கடலூர்:பெரியகங்கணாங்குப்பம்
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி வளாகத்தில் பழுதடைந்த வகுப்பறையை இடித்து
விட்டு விளையாட்டுத் திடல் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை
விடுக்கப்பட்டுள்ளது.கடலூர் அடுத்த பெரியகங்கணாங்குப்பத்தில் ஊராட்சி
ஒன்றிய நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 70 மாணவ,
மாணவிகள் படித்து வருகின்றனர். பழமை வாய்ந்த இப்பள்ளிக் கட்டடம் முறையாக
பராமரிப்பு செய்யப்படாததால், கட்டடத்தில் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டு
சிமென்ட் காரைகள் பெயர்ந்து கீழே விழுந்து விட்டன.மேலும், கடந்தாண்டு வீசிய
"தானே' புயலின் போது பெரும்பாலான சிமென்ட் ஷீட்டுகள் விழுந்து கட்டடம்
முழுமையாக சேதமடைந்து, ஒரு சில சிமென்ட் ஷீட்டுகள் மட்டுமே உள்ளன.
இந்த
கட்டடத்தில், பாதுகாப்பு கருதி வகுப்புகள் நடத்தப்படவில்லை. இதற்கு பதிலாக
புதிய கட்டடத்தில் வகுப்புகள் நடக்கிறது. பழுதடைந்த கட்டம் இடிக்கப்படாமல்
அப்படியே உள்ளது. கட்டடம் எந்த நேரத்திலும் இடிந்து விழுந்து விபத்து
ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும், பள்ளி வளாகத்தில் விளையாட்டுத் திடல் வசதி
இல்லாததால் மாணவ, மாணவிகள் விளையாட்டு பயற்சி மேற்கொள்ள முடியவில்லை.எனவே,
பழுதடைந்துள்ள கட்டடத்தை இடித்து விட்டு அந்த இடத்தில் விளையாட்டுத் திடல்
அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.