district news | பள்ளிக்கு ஒரே ஆசிரியர்: பாடம் நடத்துவதில் சிக்கல்| Dinamalar

தமிழ்நாடு

பள்ளிக்கு ஒரே ஆசிரியர்: பாடம் நடத்துவதில் சிக்கல்

Added : டிச 18, 2012 | கருத்துகள் (3)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
பள்ளிக்கு ஒரே ஆசிரியர்: பாடம் நடத்துவதில் சிக்கல்

வால்பாறை :வால்பாறை அருகே, பள்ளிக்கு ஒரே ஆசிரியர் இருப்பதால், ஐந்து வகுப்பு மாணவர்களுக்கும் பாடம் நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
வால்பாறை அடுத்துள்ளது சின்கோனா உபாசி(ஈட்டியார்). இங்குள்ள அரசு நலப்பள்ளியில் 42 மாணவர்கள் படிக்கின்றனர். ஒன்று முதல் ஐந்து வகுப்பு வரையுள்ள இந்த பள்ளியில் ஒரே ஒரு தலைமை ஆசிரியர் மட்டும் பணியில் உள்ளார்.
ஐந்து வகுப்புகளுக்கும் இவர் ஒருவரே பாடம் நடத்த வேண்டியுள்ளது. இப்பள்ளியில், எஸ்.எஸ்.ஏ.,சார்பில் 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய வகுப்பறை திறக்கப்படவில்லை. போதிய கட்டட வசதி இருந்தும், ஆசிரியர் பற்றாக்குறையால் மாணவர்களுக்கு பாடம் நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மேலும் தலைமை ஆசிரியர் எஸ்.எஸ்.ஏ.,பயிற்சிக்காக சென்றாலோ, விடுப்பில் சென்றாலே பள்ளிக்கு விடுமுறை விடவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து ஆதிதிராவிடர் நலத்துறை தனி தாசில்தார் ஜெயந்தியிடம் கேட்ட போது,""உபாசி அரசு நலப்பள்ளியில் ஆசிரியர் பணியிடம் காலியாக இருப்பது குறித்து, தலைமை ஆசிரியரிடம் இருந்து கடிதம் பெறப்பட்டு, மாவட்ட கலெக்டருக்கு நேரடியாக அனுப்பி வைக்கப்படும். விரைவில் புதிய ஆசிரியர்கள் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
nagasethu - mayiladuthurai,இந்தியா
19-டிச-201223:50:00 IST Report Abuse
nagasethu நாகை மாவட்டத்துல பல ஆதிதிராவிடர் நல பள்ளில பல மாசமா ஒரு ஆசிரியர் மட்டுமே பணி புரியிற அவலமான நிலையிருக்கு. யாருமே கண்டுக்கல. பாவம் அந்த ஒரு தலைமை அல்லது உதவி ஆசிரியர்.
Rate this:
Share this comment
Cancel
LAX - Trichy,இந்தியா
19-டிச-201216:26:16 IST Report Abuse
LAX இப்போது தேர்ந்தெடுத்த இடை நிலை ஆசிரியர்களில் ஒருவரை கூடவா இதுபோன்ற பள்ளிகளில் பணியமர்த்த முடியாது????
Rate this:
Share this comment
Cancel
R.Saminathan - mumbai,இந்தியா
18-டிச-201212:12:45 IST Report Abuse
R.Saminathan மாணவ மாணவிகளுக்கு கல்வி தாமதமாககூடாது,உடனடியாக ஆசிரியர்கள் இங்கு நிரப்பபட வேண்டும்,,.இதை அரசு கவனிக்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை