Delhi gang-rape: Rapists wanted to 'teach girl a lesson', say police sources | மாணவிக்கு சரியான பாடம் கற்பிக்கவே பாலியல் பலாத்காரம்: குற்றவாளி பகீர் வாக்குமூலம்| Dinamalar

மாணவிக்கு சரியான பாடம் கற்பிக்கவே பாலியல் பலாத்காரம்: குற்றவாளி பகீர் வாக்குமூலம்

Added : டிச 18, 2012 | கருத்துகள் (13)
Advertisement
மாணவிக்கு சரியான பாடம் கற்பிக்கவே பாலியல் பலாத்காரம்: குற்றவாளி பகீர் வாக்குமூலம் Delhi gang-rape: Rapists wanted to 'teach girl a lesson', say police sources

புதுடில்லி: தனது ஆண் நண்பரை காப்பாற்ற முயன்ற பெண்ணுக்கு, சரியான பாடம் கற்பிக்கவே பாலியல் பலாத்காரம் நிகழ்த்தப்பட்டதாக, இச்சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளி வாக்குமூலமாக கூறியுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். கடந்த ஞாயிறன்று இரவு டில்லி முனிர்கா பகுதியிலிருந்து துவாரகா நோக்கி சென்ற பஸ்சில், தனது ஆண் நண்பருடன் பயணித்த பெண், 6 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக பஸ் டிரைவர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இருவரை போலீசார் தேடி வருகின்றனர். டிரைவரை 5 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட் அனுமதி வழங்கியுள்ளது.

இந்நிலையில், சம்பவம் குறித்து போலீசார் விசாரணையில் குற்றவாளி அளித்த வாக்குமூலத்தில், பஸ் டிரைவர் ராம் சிங், தனது சகோதரரின் பஸ்சை எடுத்துக்கொண்டு தனது நண்பர்களுடன் ஜாலி டிரிப் கிளம்பியுள்ளார். பஸ்சில் டிரைவர் மற்றும் அவரது நண்பர்கள் மட்டுமே இருந்துள்ளனர். பஸ் முனிர்கா பஸ் ஸ்டாப் அருகே வந்த போது அங்கு இளம் பெண் ஒருவர் தனது ஆண் நண்பருடன் நின்று கொண்டிருப்பதை பார்த்த டிரைவர் அங்கு பஸ்சை நிறுத்தி, துவாரகாவிற்கு வருகிறீர்களா என்று கேள்வி எழுப்பியுள்ளனர். இளம் பெண்ணும் அவரது ஆண் நண்பரும் பஸ்சில் ஏறிய சில நிமிடங்களில் ஆண் நண்பருக்கும், அந்த கும்பலுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த நேரத்தில் இளம் பெண்ணுடன் என்ன செய்கிறாய் என கும்பல் கேள்வி எழுப்ப, அதற்கு நண்பர் பதிலளிக்க, ஒரு கட்டத்தில் கும்பல் ஆண் நண்பரை தாக்க ஆரம்பித்துள்ளது. இதைத் தடுக்க இளம்பெண் கடுமையாக முயன்றுள்ளார். இதையடுத்து, கும்பலின் கோபம் இளம்பெண்ணை நோக்கி திரும்பியுள்ளது. அந்த பெண்ணிற்கு சரியான பாடம் கற்பிக்கவே பாலியல் கொடூரத்தை அரங்கேற்றியுள்ளது அந்த கும்பல். இவ்வாறு குற்றவாளி வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர்.

கும்பல் இளம்பெண்ணை பஸ்சில் ஏற்றுவதற்கு முன்பாக, டில்லி ஆர்.கே. புரம் செக்டர் 4ல் கார்பென்டர் ஒருவரை பஸ்சில் ஏற்றி, அவரிடமிருந்து ரூ. 8 ஆயிரத்தை பிடுங்கிக்கொண்டு, இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி அருகே பஸ்சில் இருந்து மிரட்டி இறக்கி விட்டுள்ளார்கள். சம்பவம் குறித்து கேள்விப்பட்ட அந்த நபர் தற்போது போலீசில் புகார் அளித்துள்ளார். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ravichandran - dar salam ,தான்சானியா
19-டிச-201212:10:10 IST Report Abuse
Ravichandran இவர்களுக்கு போதிய தண்டனை என்றால் எனக்கு தெரிந்து கோர்ட்டுக்கு செல்லும் வழியில் போலீசாரை தாக்கிவிட்டு தப்பித்தனர் என்று என்கவுன்டர் செய்வது தான். பஸ்ஸை எடுத்து கொண்டு ஜாலி டூர் போய் பயணிகள் பஸ் போல் காட்டி பயணிகளை ஏற்றி பெண்ணை கற்பழித்து துக்கி விசும் அளவுக்கு டெல்லி இருக்கிறது என்றால், அங்கெ சட்டம் ஒழுங்கு, நிர்வாகம், என்ன மாதிரி ஆணிய புடுங்குதுன்னு சோனியாவின் அல்லக்கை ஷீலா தீட்சித் தான் சொல்ல வேண்டும்
Rate this:
Share this comment
Cancel
arabuthamilan - Manama,பஹ்ரைன்
19-டிச-201211:05:12 IST Report Abuse
arabuthamilan மனிதர்கள் மனம் மாற வேண்டும். ஆளுபவர்களை குறை சொல்லவதில் ஒரு பயனும் இல்லை.
Rate this:
Share this comment
Cancel
Krish - delhi,இந்தியா
19-டிச-201209:06:30 IST Report Abuse
Krish இந்த இளம் ஜோடியினர் ஒரு வேளை கணவன் மனைவியாக இருந்தாலும் கூட இந்த மிருக வெறி கும்பல் இப்படித்தான் நடந்து கொண்டிருக்கும்.. டில்லி போலீஸ் தனது கையாளாக தனத்தை மறைக்க இது போன்ற வாக்கு மூலங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது.... டில்லி போலீஸ் இதை நியாயபடுத்துவதன் மூலம் தன்னை மேலும் கலங்க படுத்தி கொண்டுள்ளது..
Rate this:
Share this comment
Cancel
R.BALAMURUGESAN - Muscat,ஓமன்
19-டிச-201208:55:27 IST Report Abuse
R.BALAMURUGESAN ...இது போன்ற மிருகங்களிடம் இருந்து, தங்களை பாதுகாத்துக்கொள்ள பெண்கள்தான் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்... இரவு நேரங்களில் ஆண் நண்பர்களுடன் ஊர் (ஜாலிக்காக...) சுற்றுவதை நிறுத்த வேண்டும்... ஆபத்து வந்தபின் அழுது புலம்புவதைவிட, வரும்முன் காப்பதும், வராமல் தடுப்பதும்தான் புத்திசாலித்தனம்... எந்த நேரத்திலும் ஆண்களைவிட பெண்களுக்குத்தான் ரிஸ்க் அதிகம், என்பதை உணர்ந்து தற்காப்பாக நடந்து கொள்ள பழக வேண்டும்... இது இப்போதைய காலகட்டத்தில் மிக மிக முக்கியமான ஒன்று...
Rate this:
Share this comment
Cancel
Swaminathan Nath - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
19-டிச-201208:51:15 IST Report Abuse
Swaminathan Nath இதில் எந்த கட்சியும் குறை சொல்ல கூடாது, தவறு செய்தவர்களை தண்டிக்க வேண்டும், ....................இதில் அரசியல் ஒன்றும் இல்லை
Rate this:
Share this comment
Cancel
Madukkur S M Sajahan - Madukkur,இந்தியா
19-டிச-201207:45:13 IST Report Abuse
Madukkur S M Sajahan அறிமுகம் இல்லாத நபர்களிடம் உதவி கேட்டால் இப்படிதான் நடக்கும்.இந்த பெண்ணுக்கும் "வாய்" சற்று நீளம் போல தெரிகின்றது.கூடா நட்பின் விளைவு
Rate this:
Share this comment
Cancel
kamarud - ooty,இந்தியா
19-டிச-201206:56:48 IST Report Abuse
kamarud மாணவிக்கு பாடம் கற்பிக்க கொடூரம் செய்தவர்களுக்கு சட்டம் சரியான பாடம் கற்பிக்க வேண்டும்
Rate this:
Share this comment
Cancel
Skv - Bangalore,இந்தியா
19-டிச-201206:24:01 IST Report Abuse
Skv வெறிபிடிச்ச இந்த நாய்களை சொறி நாய்களால் கடிச்சு குதர வைச்சு சாவடிக்கணும்.
Rate this:
Share this comment
Cancel
Guru - Batam,இந்தோனேசியா
19-டிச-201205:39:59 IST Report Abuse
Guru உங்களுக்கு சரியான பாடம் சொல்ல ஒரு சிறப்பு சட்டம் இல்லையே என்பது தான் என் வருத்தம்
Rate this:
Share this comment
Cancel
என்னுயிர்தமிழகமே - hyderabad,இந்தியா
19-டிச-201203:44:31 IST Report Abuse
என்னுயிர்தமிழகமே வாழ்க காங்கிரஸ் தொண்டு, வளர்க இந்த கலாசாரம் அது ஆளும் மாநிலங்களில்
Rate this:
Share this comment
Thamizhan - CHENNAI,இந்தியா
19-டிச-201205:57:11 IST Report Abuse
Thamizhanதூ இதுதான் உங்கள் நாட்டு மக்களின் பண்பாட்டின் நிலை என்பதை முதலில் உணர்ந்துகொள்,எந்த அரசியல் கட்சியையும் குறை சொல்லாதே,எல்லோரும் நீ எப்படியோ அதைத்தான் பயன்படுத்திக்கொள்கிறார்கள்....
Rate this:
Share this comment
மதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ
19-டிச-201206:15:43 IST Report Abuse
மதுரை விருமாண்டிஇவருக்கு பாடம் கற்பிக்க கத்திரி ஒன்று போதும்......
Rate this:
Share this comment
Rajaram Govindan - chennai,இந்தியா
19-டிச-201210:45:02 IST Report Abuse
Rajaram Govindanகுற்றிவாளிகளின் கருத்து ஏற்புடையதல்ல. அவர்களை அந்தமான் நாடு கடத்த வேண்டும்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை