சென்னை:பெண்களுக்கு, எதிராக நடைபெறும், சமூக அநீதிகள் மற்றும் வன்கொடுமைகளை எதிர்த்து போராடும், மகளிர் சுய உதவி குழுக்களுக்கு விருதுகள் வழங்கப்பட உள்ளன.
ஆண்டுதோறும், ஒரு லட்ச ரூபாய் வீதம், ஐந்து குழுக்களுக்கு,ரொக்க பரிசு வழங்கப்பட உள்ளது. இதற்காக, அனைத்து மாவட்ட ஆட்சியரிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம் மூலம், அனைத்து மாவட்டங்களிலும், மகளிர் சுய உதவி குழுக்கள் உருவாக்கப்பட்டு, பல்வேறு, வங்கி கடன்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
குழந்தை திருமணம், பெண் கல்வி, மது ஒழிப்பு, குழந்தை தொழிலாளர் முறை, பெண் வன்கொடுமை உள்ளிட்ட, பெண்களுக்கு எதிராக நடைபெறும், சமூக அநீதிகள் மற்றும் வன்கொடுமைகளை தடுக்க போராடும் குழுக்களுக்கு, விருதுகள் வழங்க பரிந்துரை செய்யுமாறு, கலெக்டர்களுக்கு, அரசு உத்தரவிட்டுள்ளது.
இதற்காக, கலெக்டர், மாவட்ட சமூக நல அலுவலர், கோட்டாச்சியர், திட்ட அலுவலர், முதன்மை கல்வி அலுவலர், எஸ்.பி., மற்றும் தன்னார்வ நிறுவனங்கள் அடங்கிய மாவட்ட அளவிலான தேர்வு குழுவையும், அரசு அமைத்துள்ளது.
இக்குழு, மாவட்டத்தில், சமூக அநீதிகளை எதிர்த்து போராடும் குழுக்களை, விருதுக்கு பரிந்துரை செய்யும். இதிலிருந்து, மாவட்ட ஆட்சியர், மூன்று குழுக்களை அரசுக்கு பரிந்துரைப்பார்.
இறுதியாக, தமிழ்நாடு மகளிர் நல மேம்பாடு நிறுவன தலைவர், அனைவரும் கல்வி திட்ட இயக்குனர், பொது சுகாதார இயக்குனர், சமூக நல துறை இயக்குனர், ஊரக மேம்பாட்டு துறை ஆணையர் உள்ளிட்டோர், அடங்கிய மாநில தேர்வு குழு, ஐந்து குழுக்களை தேர்ந்தெடுக்கும்.
ஆண்டுதோறும், ஒரு லட்ச ரூபாய் வீதம், ஐந்து குழுக்களுக்கு ரொக்க பரிசு வழங்கப்பட உள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.