பருவமழை பொய்த்தது; தென்மாவட்ட கிராமங்களில் கடும் வறட்சி

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

மதுரை:தென் மாவட்டங்களில் பருவமழை பெய்யாதது, மின் வெட்டு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால் வறட்சி கோரத்தாண்டவம் ஆடுகிறது. மதுரை மாவட்டத்தில், தண்ணீர் பற்றாக்குறையால் வயல்களில் கருகி வரும் நெற்பயிர்கள், நாற்றுகளை கால்நடைகள் மேய்ந்து வருகின்றன.
பருவமழை பொய்த்தது
தமிழகத்தில், 2011ல் பருமழை ஓரளவு கைகொடுத்தது. இதனால், அணைகள், நீர்நிலைகளில் தேவையான அளவு தண்ணீர் தேக்கப்பட்டது. முறைவைத்து தண்ணீர் திறக்கப்பட்டதால் விவசாயப் பணிகள் நடந்தன. 2010 ஜூன் முதல் நவ., 25 வரை காற்றாலை மின் உற்பத்தி கைகொடுத்தது.
நாள் ஒன்றுக்கு, 4,500 மெகாவாட் மின் உற்பத்தி இருந்தது. இதனால், மின் வெட்டு தவிர்க்கப்பட்டு விவசாயப் பணிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டது.
இந்தாண்டு பருவமழை பொய்த்தது. பெயரளவுக்குக்கூட மழை பெய்யவில்லை. இதனால், அணைகளில் தண்ணீர் தேக்க வழியில்லாமல் போனது. காவிரியில் தண்ணீர் திறந்து விடாததால் மேட்டூர் அணை நீர் மட்டம் குறைந்தது.
இதனால், டெல்டா பாசனத்தை நம்பி இருந்த சேலம், திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட விவசாயிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
முல்லைப் பெரியாறு, வைகை அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யாததால் நீர்மட்டம் மளமளவென சரிந்தது. இதனால், மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் விவசாயப்பணிகள் நடக்கவில்லை.
தீவனமாகும் நெற்கதிர்கள்
மழை இல்லாததால் கிணறுகள் வறண்டு வருகின்றன. இதனால், கிணற்றுப்பாசனம் மூலமும் விவசாயப்பணிகள் நடக்கவில்லை. சில இடங்களில் பயிர்களை காக்க, லாரிகளில் தண்ணீரை விலை கொடுத்து வாங்கி பாய்ச்சுகின்றனர். கருகிய நெற்கதிர்களை காப்பாற்ற வழியில்லாததால், கால்நடைகளை மேய்ச்சலுக்கு விட்டுள்ளனர்.
நெல், கரும்பு உள்ளிட்ட பயிர்களை நடவு செய்த விவசாயிகள் டிச., 15க்குள் பயிர்க்காப்பீடு செய்திருக்க வேண்டும். பயிரிட்டு நஷ்டம் ஏற்பட்டுள்ள விவசாயிகள் குறித்து வேளாண்மைத்துறையினர் கணக்கெடுக்க உள்ளனர்.
இதன்படி, ஏக்கருக்கு, 10
ஆயிரம் ரூபாய் வரை நஷ்டஈடு கிடைக்க வாய்ப்புள்ளது.
இத்தொகை கிடைக்க ஆறு முதல் எட்டு மாதங்களாகும். பயிர்க்காப்பீடு செய்ய வசதியில்லாத சிறு விவசாயிகளுக்கு காப்பீடு தொகை கிடைக்காது. விவசாயிகள் நலன் கருதி சிறு, குறு விவசாயிகளையும் கணக்கில் சேர்த்து, நஷ்டஈடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R.Saminathan - mumbai,இந்தியா
18-டிச-201212:07:56 IST Report Abuse
R.Saminathan இந்த இழப்பிடுக்கு தமிழகரசு போதுமான பணத்தை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்,ஒரு ஏக்கரக்கு (25000) கொடுக்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்