புதுடில்லி:"தொழில் அதிபர்கள், அரசியல்வாதிகள், அமைச்சர்கள், உயரதிகாரிகள் ஆகியோர், மானிய விலையில், சமையல், "காஸ்' சிலிண்டர் பெறுவதை தவிர்க்க வேண்டும். சந்தை விலைக்கேற்ப, சிலிண்டர்களை வாங்குவதால், அவர்களுக்கு, பெரிய இழப்பு எதுவும் ஏற்பட்டு விடாது' என, பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்து உள்ளன.
"சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளதால், மானிய விலையில் வழங்கப்படும், சமையல், "காஸ்' சிலிண்டர்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும்' என, பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் வலியுறுத்தின.இதையடுத்து, "மானிய விலையில், குடும்பம் ஒன்றுக்கு, ஆண்டுக்கு, ஆறு சிலிண்டர்கள் மட்டுமே வழங்கப்படும்' என, மத்திய அரசு அறிவித்தது. இதற்கு, கடும் எதிர்ப்பு எழுந்ததை அடுத்து, மானிய விலை சிலிண்டர்களின் எண்ணிக்கையை, ஒன்பதாக அதிகரித்தது.
இந்நிலையில், மானிய விலையில், "காஸ்' சிலிண்டர்களை வழங்குவதால், தங்களுக்கு, பெரும் இழப்பு ஏற்படுவதாகக் கூறும், பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள், சில ஆலோசனைகளை முன்வைத்து உள்ளன.
இதுகுறித்து, பொதுத் துறை எண்ணெய் நிறுவனம் ஒன்றின், மூத்த அதிகாரி ஒருவர், கூறியதாவது:மானிய விலையில், ஆண்டுக்கு, ஒன்பது சிலிண்டர்கள் வழங்குவதால், ஒவ்வொரு குடும்பத்துக்கும், ஆண்டுக்கு, 3,000 ரூபாய் முதல், 4,500 ரூபாய் வரை, பலன் கிடைக்கும். இந்த இழப்பை, மத்திய அரசும், பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களும் தான், ஏற்க வேண்டும்.ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கு, இந்தத் தொகை, மிகவும் முக்கியமானது. அவர்களை பொறுத்தவரை, இது, கணிசமான தொகையே. இந்த மானியத்தை பெறுவதற்கான முழு தகுதியும், அவர்களுக்கு உண்டு.
ஆனால், முன்னணி அரசியல்வாதிகள், தொழில் அதிபர்கள், அமைச்சர்கள், உயரதிகாரிகளுக்கு, ஆண்டுக்கு, 4,500 ரூபாய் என்பது, பெரிய தொகை அல்ல. மேல்தட்டு மக்கள், குடும்பத்துடன் ஒருவேளை உணவு சாப்பிடுவதற்காக, ஓட்டலுக்குச் செல்லும்போது, இந்தத் தொகையை விட, அதிகம் செலவு செய்கின்றனர்.எனவே, மானிய விலையில், சமையல், "காஸ்' சிலிண்டர்களை பெறுவதை, அவர்கள் தவிர்க்க வேண்டும். தாங்களாகவே முன்வந்து, "மானிய விலை சிலிண்டர்கள், எங்களுக்கு வேண்டாம்' என்பதை, சம்பந்தப்பட்ட, "காஸ்' ஏஜன்சிகளிடம், அவர்கள் தெரிவிக்க வேண்டும். மானிய விலை சிலிண்டருக்கு பதிலாக, அவ்வப்போதைய சந்தை விலைக்கேற்ப, சிலிண்டர்களை அவர்கள் பெறலாம். இவ்வாறு, அந்த அதிகாரி கூறினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
...இது மாநில முதல்வர்களுக்கும் சேர்த்துதான்... ஆதலால் முதல்வர்களும் தங்கள் மற்றும் தங்களின் தோழிகளின் பெயர்களில் இருக்கும் இணைப்புகளை எல்லாம் சரி செய்து, முறைபடி நடந்துகொள்ளலாமே... மக்களே எண்ணை நிறுவனங்களின் வெப் சைட்டில் போய் பாருங்கள், உண்மைகள் நன்றாகப் புரியும், தெரியும்... இதை வேறு ஒரு பத்திரிக்கையும் வெட்ட வெளிச்சமாக வெளியிட்டுள்ளது... நல்ல சூடு உள்ள அரசியல்வாதிகள் அனைவரும் அவர்களாகவே முன்வந்து இதை செய்திருக்க வேண்டும்... சரி...சரி... இப்போவாவது செய்ய முயற்சி எடுங்கள்...
ஆலவும்தேரியலே மக்கள் கஷ்டமும் புரியாத அரசியல்வாதிக இருந்தென்ன லாபம் மேல்தட்டினர்வேனா ஹோட்டலுக்கு போலாம் லக்ஷத்துக்கும் சிலவு செஞ்சு தின்னலாம் அதிகம் இருப்பது நடுத்தரவர்கமே கடவுள் அருளால் ரெண்டு அல்லது மூன்ருபில்லைகதான் பெத்துகிராக அதுகளைவலக்கவே அவ்ளோ கஷ்டம் இதுலே ஹோடேலாவது ஒன்னாவது, வடநாட்டிலே சூக்கரொடி தால் சப்ஜிதான் மெனு, தெற்கே தினமும் ஒரே மாதிரி உணவே கிடையாது , நாம் காலை இட்லி தோசை . பகலில் .சாதம் குழம்பு ரசம் பொறியாளனும் இரவுக்கு மோர்சாதம் நு தின்னறோம் அவுக மூனுவெலையுமெ ரோடிதான் அரீ சோறே எப்போதாச்சுமே செய்வாக
...அரசியல்வாதிகளுக்கென்று ஒரு சட்டம், மக்களுகென்று ஒரு சட்டம்... இதை முதலில் மாற்றவேண்டும்... நாங்கள் ஓட்டு போட்டு வந்தவர்கள் அவர்கள்... நாங்கள் இல்லையென்றால் அவர்கள் இருக்க முடியாது... இந்த விஷயத்தை மக்களும் அரசியல்வாதிகளும் நன்றாக தெரிந்து கொள்ள வேண்டும்... ஆதலால் எந்த கேள்வியும், பதிலும் கேட்காமல் முறைகேடாக வழங்கப்பட்டுள்ள எல்லாருடைய கேஸ் இணைப்பையும் ரத்து செய்யவேண்டும்... ஆள்பவர்களை முதலில் திருத்திவிட்டு பிறகு மக்களிடம் வாருங்கள்... எண்ணை நிறுவனங்களுக்கு திராணி இருக்கிறதா???......

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.