புதுடில்லி : குற்றவாளிகளுக்கு கீழ் கோர்ட்டுகளில் வழங்கப்படும் தண்டனைகள் மிகவும் பலவீனமாக இருப்பதே இந்திய நீதித்துறையின் மிகப் பெரிய குறைபாடு என சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது. மேலும் இந்திய சட்டங்களில் குறைபாடுகள் அதிகம் இருப்பதாகவும் சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது. குற்றவாளிகளுக்கு அளிக்கப்படும் தண்டனைகள் அனைத்தும் நீதிபதியின் இதயத்தில் இருந்து வழங்கப்பட வேண்டும். ஆனால் இந்தியாவில் நீதித்துறை நிர்வாகம் பலவீனமாக உள்ளதாகவும், வழக்கு விசாரணையின் போது கீழ் கோர்ட்டுகள் வெறும் தண்டனைகள் மட்டுமே வழங்குவதாகவும், தண்டனைக்கு பிறகு குற்றவாளிகள் திருந்துவதற்கு வழி ஏற்படுத்தி தருவதாக இல்லாததே நமது நீதித்துறையின் குறைபாடு எனவும் அப்தாப் ஆலம் மற்றும் ரஞ்சனா பிரகாஷ் தேசாய் உள்ளிட்ட நீதிபதிகள் அடங்கிய சுப்ரீம்கோர்ட் பெஞ்ச் தெரிவித்துள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.