Advertisement
நான்கு வயது குழந்தையை கடித்து தின்ற நாய்கள்
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Bookmark and Share  
ஆல்பம்
பதிவு செய்த நாள் : டிசம்பர் 18,2012,23:25 IST

பர்னாலா:பஞ்சாப் மாநிலத்தில், வீட்டில் இருந்த, நான்கு வயது குழந்தையை, நாய்கள் தூக்கி சென்று, கடித்துக் குதறி, தின்ற பரிதாப சம்பவம் நடந்துள்ளது.பர்னாலா மாவட்டத்தில் உள்ளது, தானெர் கிராமம். இங்கு, குர்தீப் சிங் என்ற விவசாயி, தன், நான்கு வயது ஆண் குழந்தை, ஆஷாதீப்பை, வீட்டில் விட்டு, விட்டு விவசாய வேலைக்காக வெளியே சென்றிருந்தார். மாலையில் வீடு திரும்பியவர், குழந்தையை காணாமல் திடுக்கிட்டார். அருகில் இருந்தவர்களிடம் விசாரித்தார்.


குழந்தை ஆஷாதீப் பற்றிய விவரம் தெரியவில்லை.யாரேனும் கடத்தி சென்றிருக்கலாம் என்ற சந்தேகத்தில், உள்ளூர் குருத்வாராவில் முறையிட்டார். அங்கிருந்த, "மைக்' மூலம், குழந்தை காணாமல் போன விவரம் அறிவிக்கப்பட்டது. நள்ளிரவு வரை தேடியும், குழந்தையை கண்டுபிடிக்க முடியவில்லை.காலை நேரத்தில், ஊருக்கு ஒதுக்குபுறமான இடத்தில், குர்தீப் சிங் தேடிய போது, 10 - 12 நாய்கள், மும்முரமாக எதையோ, கடித்து குதறிக் கொண்டிருந்ததை கண்டார்.


நாய்களை அடித்து விரட்டி, பார்த்த போது, ஆஷாதீப் குதறப்பட்டு, உயிரிழந்து கிடந்தான். உடல் உறுப்புகள் அனேகமாக காணாமல் போயிருந்தன.வீட்டில் படுத்திருந்த குழந்தையை, நாய்கள் தூக்கி சென்று, கடித்து, தின்று கொன்றிருக்கலாம் என, கிராமத்தினர் நம்புகின்றனர்.பஞ்சாபில், தெரு நாய்கள் தொல்லை மிக அதிகம். சில மாதங்களுக்கு முன், காங்கிரஸ், எம்.எல்.ஏ., அஜித் சிங் மோபர், பஞ்சாப் மாநில சட்டசபையில் கொண்டு வந்த தீர்மானத்தில், "மாநிலம் முழுவதும், கிராமங்களில் ஏராளமாக சுற்றி திரியும், தெரு நாய்களை பிடித்து, சீனா, மிசோரம், நாகாலாந்து போன்ற இடங்களுக்கு கொண்டு சென்று விட வேண்டும். அங்கு, அந்த நாய்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது' என, பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.





வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (2)
navaneethan - பெங்களூரு,இந்தியா
19-டிச-201208:19:10 IST Report Abuse
navaneethan வழக்கம் போல புளூ கிராஸ் ஆளுங்க, நாய்க்கு தான் வக்காலத்து வாங்குவானுங்க... அவனுங்களுக்கு குழந்தை என்ன ஆனா தான் என்ன?
Rate this:
1 members
0 members
15 members
Share this comment
Guru - Batam,இந்தோனேசியா
19-டிச-201207:59:01 IST Report Abuse
Guru கொடுமை கொடுமை.., குழந்தையை கூட கவனிக்காமல் எப்படியா இருப்பது
Rate this:
0 members
1 members
10 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.