மும்பை:சிவசேனா தலைவர், பால் தாக்கரே தகனம் செய்யப்பட்ட இடத்தில் அமைக்கப்பட்டிருந்த, தற்காலிக நினைவிடத்தை, அக்கட்சியினர் நேற்று அகற்றினர்.
மும்பை மாநகரின் முக்கியமான அரசியல் சக்தியாக திகழ்ந்தவர், சிவசேனா கட்சி தலைவர், பால் தாக்கரே. கடந்த மாதம், 17ம் தேதி, உடல்நலக் குறைவால் இறந்தார். மறுநாள், அவர் உடல், மத்திய மும்பை, தாதர் பகுதியில் உள்ள, சிவாஜி பார்க்கில் தகனம் செய்யப்பட்டது.சுற்றிலும், வானுயர்ந்த கட்டடங்கள் மத்தியில், 28 ஏக்கர் நிலத்தில், சிவாஜி பார்க் அமைந்துள்ளது.
மாவீரன் சிவாஜி நினைவாக, 1925ல் உருவாக்கப்பட்ட அந்த இடத்தில், சிவாஜியின் பிரமாண்ட சிலை உள்ளது. பிரசித்தி பெற்ற, விநாயகர் கோவில் ஒன்றும் அங்கு உள்ளது.சிவசேனா கட்சி தலைமையகம், அந்த இடத்தின் அருகில் இருந்ததாலும், நீண்ட காலமாக, சிவாஜி பார்க்கில் நடந்த பொதுக் கூட்டங்களில் மட்டுமே, பால் தாக்கரே பேசி வந்ததாலும், அந்த இடம், சிவசேனா கட்சியினருக்கு முக்கியமான இடமாக திகழ்ந்தது.அந்த இடத்திலேயே, பால் தாக்கரே தகனம் செய்யப்பட்டதால், "சிவாஜி பார்க்கில், தாக்கரேவுக்கு, பிரமாண்ட நினைவிடம் கட்ட வேண்டும்' என்று கோரி, அந்த இடத்திலிருந்து வெளியேற, சிவசேனா கட்சியினர் மறுத்து வந்தனர்.
பால் தாக்கரேயின் அஸ்தி கலசத்தை வைத்து, அதை தற்காலிக நினைவிடமாக மாற்றி, ஏராளமானோர் வழிபட்டும் வந்தனர். அந்த இடத்தை காலி செய்ய வேண்டும் என, மும்பை மாநகராட்சி, மாநில முதல்வர், பிருத்விராஜ் சவான் போன்றோர் வலியுறுத்தியும், "முடியாது' என, சிவசேனா கட்சியினர் அடம் பிடித்தனர்.
சிவசேனா செயல் தலைவர், உத்தவ் தாக்கரே, தன் கட்சி பத்திரிகையான, "சாம்னா'வில், சில நாட்களுக்கு முன் எழுதியிருந்த தலையங்கத்தில், "சிவாஜி பார்க்கிலிருந்து, தாக்கரே தற்காலிக நினைவிடம் அப்புறப்படுத்தப்படும்; அதை, கட்சி தொண்டர்கள், தங்கள் கைகளால் மேற்கொள்வர்' என, தெரிவித்திருந்தார்.அதன் படி, நேற்று காலை, தற்காலிக நினைவிடத்திலிருந்த, தாக்கரே அஸ்தி, அங்கிருந்து எடுத்து செல்லப்பட்டது. ஒரு மாதமாக, சர்ச்சைக்குரிய இடமாக விளங்கிய, சிவாஜி பார்க்கிலிருந்து, தாக்கரே அஸ்தி அகற்றப்பட்டதும், அந்த இடத்தை, மாநகராட்சி, தன் வசம் கொண்டு வந்தது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.