காரியாபட்டி: விருதுநகர் மாவட்ட நான்குவழிச்சாலையில் "டவுசர்' கொள்ளையர்களின் தொடர் கைவரிசையால், வாகன ஓட்டிகள் அச்சத்தில் உள்ளனர். பொள்ளாச்சியிலிருந்து உரமூடைகளுடன் தூத்துக்குடிக்கு ஒரு லாரி வந்தது. காரியாபட்டி சமத்துவபுரம் நான்குவழிச்சாலையில்,நேற்று அதிகாலை 5 மணிக்கு வந்த லாரியின், டிரைவருக்கு தூக்கம் வரவே, ரோடு ஓரமாக நிறுத்தினார். முகம் கழுவிக் கொண்டிருந்த டிரைவரை, டவுசர் அணிந்திருந்த 4பேர் கும்பல் தாக்கி, லாரியில் இருந்த 15 ஆயிரம் ரூபாய், மொபைல் போனை எடுத்து கொண்டு தப்பியது. சிறிது தூரம் சென்ற அந்த கும்பல், மேலும், சில லாரிகளை மறிக்க முயன்றது. லாரிகள் நிற்காததால், "பைத்தியக்காரர்கள்' போல் நடித்தப்படி, நடுரோட்டில் ஒருவன் நின்றுள்ளான். இதை பார்த்த, தூத்துக்குடியிலிருந்து கரூருக்கு சென்ற லாரியின் டிரைவர் ஆறுமுகப்பெருமாள், நிறுத்தியுள்ளார். உடனே, மறைந்திருந்த மூன்று பேர் ஓடிவந்து, டிரைவரை தாக்கி, 8 ஆயிரம் ரூபாய், இரண்டு மொபைல் போன்களை பறித்து தப்பினர். இவர்களை, மல்லாங்கிணறு போலீசார் தேடுகின்றனர். டிரைவர்கள் கூறுகையில்,""கொள்ளையர்கள் நால்வரும் டவுசர் அணிந்திருந்து, தெலுங்கு மொழியில் பேசினர். உயிருக்கு பயந்து, லாரியில் பணம் இருந்த இடத்தை காட்ட, அவர்கள் எடுத்து சென்றனர்,'' என்றனர்.
டிரைவர் கரியனேந்தல் பால்ராஜ் ,""12 ஆண்டுகளுக்கு முன்பு, வக்கணாங்குண்டு பகுதியில், இதுபோல் ஒரு சம்பவம் நடந்தது. போலீசாரின் தீவிர ரோந்து பணியால், இப்பிரச்னை இல்லாமல் இருந்தது. தற்போது மீண்டும் நடந்திருப்பது, டிரைவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது,'' என்றார்.
சாத்தூர் பட்டம்புத்தூர் நான்கு வழிச்சாலையில்,டிச., 12 ல், "டவுசர்' அணிந்த 4 பேர் , ஒரு லாரியை வழி மறித்து, டிரைவர் மற்றும் இருவரை தாக்கி, 25 ஆயிரம் ரூபாய்,மொபைல் போன்களை பறித்து தப்பினர். அடுத்த, ஐந்தாவது நாளான,நேற்று அதிகாலை தூத்துக்குடி நான்கு வழிச்சாலையிலும், கொள்ளை சம்பவம் நடந்திருப்பது, வாகன ஒட்டிகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
மதுரை - தூத்துக்குடி நான்கு வழிச்சாலை "ஹைவே பேட்ரோல்' எஸ்.ஐ., ராஜேந்திரன்,"" நெடுஞ்சாலையில் பெண்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இவர்களை பார்த்து, டிரைவர்கள் லாரியை நிறுத்துகின்றனர். இதை பயன்படுத்தி கொள்ளையர்கள், கைவரிசை காட்டுகின்றனர். தனிப்படை அமைத்து, தீவிரமாக கண்காணித்து வருகிறோம். கொள்ளையர்கள் தெலுங்கு பேசியதால், நக்சல்களாக இருக்குமோ என்ற கோணத்திலும், விசாரணை நடக்கிறது,'' என்றார்.
விருதுநகர் எஸ்.பி., (பொறுப்பு) சின்னச்சாமி,""மல்லாங்கிணர் நான்கு வழிச்சாலையில் நடந்த, இரு சம்பவங்களிலும் ஒரே கும்பல் தான் ஈடுபட்டுள்ளது. ரோந்து போலீசார் முடுக்கி விடப்பட்டுள்ளனர். குற்றவாளிகளை பிடிக்க, தனிப்படையும் அமைக்கப்பட்டுள்ளது,'' என்றார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.