BJP to raise Delhi gang-rape case in Parliament | டில்லி டாக்டர் மாணவி கற்பழிப்பு: 4 பேர் கைது ; பார்லி.,யில் எதிர்கட்சிகள் கண்டனம் எழுப்பியது| Dinamalar

டில்லி டாக்டர் மாணவி கற்பழிப்பு: 4 பேர் கைது ; பார்லி.,யில் எதிர்கட்சிகள் கண்டனம் எழுப்பியது

Updated : டிச 18, 2012 | Added : டிச 18, 2012 | கருத்துகள் (45)
Advertisement
BJP to raise Delhi gang-rape case in Parliament

புதுடில்லி: டில்லியில் பஸ்சில் மருத்துவ கல்லூரி மாணவி ஒருவர் கற்பழிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக சட்டம் ஒழுங்கு மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கம் கேட்டு பா.ஜ., உள்ளிட்ட எதிர்கட்சியினர் பார்லி.,யில் குரல் எழுப்பினர். டில்லியில் பஸ்சில் சென்ற மருத்துவ மாணவியை ஒரு கும்பல் கற்பழித்து தாக்கி பஸ்சில் இருந்து தூக்கி வெளியே வீசி சென்று விட்டது. இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியிருக்கிறது.

இன்று லோக்சபா துவங்கியதும் கேள்வி நேரத்தை ஒத்திவைத்து இந்த விவகாரம் குறித்து விவாதிக்க நோட்டீஸ் வழங்கியது. ஆனால் சபாநாயகர் நிராகரித்தார். இதனால் கூச்சல் குழப்பம் நிலவியது.


ராஜ்யசபா ஒத்திவைப்பு :


ராஜ்யசபாவில் எழுந்த அமளி காரணாமாக அவை ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் மாணவி கற்பழிப்பு தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கைதுக்கு பஸ்சில் இருந்த ரகசிய காமிரா உதவியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்,
மாணவருக்கு ஆபரேஷன்:


இதற்கிடையில் கற்பழிக்கப்பட்ட மாணவிக்கும், உடன் இருந்த அவரது நண்பருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாணவருக்கு ஒரு ஆபரேஷன் செய்ய வேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். கற்பழிக்கப்பட்ட மாணவி இன்னும் மயக்கம் தெளியாமல் வென்டிலேட்டரில் வைக்கப்பட்டுள்ளார்.சுஷ்மா சுவராஜ் பேட்டி:

இந்த கற்பழிப்பு சர்வசாதாரணமாக நடந்து வருகிறது. இது மிக முக்கிய விஷயமாக கருதுகிறோம். அனைத்து உறுப்பினர்களும் பார்லி.,யில் எழுப்புவோம் என்றார். இந்த விவகாரம் தொடர்பாக மதியம் உள்துறை அமைச்சர் சுஷீல்குமார் ஷிண்டே விளக்கம் அளிப்பார் என தெரிகிறது,
போலீஸ் ஸ்டேஷன் முற்றுகை:

இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பும் கண்டனமும் தெரிவித்து டில்லி வசந்த்விகார் போலீஸ் ஸ்டேஷனை இப்பகுதி மாணவிகள் முற்றுகையிட்டனர். எதிர்ப்பு பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (45)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K.Balasubramanian - Reading RG5 1DG ,யுனைடெட் கிங்டம்
18-டிச-201217:35:46 IST Report Abuse
K.Balasubramanian டெல்லியில் பாதுகாப்பு ஐந்து நிலைகளில் மந்திரி பிரதானிகளுக்காக மட்டும் செயல் படுவதால் சாதாரண குடிமக்களுக்கு பாதுகாப்பு இல்லை. இந்த நிலை மாற வேண்டும். கலாச்சாரம் சீர் குலைந்து போகாமல் தடுக்கப்பட வேண்டும். தண்டனையில் இருந்து குற்றவாளிகள் தப்ப விடக்கூடாது.அரசியல் தலையீடுகள் அறவே அகற்றவும்.
Rate this:
Share this comment
Cancel
சகுனி - ஸ்ரீபெரும்புதூர்,இந்தியா
18-டிச-201217:14:38 IST Report Abuse
சகுனி ராத்திரி 11 மணிக்கி படம் பாத்துட்டு ப்ரெண்ட் கூட அரையும் கொறயுமா போனா ஏன் கற்பழிக்க மாட்டான் ... ஒரு நேரம் காலம் இல்ல ... மொதல்ல பொண்ணுங்கள திருந்த சொல்லுங்க ... அதுக்காக நான் கற்பழிச்சவனுக்கு வக்காலத்து வாங்குறேன்னு அர்த்தமில்ல ... அவன் செஞ்சது கண்டிப்பா தப்புதான்
Rate this:
Share this comment
Cancel
manicsiva - Singapore  ( Posted via: Dinamalar Android App )
18-டிச-201217:13:06 IST Report Abuse
manicsiva மிருகதனமான இந்த மனிதர்களை உடனே சுட்டு தள்ளவேண்டும்
Rate this:
Share this comment
Cancel
Murugan - chennai,இந்தியா
18-டிச-201216:40:16 IST Report Abuse
Murugan இவனுங்களுக்கு அடுத்த தேர்தல்ல எப்படி ஜெயிக்கணும் என்று பிளான் பண்ணி முதல் 5 ஆண்டுகள் போய்டுது இவனுன்ங்க எங்க சட்டம் ஒழுங்கை எப்படி சரி பண்ணுவானுங்க ......... மக்களுக்கு நல்லது பண்ணுங்கயா தானா வெற்றி பெறலாம்..
Rate this:
Share this comment
Cancel
Varad Raj - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
18-டிச-201216:20:09 IST Report Abuse
Varad Raj தண்டனைகள் கடுமையானால்தான் குற்றங்கள் குறையும்... சவ்தி அரேபியாவில் உள்ளது போல இந்தியாவில் பொது இடத்தில வைத்து தண்டனை தரவேண்டும் அப்போதுதான் குற்றசெயலில் ஈடுபடுவோர் எண்ணிக்கை பயம் காரணமாக குறையும்
Rate this:
Share this comment
Cancel
Baskaran Kasimani - Singapore,சிங்கப்பூர்
18-டிச-201215:32:56 IST Report Abuse
Baskaran Kasimani பாராளுமன்றமே ஜனநாயக கற்பழிப்பு செய்துகொண்டிருக்கும் பொழுது கற்பழிப்பு என்பது அவர்களுக்கு ஒரு சின்ன விசயம். எத்தனை கூட்டத்தொடர்கள் வீணடிக்கப்பட்டன? எத்தனை மசோதாக்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளன? ஐந்து பத்து திருடியவர்கள் சிறையிலும், கோடி கோடியாக நாட்டை கொள்ளை அடித்தவர்கள் ஜாலியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்.
Rate this:
Share this comment
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
18-டிச-201217:43:30 IST Report Abuse
Nallavan Nallavanஒரு நல்ல கருத்தைச் சொன்ன உங்களுக்கும் விரலிறக்கங்கள் அளிக்கப்படுகின்றன...
Rate this:
Share this comment
Cancel
sami annachi - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
18-டிச-201215:20:55 IST Report Abuse
sami annachi கற்பழிப்பு செய்த இந்த ஓநாய்களை நடுரோட்டில் ஆல குழிதோண்டி உள்ளே நிற்கவைத்து வருவோரும் போவோரும் கல்லால் அடித்து கொள்ளவேண்டும் இந்த சம்பவம் இனி வரும் காலங்களில் பிறருக்கு பாடம்மாக அமையவேண்டும்
Rate this:
Share this comment
Cancel
Er. S. ARJUNAN - Jeddah,சவுதி அரேபியா
18-டிச-201214:59:08 IST Report Abuse
Er. S. ARJUNAN சட்டம் தன கடமையை செய்யும் என்று சமாளிக்காமல் encountar போட்டு தள்ளுங்க. கோர்ட் கேஸ் என்கிற வகையில் அரசு பணம் மிச்சம், மனித உரிமை குறுக்கிட்டா அவங்களை தூக்கி ஜெயில் ல போடுங்க.
Rate this:
Share this comment
Cancel
ANBE VAA J.P. - madurai,இந்தியா
18-டிச-201214:37:49 IST Report Abuse
ANBE VAA J.P. இந்திய திருநாட்டின் சட்டம் ஒழுங்கு .,மனிதாபிமானம் சீர் குலைந்து கொண்டிருக்கின்றது மத்திய அரசு துபாயில் கொண்டுள்ளது நடு வீதியில் மற்றவர்கள் பயம் கொள்ளும்படி தூக்கிலிடுங்கள் அந்த கயவர்களை மரண தண்டனையை எதிர்க்கும் மனித உரிமைகள் அமைப்பு இப்போது எங்கு சென்றுள்ளனர் என்ன செய்து கொண்டுள்ளனர் ?எதை புடுங்கி கொண்டுள்ளனர் ?
Rate this:
Share this comment
Cancel
sekar - Muscat,ஓமன்
18-டிச-201214:32:03 IST Report Abuse
sekar இதில் விவாதம் செய்யவோ, அமளியில் ஈடுபடவோ என்ன இருக்கிறது....குற்றங்களுக்கான தெளிவான ஆதாரங்கள் உள்ள நிலையில் மிகக் கடுமையான தண்டனைகள் பகிரங்கமாக நிறைவேற்றப் பட வேண்டும்.....நமது நாட்டில் அனைத்துத் துறைகளிலும் பெண்கள் முன்னேறி வரும் இதே வேளையில் பெண்களுக்கெதிரான வன்முறைகளும் வளர்ந்து வருவதைக் களைந்தே தீர வேண்டும்....அம்மாநில முதல்வரும் பெண்ணாக இருக்கும் பட்சத்தில் அதற்கான தீவிர நடவடிக்கைகள் எடுத்தேயாக வேண்டும்.....இவர்களைப் போன்ற மனிதத்தன்மையற்ற குற்றம் புரிந்தவர்கள் வாழ்ந்தென்ன லாபம்...சமூக சீர்கேடேயன்றி வேறொன்றுமில்லை....சவுதி அரேபியாவில் நிறைவேற்றப்படும் தண்டனை இவர்களுக்கு வழங்கப் பட வேண்டும்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை