Bribe in education department | பள்ளிக் கல்வித்துறையில் லஞ்சம் : தகவல் உரிமைச் சட்டத்தில் அம்பலம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பள்ளிக் கல்வித்துறையில் லஞ்சம் : தகவல் உரிமைச் சட்டத்தில் அம்பலம்

Updated : டிச 18, 2012 | Added : டிச 18, 2012 | கருத்துகள் (8)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement

கோவை : பள்ளியில் பணி புரியாத ஆசிரியரை, மற்றொரு பள்ளிக்கு இடமாறுதல் செய்து "சாதனை' புரிந்துள்ளது, கோவை மாவட்ட பள்ளிக் கல்வித்துறை. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற்றுள்ள இந்த தகவல், கோவை பள்ளிக் கல்வித்துறையில் இடமாறுதலுக்கு பணப்பட்டுவாடா நடந்து வருவதை அம்பலமாக்கியுள்ளது.

கோவை மாவட்டத்தில் ஆசிரியராக நியமனம் பெற, ஒவ்வொரு பள்ளிக்கும் ஒரு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பணம் கொடுக்க வசதியில்லாத ஆசிரியர்கள், வால்பாறை, ஆனைமலை, காடம்பாறை, ரொட்டிக்கடை உள்ளிட்ட மலைப்பள்ளிகளில் நியமிக்கப்படுகின்றனர். இப்பகுதிகளில் புலி, யானை நடமாட்டம் அதிகமாக இருப்பதே காரணம். ஆனாலும் வேறு வழியில்லாமல் இங்கு பணி புரிந்தாக வேண்டிய கட்டாயத்தில் ஏழை ஆசிரியர்கள் உள்ளனர். ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கவுன்சிலிங் நடைபெறும் போது, எப்படியாவது சமவெளிக்கு வந்து விடலாம் என்றால், அதற்கும் பேரம் உண்டு. சென்னை சென்று கவனிக்க வேண்டியவர்களை "கவனித்து' இடமாறுதல் உத்தரவு பெற்று திரும்பும் வரை, குறிப்பிட்ட காலிப் பணியிடத்தை மறைத்து வைத்திருக்க, கல்வி அலுவலகங்களில் பணிபுரியும் சம்பந்தப்பட்ட ஊழியருக்கு கணிசமான தொகை வழங்கப்படுகிறது.

இதனால் கவுன்சிலிங்கில் பங்கேற்றாலும், மலைப்பள்ளியில் பல ஆண்டுகளாக பணிபுரியும் ஆசிரியர்கள் அங்கேயே தொடர வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. குழந்தைகள் ஓரிடத்திலும், கணவர் வேறிடத்திலும் ஆண்டு கணக்கில் குடும்பமே பிரிந்து கிடக்க வேண்டிய பரிதாப நிலைக்கு பெண் ஆசிரியைகள் தள்ளப்படுகின்றனர். கோவை மாவட்ட பள்ளிக் கல்வித்துறையில் நடைபெறும் இடமாறுதல் முறைகேடுகளால் பாதிக்கப்பட்ட சங்கனூரை சேர்ந்த பிரேம்குமார் என்பவர், மாவட்டத்தில் உள்ள கணித காலிப் பணியிட விபரங்களை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கடந்த செப்., 17ல் பெற்றார். அதில், 23.7.2012ல் பொதுமாறுதல் ஆணை வழங்கப்பட்டவர்கள் பட்டியலில், "எம்.பானு சரஸ்வதி' எனும் ஆசிரியையின் பெயரும் இடம் பெற்றுள்ளது. இவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக காடம்பாறை அரசு மேல்நிலைப்பள்ளியில் பட்டதாரி கணித ஆசிரியை ஆக உள்ளார்.

ஆனால், இவர் வால்பாறை அரசு மேல்நிலைப்பள்ளியில் பணிபுரிவதாகவும், அங்கிருந்து காரமடை அரசு மேல்நிலைப்பள்ளிக்கு இடமாறுதல் செய்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. வால்பாறை மற்றும் காரமடை பள்ளிகளில் விசாரித்தபோது, பானு சரஸ்வதி எனும் பெயரில் எந்த ஆசிரியையும் இல்லை என தெரிய வந்துள்ளது. காடம்பாறை அரசு மேல் நிலைப்பள்ளியில் பணிபுரியும் ஆசிரியை எம்.பானுசரஸ்வதியிடம் கேட்டதற்கு, ""பட்டதாரி ஆசிரியை ஆக பதவி உயர்வு மூலம் காடம்பாறையில் நியமிக்கப்பட்டேன். கடந்த இரண்டு ஆண்டுகளாக போராடியும் இடமாறுதல் கிடைக்கவில்லை. கணவர் ஓரிடத்திலும் குழந்தைகள் பெற்றோரிடமும் உள்ளதால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன்,'' என்றார்.
ஆனால் புதிதாக சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் பிற மாவட்டங்களை சேர்ந்த ஆசிரியர்கள் சிலருக்கு, கோவை பள்ளிக ளில் நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

மலைப்பள்ளி ஆசிரியருக்கு இடமாறுதல் வழங்கியதுபோல் ஆவணங்களில் காண்பித்து விடுவதும், பணம் பெற்றுக் கொண்டு அந்த இடங்களில் தங்களுக்கு வேண்டிய ஆசிரியர்களை நியமித்து வந்துள்ளதும், தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் அம்பலமாகியுள்ளது. எனவே, தகுதி இருந்தும் இடமாறுதல் வழங்காமல் ஏமாற்றப்பட்ட ஆசிரியர்களும், கோர்ட்டில் வழக்கு தொடர ஆயத்தமாகி வருகின்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamilar Neethi - Chennai,இந்தியா
19-டிச-201215:41:11 IST Report Abuse
Tamilar Neethi இதுவரை தமிழகத்தில் இடம் மாறுதல் பெற்ற ஆசிரியர்கள் , அவர்கள் வங்கி கணக்கு , அவர்கள் கணவர் வங்கி கணக்கு , பணம் எடுத்த தேதி , பணி மாறுதல் கிடைத்த தேதி இவை CBI , CBCID மூலம் அலசபட்டால் , பணி மாறுதல் பெற்ற அத்தனை ஆசிரியர்கள் , அவர்களை கல்வி துறை அமைச்சர்கள் அதிகாரிகள் வசம் இட்டு செல்லும் இடைத்தரகர்கள் எல்லோரயும் கண்டுபிடித்து இதுவரை இடம் மாறுதல் மூலம் வாங்கிய லஞ்சம் வெளிவரும். சுமார் 3.5 லட்சம் கொடுத்து இடம் மாறுதல் பெறுவதாய் கேள்வி. கோடி கோடிகள் ... பாவம் உழைத்து உழைத்து இந்த ஆசிரியர்கள் நன்கொடை கொடுக்கும் நிலை.. நீதி , நேர்மை , சரித்திரம் , பூகோளம் , கணக்கு , விஞ்ஜானம் , கணனி எல்லாம் சொல்லிகொடுக்கும் இந்த ஆசான்கள் படும் அவதி பெரும் அவதி .. பிற அரசு வேலை என்றால் கொடுத்ததை திரும்ப வாங்கி கொள்ளலாம் ..இந்த ஆசிரியர்கள் என்ன பண்ணுவார்கள் //மனம் புழுங்கி வெந்து போவார்கள் ..பாவிகளா இந்த துறை மட்டுமாவது விட்டு வைக்க கூடாதா?? லஞ்சம் கொடிகட்டி பறக்றது தமிழகத்தில் ... இதனால்தான் இந்த ஆண்டு கல்வியியல் படிப்பிற்கு எவரும் விண்ணப்பிக்க மறுத்து இடம் காலியாய் கிடந்ததது??? இந்த வெந்த மனதுடன் இழந்த பணத்தினை நினைத்துகொண்டு எப்படி முழு மனதுடன் கரிசனைய்டன் பாடம் நடத்திட முடியும் ?? இது இப்படி என்றால் அரசு உதவி பெறும் பள்ளிகளில் முதலிலில் ஒரு பெரும் தொகை கொடுத்தால்தான் வேலை ??? இல்லை உறவுகளுக்கு இல்லை உத்வாகரைக்கு வேலை என்று ஆகி விட்டது ??? இது பொறுக்காமல் தனியார் கல்வி நிறுவனம் சென்றால் அங்கும் குறைந்த கூலி , மாணவர்களிடம் அதிக வசூல் கல்வி வியபாரம் - நிலம் கட்டிடம் கட்டி சேவை உள்ளதுடன் ஆரமிக்க பட்ட பல கல்வி கூடம்கள் இப்போது சாதி , மதம் , சொந்தம் பேசும் ஒரு கூட்டத்தின் பிடியில் ..தமிழக கல்வி முறை அரசியல்வாதி வசமும் அநியாயம் செய்வோர் வசமும் மாட்டிகொண்டு சீரழிகிறது - மீண்டும் காமராசர்கள் வந்தால் சீர்படுமா???? இல்லை இந்த அரசியல் , கல்வி வியபாரிகள் வசம் சிக்கி சீரழியுமா????காலம் தான் பதில் சொல்ல வேண்டும்
Rate this:
Share this comment
Cancel
G.SUBRAMANIAN.KUMBAKONAM - KUMBAKONAM ,இந்தியா
19-டிச-201211:06:54 IST Report Abuse
G.SUBRAMANIAN.KUMBAKONAM எவர் ஒருவர் மன உளைச்சல் ஆலகின்றரோ ...அவரால் சரிவர பணி சைய முடியாது ....????
Rate this:
Share this comment
Cancel
muthu Rajendran - chennai,இந்தியா
18-டிச-201212:59:51 IST Report Abuse
muthu Rajendran பல ஆண்டுகளுக்கு முன்பே மாவட்ட மாறுதல்களை கூட இயக்குனர் அலுவலகத்தில் தான் ஆணையிட வேண்டும். மாறுதல்களை கவனிக்க ஒரு தனி இணை இயக்குனர் பதவியை உண்டாக்கியது போன்ற நடவடிக்கைகள் மொத்த மாறுதல்களும் ஓரிடத்திற்கு வரவேண்டும் என்பதற்காக தானே ? கவுன்செலிங் லில் முக்கிய காலி இடங்களை கட்டாமல் ஒதுக்குவது. கேட்டால் பத்து இடங்கள் வரை காட்டவேண்டியதில்லை என்று உத்திரவு போடுவது எல்லாம் எதை காட்டுகிறது? ஆசிரியர்கள் முன்பெல்லாம் TNPSC மூலம் தான் தேர்ந்தெடுக்க பட்டார்கள். அதை TRB மூலம் என்று மாத்தியது எதை காட்டுகிறது ? கல்வித்துறையை அரசியல் வாதிகள தங்களுக்கு ஒரு காமதேனு போல மாற்றிகொண்டார்கள் என்ற செய்தி உண்மைதானா?
Rate this:
Share this comment
Cancel
R.Saminathan - mumbai,இந்தியா
18-டிச-201211:47:02 IST Report Abuse
R.Saminathan கோவை மக்களின் குழந்தைகள் இப்படியும் கஷ்டப்படுறாங்க, நிரந்தர கல்வி இல்லாமல் இருக்காங்க இந்த சேதியில் நன்றாக புரிகிறது,லஞ்சம் எப்போதும் ஒழியாது, மாணவ மாணவிகளுக்கு விலங்குகளிடம் இருந்து பாதுகாப்பு அளிக்க வேண்டும் தமிழகரசு...
Rate this:
Share this comment
Cancel
naagai jagathratchagan - mayiladuthurai ,இந்தியா
18-டிச-201205:26:44 IST Report Abuse
naagai jagathratchagan இம்மாதிரியான் இடமாறுதல்கள், போலியான இட நிரப்புதல்கள் ...தங்களுக்கு பணம் கொடுப்பவர்களை நியமிப்பது என்பது எல்லா ஆட்சியிலும் நடைபெறும் சாதாரண நிகழ்வே ...நிர்வாக இயந்திரத்தில் அரசியல் வாதிகள் தலையிட்டால் இது நடக்கத்தான் செய்யும் ...அப்படி தலையிடாமல் நடக்க எந்த கட்சியும் முன் வராது ...எல்லாவற்றிக்கும் .சட்டப்படி தீர்வு காண வேண்டுமென்றால் ...வழக்கு முடிவதற்குள் ஓய்வு பெற்றுவிடுவார்கள் ...
Rate this:
Share this comment
Cancel
Rajalakshmi - Kuwait City,குவைத்
18-டிச-201204:26:15 IST Report Abuse
Rajalakshmi மலைப்ரதேசத்தில் விலங்குகள் வசிப்பதுதான் சிரேஷ்டம். அங்கு போய் எதற்கு பள்ளிக்கூடங்கள் நிறுவ வேண்டும்?? பல விஷயங்களை நுணுக்கமாக கவனித்தால் மக்கள்தான் தங்கள் பிரச்சினைக்கு காரணம் என்று தெளிவாக விளங்குகிறது.
Rate this:
Share this comment
S S - Chennai,இந்தியா
18-டிச-201212:55:58 IST Report Abuse
S Sமலைபகுதியை ஒட்டியுள்ள கிராம மக்கள் ஒன்றும் விலங்குகள் அல்ல. அவர்களுக்கும் கல்வி அவசியமானது. அடுத்தமுறை இந்தியா வரும்பொழுது சற்று அந்த கிராமங்களை பாருங்கள், அவர்களது பிரச்சனைகள் எத்தகையது என்று உங்களுக்கு தெரியும்...
Rate this:
Share this comment
Rajalakshmi - Kuwait City,குவைத்
18-டிச-201217:14:50 IST Report Abuse
Rajalakshmiவனங்களை எல்லாம் அழித்து மக்கள் தொகை பெருகினால் மிருகங்களும் , பறவைகளும் எங்கே வசிப்பது ? Please don't put YOUR fabricated words into my mouth " மலை பகுதியை ஒட்டியுள்ள கிராம மக்கள் ஒன்றும் விலங்குகள் அல்ல. அவர்களுக்கும் கல்வி அவசியமானது." இப்படி ஏடாகூடமாக விதண்டாவாதம் செய்வோருக்கு என்றுமே தெளிவு பிறக்காது. நானும் கிராமம் எல்லாம் பார்த்து நன்கு அனுபவம் நிறைந்தவள்தான். Your comments betray your presumptuousness....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை