ஐதராபாத்:பிரபல மதுபான அதிபர் விஜய் மல்லைய்யா, தன் பிறந்தநாளையொட்டி, திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலுக்கு, 3 கிலோ தங்கத்தை காணிக்கையாக செலுத்தினார்.
இவரின், "கிங் பிஷர்' விமான நிறுவனம், கடும் நிதி நெருக்கடியில் சிக்கியது. இதனால், "விமான போக்குவரத்து விதிமுறைகளை சரியாக பின்பற்றவில்லை' என, கூறி, இந்த விமான நிறுவனத்தை, மத்திய அரசு, முடக்கி வைத்துள்ளது.இந்நிலையில், விஜய் மல்லைய்யா, தன், 57வது பிறந்த நாளையொட்டி, திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில், நேற்று சுவாமி தரிசனம் செய்தார். அப்போது, கோவில் கருவறைக்கு செல்லும் வாசல் கதவை அமைப்பதற்காக, 3 கிலோ தங்கத்தை, காணிக்கையாக செலுத்தினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
இவர் தனது விமான கம்பெனியில் பணி புரிந்த தொழிலாளர்களுக்கு சம்பள பாக்கிகளை செட்டில் செய்துவிட்டாரா? இல்லை என்றால், இவர் அளித்த காணிக்கையை திருப்பதி வெங்கடாஜலபதி ஏற்கவில்லை என்று கூறி, தேவஸ்த்தானத்தினர், கிங் பிஷர் ஊழியர்களை அழைத்து அவர்கள் கணக்கு வழக்குகளை விசாரித்து அவர்கள் சம்பள பாக்கியை வழங்குவதற்கு ஏற்பாடு செய்து, இந்த ஆள் மூஞ்சியில் கரியை பூச வேண்டும். (இது நடவாத காரியம் என்றாலும், நடத்திக்காட்டி அனைத்தும் ஏழுமலையான் செயல் என்பதை நிரூபிக்க வேண்டும்). அல்லது சம்பந்தப்பட்ட துறைகள் மல்லையா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பாவம் ஊழியர்கள் வயிற்றில் அடித்துவிட்டு, பிறந்தநாளுக்கு ஏழுமலையானுக்கு லஞ்சமா?

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.