திண்டுக்கல்: ""தி.மு.க.,வில் கருணாநிதிக்கு பின் ஸ்டாலின்தான் முதல்வர் என்று எங்களால் கூற முடியும். அ.தி.மு.க.,வில் அப்படி யாரையாவது சுட்டிக்காட்ட முடியுமா,'' என்று முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி பேசினார்.
திண்டுக்கல்லில் தி.மு.க., சார்பில் மின்வெட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி பேசியதாவது: மின்வெட்டிற்கு காரணம் தி.மு.க., என்று கூறி வந்த முதல்வர் ஜெயலலிதா, தற்போது மத்திய அரசு என்று மாற்றி பேசுகிறார். பிரச்னையை தீர்ப்பதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. தி.மு.க.,வில் கருணாநிதிக்கு அடுத்து ஸ்டாலின்தான் முதல்வர் என்று கூறும் துணிச்சல் எங்களுக்கு உள்ளது. ஆனால், அ.தி.மு.க.,வில் அப்படி யாரையாவது, அங்கிருப்பவர்களால் சுட்டிக்காட்ட முடியுமா. இவ்வாறு அவர் பேசினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
திராவிட இயக்கத்தின் வரலாறு தெரியாதவர் periyasaami போல் தெரிகிறது. பெரியாருக்கு பின் மணியம்மை தான் அடுத்த வாரிசு என்ற நிலை எப்படி மாறி வீரமணி ஆனார்? அறிஞர் அண்ணாவிற்கு பிறகு இரண்டாவதாக இருந்த நாவலர் தான் அடுத்த முதல்வர் என்பது மாறி கலைஞர் முதல்வர் ஆனார்? அப்படி இருக்க கலைஞருக்கு பிறகு ஸ்டாலின் எப்படி தமிழக முதல்வர் ஆகா முடியும்? அதுபோல் a.தி.மு.க.விலும் இதுவரை வாரிசு அரசியல் நடக்க வில்லை. இனிமேலும் அது நடக்காது என்பது கருத்து. காங்கிரசுடன் கூட்டணி இருப்பதால் அவர்கள் காற்று இவர்களிடம் பட்டு இப்படி பேச வைக்கிறதோ? பா.ஜ.க.விலும் இந்த வாரிசு அரசியல் இல்லை என்பதை அறிந்துக் கொள்ளட்டும். அப்படி இருந்தால் வாஜ்பாய்க்கு பிறகு அத்வானிதான் பிரதமராக ஆகி இருப்பார். அதுவும் சாத்தியப்படவில்லை. இனியும் அது சாத்தியப்படாது. பா.ஜ.க.ன் வின் ஜன நாயகப்படி மோடி முன்னிலை வகிக்கிறார். இந்திய ஜன நாயகப்படி மோடிதான் அடுத்த பிரதமர் என்பது நிச்சயமாகினது. தமிழக அரசியலிலும் அடுத்து ஆட்சிய பிடிக்க போவது பா.ஜ.க. தான் என்பதும் நிச்சயம் ஆகிவிட்டது. அப்படி இருக்க தி.மு.க. வை சேர்ந்த உங்கள் ஸ்டாலின் எப்படி தமிழக முதல்வர் ஆவார் என்பது உங்கள் கருத்து கணிப்பாகும்.?
கருணாநிதிக்குப்பின் ஸ்டாலின், ஐ.பெரியசாமிக்குப்பின் , ஐ.பி.எஸ். ( அதான் அவரது மகன் ஐ.பி.செந்தில்குமார் ). இதுதானே உங்கள் அனைவரின் கோட்பாடு. ஜனநாயகம் தழைக்கும் கட்சி என்று பேசப்படும் தி.மு.க.வில் வேறு யாருக்கும் இடமோ, சந்தர்ப்பமோ இல்லையா. முதியவர்களே நீண்டகாலம் கோலோச்சி வந்ததால், தங்களுக்கு அரசியலில் மேலே வர வாய்ப்புக்கள் குறைவு என்பதால்தான், எம்.ஜி.ஆர். மற்றும் வை.கோ. பிரிந்ததும் பெரும்பாலான இளைஞர்கள், வாய்ப்பு தேடி தி.மு.க.வை விட்டு சென்றனர். இன்னும் பாடம் கற்காது, பழைய பல்லவியான "அற்ற குளத்து அறுநீர் பறவைகள்" என அவர்களை வசைபாடிக்கொண்டிருப்பீர்களா?

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.