சென்னை :"" மழை நீர் சேகரிப்பு திட்டத்தைப் போல், சூரிய மின்சக்தி உற்பத்தியை மக்கள் இயக்கமாக ஆக்க, மாவட்ட கலெக்டர்கள், தூண்டுகோலாக இருக்க வேண்டும்,'' என்று முதல்வர் ஜெயலலிதா, அறிவுரை வழங்கினார். சென்னையில், நடந்த கலெக்டர்கள், மாவட்ட எஸ்.பி.,க்கள் மாநாட்டில், "தொலை நோக்குத் திட்டம் -2023' ஐ, செயல்படுத்துவது தொடர்பாக, முதல்வர் ஜெயலலிதா பேசியதாவது: "தமிழ்நாடு சூரிய மின்சக்தி கொள்கை-2012' சமீபத்தில் வெளியிடப்பட்டது. வரும், 2015ம் ஆண்டில், நாட்டை முன்னேற்ற, 3000 மெகாவாட் சூரிய மின்சக்தி உற்பத்தி செய்ய, இக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. இக் கொள்கை, தமிழகத்தை சூரிய மின் உற்பத்தியில் தலைமையகமாக மாற்றும் வேளையில், மின்சக்தி பாதுகாப்பு மற்றும் கரியமில வாயுவை அதிகரிக்கும் தூள் வெளியேற்றத்தை குறைக்கவும் உதவும்.மழை நீர் சேமிப்பு திட்டம் போல், சூரிய மின்சக்தி உற்பத்தியை மக்கள் இயக்கமாக செயல்பட, அனைத்து மாவட்ட கலெக்டர்களும் தூண்டுகோலாக இருக்க வேண்டும்.படித்த இளைஞர்கள் தொழில் முனைவோராக மாற்றுவதற்கான திட்டத்தை செயல்படுத்துவது குறித்து, கணகாணிக்க வேண்டும். தொலை நோக்குத் திட்டம் தமிழ்நாடு- 2023ன் இலக்கை அடைய அரசுக்கு உதவ வேண்டும்.இவ்வாறு முதல்வர் பேசினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.