கொச்சி;தேசிய மனித உரிமைகள் கமிஷன் தலைவரும், சுப்ரீம் கோர்ட் முன்னாள் தலைமை நீதிபதியுமான, கே.ஜி.பாலகிருஷ்ணன் பதவி விலகக் கோரி, கொச்சியில், பரபரப்பு மிகுந்த சாலையில், வாலிபர் நிர்வாணமாக ஓடியது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்தது.கேரளாவின் வர்த்தக நகரமான, கொச்சியில், நேற்று முன்தினம் மாலை, 4:00 மணியளவில், மகாராஜாஸ் கல்லூரி அருகேயிருந்து, வாலிபர் ஒருவர், முழு நிர்வாணமாக ஓடத் துவங்கினார்.
முகத்தை மட்டும் துணியால் மூடியிருந்த அவர், "ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான, தேசிய மனித உரிமைகள் கமிஷன் தலைவர், கே.ஜி.பாலகிருஷ்ணன் பதவி விலக வேண்டும்' என்ற, வாசகங்கள் அடங்கிய அட்டையை கையில் பிடித்திருந்தார். வாசகங்களின் கீழ், 'எர்ணாகுளம் சட்ட கல்லூரி' என, எழுதப்பட்டிருந்தது. கொச்சி நகரில், எப்போதும் பரபரப்பாக காணப்படும், மகாத்மா காந்தி சாலையில், வாலிபர் ஒருவர் நிர்வாணமாக ஓடுவதை பார்த்து, அவ்வழியே வாகனங்களில் சென்றவர்களும், நடந்தும் சென்றவர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.
அவர் நிர்வாணமாக ஓடியதை, பணியில் இருந்த போக்குவரத்து போலீசார் கண்டு கொள்ளவில்லை. சிறிது தூரம் நிர்வாணமாக ஓடிய அந்த வாலிபர், முல்லசேரி கனால் சாலை அருகே நின்றிருந்த, அவரது நண்பர்கள் வைத்திருந்த ஆடைகளை அணிந்து, நம்பர் பிளேட் இல்லாத, இரு சக்கர வாகனத்தில் ஏறி பறந்தார்.நண்பர்களின் உதவியோடு தான், அந்த வாலிபர் நிர்வாண ஓட்டம் நடத்தியுள்ளார்.கொச்சியில், இதுபோன்ற நிர்வாண ஓட்டம் நடப்பது, இது இரண்டாவது முறை. ஏற்கனவே, 36 ஆண்டுகளுக்கு முன், அப்போது நகரின் பரபரப்பு மிகுந்த சாலையான, பிராட்வே பகுதியில், எர்ணாகுளம் சட்டக் கல்லூரி மாணவர், அஷரப் என்பவர் தலைமையில், நான்கு மாணவர்கள், நிர்வாண ஓட்டம் நடத்தினர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.