thirumavalavan Talk: MP, s anti- | திருமாவளவன் பேச்சு:எம்.பி.,க்கள் எதிர்ப்பு| Dinamalar

திருமாவளவன் பேச்சு:எம்.பி.,க்கள் எதிர்ப்பு

Added : டிச 18, 2012
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

லோக்சபாவில், நேற்று பூஜ்ஜிய நேரம் ஆரம்பித்ததும், தமிழகத்தைச் சேர்ந்த, சிதம்பரம் லோக்சபா தொகுதி, எம்.பி., திருமாவளவன் எழுந்து, தர்மபுரி விவகாரத்தை கிளப்பினார். அவர் பேசியதாவது:தர்மபுரி அருகே, நாய்க்கன் கோட்டையில் உள்ள நத்தம், "காலனி' அண்ணாநகர் போன்ற, தலித் கிராமங்களை, 3,000 பேர் கொண்ட கும்பல், சூறையாடியது. ஏறத்தாழ, 4 மணி நேரம், தொடர் தாக்குதல் நடைபெற்றுள்ளது. வன்முறையாளர்கள், நின்று நிதானமாக அனைத்து வீடுகளையும், தாக்கி விட்டு சென்றுள்ளனர். இருந்தும், போலீசார் அவர்களை தடுக்கவில்லை.


வன்முறையாளர்களின் தாக்குதலின் போது, போலீசார் வேடிக்கை பார்த்துள்ளனர்.இவ்வாறு திருமாவளவன் பேசினார்.உடன், தம்பித்துரை, செம்மலை, வேணுகோபால் உட்பட, அ.தி.மு.க., - எம்.பி.,க்கள் பலரும் எழுந்து, "மாநில பிரச்னைகளை இங்கு பேசக் கூடாது' என எதிர்ப்புத் தெரிவித்ததால், அமளி ஏற்பட்டது. இதையடுத்து, சபை ஒத்திவைக்கப்பட்டது.சபை மீண்டும் கூடிய போது, அ.தி.மு.க., - எம்.பி., தம்பித்துரை பேசியதாவது:தமிழகத்தில், பொது மக்களின் நன்மை கருதி, அரசு கேபிள் "டிவி' சேவை துவங்கி, நடைபெற்று வருகிறது.


குறைந்த கட்டணத்தில், கேபிள் சேவை வழங்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில், கொண்டு வரப்பட்ட இந்த திட்டத்திற்கு, டிஜிட்டல் தொழில் நுட்பம் அவசியம்.என்ன காரணத்தினாலோ, இதற்கான ஒப்புதலை வழங்க, மத்திய அரசு தயக்கம் காட்டுகிறது. மக்களுக்கு பயன் அளிக்கக் கூடிய, இது போன்ற திட்டங்களை, மத்திய அரசு ஊக்கப்படுத்த வேண்டும். அதனால், விரைவில் இந்த திட்டத்திற்கு, டிஜிட்டல் அனுமதி வழங்கிட வேண்டும்.இவ்வாறு தம்பித்துரை பேசினார்.


Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை