செஞ்சி:செஞ்சி
பேரூராட்சியில் 35 லட்சம் ரூபாய் மதிப்பில் குடிநீர் விஸ்தரிப்பு பணிகள்
செய்ய ஒப்புதல் வழங்கப்பட்டது.செஞ்சி பேரூராட்சியின் சாதாரண கூட்டம்
நடந்தது. பேரூராட்சி தலைவர் மஸ்தான் தலைமை தாங்கினார். செயல் அலுவலர்
அன்பழகன் முன்னிலை வகித்தார்.இதில் வி.பி.என்., நகர், தியாகராஜா நகர்,
கட்டபொம்மன் தெரு பகுதியில் குடிநீர் பொது குழாய்கள், அமைக்கவும், பஸ்
நிலையம், மேல்களவாய் சாலை, முத்து பாரதி தெரு உள்ளிட்ட 10 இடங்களில்
ஆழ்துளை குழாய் மற்றும் சிமென்ட் டேங்க் அமைக்க ஒப்புதல் வழங்கினர்.மேலும்
10 இடங்களில் குடிநீர் வசதிக்காக சிமென்ட் டேங்க் கட்டி குடிநீர் வழங்கவும்
கடந்த 11ம் தேதி 35 லட்சம் ரூபாய் மதிப்பில் நடந்த டெண்டருக்கு ஒப்புதல்
வழங்கப்பட்டது.இதில் துணை தலைவர் சங்கர் மற்றும் கவுன்சிலர்கள்
பங்கேற்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.