஓங்குக...
Rate this:
Share this comment
Cancel
R.Saminathan - mumbai,இந்தியா
18-டிச-201212:17:30 IST Report Abuse
R.Saminathan சென்னை ஐகோர்ட் உத்தரவு சரியாக தெரிகிறது..இதற்க்கு ஆகும் செலவினை அரசு உன்னிப்பாக கவனிக்க வேண்டும்...இல்லை என்றால் பல பேர் மக்கள் பணத்தை ஏப்பம் விட்டு விடுவார்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை