புதுடில்லி:அரியானாவைச் சேர்ந்த, காங்கிரஸ், எம்.எல்.ஏ., தன் காருக்கு வழி விட மறுத்ததற்காக, ஒரு குடும்பத்தினரை அடித்து உதைத்த சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அரியானாவில், பூபிந்தர் சிங் ஹூடா தலைமையிலான, காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்குள்ள, பர்வேலா தொகுதியின் எம்.எல்.ஏ.,வாக, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த, ராம்நிவாஸ் கொரெலா உள்ளார்.சமீபத்தில் இவர், அரியானாவில் உள்ள, ஜிண்ட் - ஹிசார் நெடுஞ்சாலையில், தன் பாதுகாவலர்களுடன், காரில் சென்றார். அதே சாலையில், எம்.எல்.ஏ.,வின், காருக்கு முன், வேறு ஒரு கார், சென்றது.
அந்தக் காரில், ஒரு தம்பதியும், அவர்களின் குழந்தைகளும் இருந்தனர். எம்.எல்.ஏ.,வின் கார், தங்களுக்கு முன் சென்று கொண்டிருந்த காரை, முந்திச் செல்ல முயற்சித்தது. ஆனால், முன் சென்ற கார், சாலையின் மையப் பகுதியிலேயே, தொடர்ந்து சென்றதால், அதை, முந்திச் செல்ல முடியவில்லை.ஒரு கட்டத்தில், எம்.எல்.ஏ.,வின் கார், முன் சென்ற காரை, முந்திச் சென்றது. சாலையை மறித்து, எம்.எல்.ஏ.,வின் கார் நிறுத்தப்பட்டது. காரில் இருந்து இறங்கிய, எம்.எல்.ஏ.,வும், அவரது பாதுகாவலர்களும், தங்களுக்கு வழி விட மறுத்த தம்பதியை, தரக் குறைவான வார்த்தைகளில் திட்டியதுடன், அவர்கள் மீது, சரமாரியாக தாக்குதலும் நடத்தினர்.
இதில், அந்த தம்பதியர், படுகாயமடைந்தனர். காரில் இருந்து இறங்கிய அந்த தம்பதியர், எம்.எல்.ஏ., மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, சாலையில் அமர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு உதவியாக, அருகில் உள்ள கிராம மக்களும், போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், அந்த தம்பதியையும், கிராம மக்களையும் சமாதானப்படுத்தினர். எம்.எல்.ஏ.,வுக்கு எதிராக, புகார் கொடுத்தால், அவர் மீது நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி அளித்தனர். இதைத் தொடர்ந்து, போராட்டம் கைவிடப்பட்டது."எம்.எல்.ஏ., ராம்நிவாஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, எதிர்க்கட்சியினரும், தற்போது போராட்டத்தில் இறங்கியுள்ளதால், அரியான அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.