கோவாவில் ஆட்டோ ஓட்டும் ரஷ்யர்கள்:உள்ளூர் வாகன ஓட்டிகளுக்கு சிக்கல்
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

கோவா:சுற்றுலா பயணிகளாக கோவா வந்து, அந்த மாநிலத்திலேயே நிரந்தரமாக தங்கி, ஆட்டோ, டாக்சி போன்றவற்றை ஓட்டி வரும், ரஷ்யர்கள் மற்றும் உக்ரைன் நாட்டவரால், உள்ளூர் ஆட்டோக்காரர்கள் வேலையிழந்து வருகின்றனர்.சுற்றுலா மாநிலமான கோவாவில், உள்ளூர் மக்கள் அளவிற்கு, வெளிநாட்டினர் வந்து தங்கியுள்ளனர். குறிப்பாக, ரஷ்யர்கள் ஏராளமானோர், கோவா மாநிலத்தில் உள்ளனர். சுற்றுலாவாக, கோவா வந்த அவர்கள், "விசா' காலம் முடிந்த பிறகும், தங்கள் சொந்த நாடுகளுக்கு செல்லாமல், கோவாவில் தங்கி விடுகின்றனர். ரஷ்யர்கள் போலவே, பல நாட்டினரும், சட்ட விரோதமாக, கோவாவில் தங்கியுள்ளனர்.


தினமும் ஏராளமான வெளிநாட்டவர், கோவா வருவதால், அவர்களை, ஆட்டோ, டாக்சிகளில் கடற்கரைக்கு அழைத்துச் செல்லும், உள்ளூர் வாடகை கார் ஓட்டுனர்கள், அநியாய பணம் கேட்பது வழக்கம்.இதனால், சுற்றுலா பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதை அறிந்த ரஷ்யர்கள் மற்றும் உக்ரைன் நாட்டினர், உள்ளூர் வாடகை வாகன உரிமையாளர்களுக்கு போட்டியாக, வாடகை கார், ஆட்டோக்களை இயக்க துவங்கி விட்டனர்.மோர்ஜிம், மாண்ட்ரம், ஆராம்போல் போன்ற கடற்கரை கிராமங்களில், 100க்கும் மேற்பட்ட, ரஷ்யர்கள், டூரிஸ்ட் வாகனங்களை இயக்கி வருகின்றனர்.


ஓட்டல்கள், உணவகங்கள் என, பிற தொழில்களிலும், ஏராளமான வெளிநாட்டினர் ஈடுபட்டிருப்பதை, கோவாவில் காணலாம்.அந்த பகுதிகளுக்கு வரும் வெளிநாட்டினர், தங்கள் நாட்டினர் போலவே இருக்கும், ரஷ்யர்கள் மற்றும் உக்ரைன் நாட்டவரின் வாகனங்களில் ஏறி பயணிக்கின்றனர். கட்டணமும், வெகு குறைவாக மட்டுமின்றி, நியாயமாக இருப்பதோடு, மொழி பிரச்னையும் இல்லை என்பதால், வெளிநாட்டினரின் வாடகை வாகன தொழில் செழிப்படைந்துள்ளது.இதனால், உள்ளூர்காரர்களுக்கு, தொழில் நசிந்து வருகிறது.


எனினும், அவர்களால், வெளிநாட்டவரின், தொழிலை கட்டுப்படுத்த முடியவில்லை. காரணம், அவர்களை பகைத்து கொண்டால், கொஞ்சம்நஞ்சம் தங்கள் வாகனங்களில் வரும் சுற்றுலா பயணிகளும், "ஸ்டிரைக்' செய்து விடுவர் என்பதால், வெளிநாட்டவரின் ஆட்டோ தொழிலை, உள்நாட்டவரால் கட்டுப்படுத்த முடியவில்லை.இது பற்றி ரஷ்யாவை சேர்ந்த, ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் கூறியதாவது:நாங்கள் நியாயமான கட்டணம் வசூலிக்கிறோம் என்பதால், எங்களிடம் வருகின்றனர். அரை கி.மீ., தூரத்திற்கு கூட, 300 - 500 ரூபாய் கேட்கின்றனர். நாங்கள், 50 - 100 ரூபாய் தான் வசூலிக்கிறோம். வெளிநாட்டவர் பேசும் பெரும்பாலான மொழிகளை நாங்கள் அறிந்துள்ளோம் என்பதால், எங்களை அவர்கள் விரும்புகின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.


AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (5)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
LAX - Trichy,இந்தியா
19-டிச-201215:52:24 IST Report Abuse
LAX பேராசை பெருநஷ்டம். புரிந்து செயல்படுங்கள் உள்ளூர் ஓட்டுனர்களே... இதுபோல எல்லா மாநிலங்களிலும் நிலைமை மாறினால்தான் இவர்களின் (உள்ளூர் ஆட்டோ ஓட்டுனர்களின்) அதிக கட்டணம் வசூலிக்கும் கொட்டம் அடங்கும்.
Rate this:
Share this comment
Cancel
arivu - Ras al khaimah,இந்தியா
19-டிச-201213:20:03 IST Report Abuse
arivu அப்பிடி போடு அருவாள..ரஷ்யாகாரைங்க ஆட்டோவுலே ஏன் மக்கள் சவாரி பண்ண போராய்ங்கன்னு கொஞ்சம் ஆராய்ச்சி சய்யிங்கன்னே
Rate this:
Share this comment
Cancel
Guru - Batam,இந்தோனேசியா
19-டிச-201209:51:02 IST Report Abuse
Guru விசாக்காலம் முடித்தபின்பு தங்கி இருக்கும் வெளிநாட்டவர்களுக்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்
Rate this:
Share this comment
Cancel
Pannadai Pandian - wuxi,சீனா
19-டிச-201208:55:50 IST Report Abuse
Pannadai Pandian இவர்கள் ஆட்டோ ஒட்டி உள்ளூர் ஆட்டோ ஓட்டுனர்களின் பிழைப்பில் (கொள்ளையில்) மண்ணை அள்ளி போடுகிறார்கள். சிலர் அரசியலில் நுழைந்து உள்ளூர் அரசியல்வாதிகளின் பிழைப்பில் மண்ணை அள்ளி போடுகின்றனர். இது எல்லாம் நியாயமா ???
Rate this:
Share this comment
Cancel
Satheesh Kumar - Chennai,இந்தியா
19-டிச-201208:39:25 IST Report Abuse
Satheesh Kumar இருக்குறத விட்டுட்டு, பறக்குறதுக்கு ஆசைப்பட்டு, நடைமுறைப்படுத்தப்பட்ட விதிகள மீறி, நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்த விட அதிகம் வசூல் பண்ணி, கொள்ளை லாபம் பார்த்த கோவா டாக்ஸி டிரைவர்ஸ் இன்னைக்கி அவங்களோட தொழில, இன்னொருத்தனுக்கு தார வார்த்துக்குடுத்துட்டு தலையில துண்ட போட்டு நிக்கிறாங்க. இதுக்கு அவங்கள மட்டும் தப்பு சொல்ல முடியாது. விஷம் போல ஏறிக்கிட்டு இருக்குற விலைவாசிக்கு ஏத்தா மாதிரி கிலோமீட்டருக்கான கட்டணங்கள மாத்தி அமைச்சு, அதுபடி இயக்கபடாத டாக்ஸிகள கண்காணிச்சு, கண்டிச்சு, தண்டிக்கிற தன்னோட நடவடிக்கைகள அரசாங்கம் தீவிரப்படுத்தியிருக்கணும். அத செய்யத்தவறிய அரசும் இப்படிப்பட்ட சூழலுக்கு ஒரு காரணம். இனியும் சுற்றுலா துறைக்கு வருமானம் போயிடுமோனு பயந்து, அந்த ரஷ்ய டாக்ஸிகளுக்கு தடை விதிக்காம, தகுந்த நடவடிக்கை எடுக்காம இருந்தா, சுத்தி பாக்க வந்தவன் அத்தன பேரோட வாழ்க்கையையும் சூறையாடிட்டு போயிடுவான். வணிகத்தில் அந்நிய முதலீடும் இதபோலத்தான்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்