Advertisement
தேநீர் கடை, செங்கல் சூளை உட்பட 99 தொழில்களுக்கு புதிய வரி விதிப்பு
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
ஆல்பம்
பதிவு செய்த நாள் : டிசம்பர் 18,2012,23:35 IST

ஊராட்சிகளில் அபாயகரமானது மற்றும் அருவருக்கதக்க தொழில் பட்டியலில் உள்ள, 99 தொழில்களுக்கு விதிக்கப்பட்டு வரும் வரியை, தமிழக அரசு உயர்த்தியுள்ளது. இது தொடர்பாக, ஊராட்சிகளில், அடுத்தடுத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அமலாகும்.

தமிழகத்தில் அபாயகரமானது மற்றும் அருவருக்கத்தக்க தொழில்கள் என அறிவிக்கப்பட்டு, அவற்றுக்கு, வரி வசூலிக்க 1972ம் ஆண்டு, சட்டம் கொண்டு வரப்பட்டது. இச்சட்டத்தை, அரசு ஊராட்சிகள் மூலம் அமல்படுத்தியது. இச்சட்டத்தின் கீழ் ஊராட்சிகளில் உள்ள கடைகள் கணக்கெடுக்கப்பட்டு, வரி வசூல் செய்யப்படுகிறது. இவற்றில் தேநீர்கடைகள், பீடி சுருட்டுதல் உட்பட, பல்வேறு தொழில்கள் அடங்கியுள்ளன.ஊராட்சிகளின் வளர்ச்சிக்காக, பல்வேறு வரிகள் வசூலிக்கப் படுகின்றன. அதன் மூலம், கிராமங்களில், பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப் படுகின்றன. தற்போது ஊராட்சிகளில் செயல்படுத்தப்படும், அபாயகரமானது மற்றும் அருவருக்கதக்க தொழில்களுக்கு, புதிய கட்டணத்தை அரசு விதித்துள்ளது.

கடந்த, 2007ம் ஆண்டிற்கு பிறகு, இம்மாத இறுதியில், புதிய கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக, ஊராட்சிகளில் தீர்மானம் நிறைவேற்றும்படி, வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு, உத்தரவிடப் பட்டுள்ளது.அந்த உத்தரவில், 99 தொழில்களுக்கு புதிதாக வரி விதிக்கப்பட்டுள்ளது. தொழில்களுக்கேற்ப இரண்டு முதல் மூன்று மடங்கு வரி உயர்த்தப்பட்டுள்ளது.அந்தந்த ஊராட்சிகளில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதும், புதிய வரி அமலுக்கு வரும்.

- நமது சிறப்பு நிருபர் -


தொடர்புடைய செய்திகள்:


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (16)
iravi - Chennai,இந்தியா
20-டிச-201200:44:34 IST Report Abuse
iravi தேநீர் எவ்வாறு அபாயகரமானதாகவும், தேநீர் கலக்கும் தொழில் எவ்வாறு அருவருக்கத் தக்கதாகவும் இருக்க முடியும் என்பது புரியவில்லை. யாரேனும் கொஞ்சம் விளக்குங்களேன்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
christ - chennai,இந்தியா
19-டிச-201213:48:45 IST Report Abuse
christ இலவசங்களால் வந்த வினை
Rate this:
0 members
0 members
10 members
Share this comment
sathishkumar - madurai,இந்தியா
19-டிச-201213:25:20 IST Report Abuse
sathishkumar செய்யும் தொழிலில் தெய்வம் உள்ளது. அது என்ன அருவருதக்க வேலை திருடி & மற்றவர்கள் ஏமாற்றி மற்றவர்கள் பணம் நகை இடத்தை வளைத்து போடுவது இதெல்லாம் அருவருதக்க செயல்கள்
Rate this:
0 members
0 members
13 members
Share this comment
NavaMayam - New Delhi,இந்தியா
19-டிச-201212:51:28 IST Report Abuse
NavaMayam வால் மார்ட்காரன் வரி கட்டுறான்...இவர்களையும் வரி கட்ட வைத்தால் தானே இந்த சில்லறை வணிகர்களும் வால் மார்ட் லெவலுக்கு உயர்வார்கள் ..இதுவும் விசன் 2023 திட்டத்தின் ஒரு பகுதியோ....
Rate this:
0 members
0 members
8 members
Share this comment
sumugan - bangalore,இந்தியா
19-டிச-201211:21:31 IST Report Abuse
sumugan "அபாயகரமானது மற்றும் அருவருக்கதக்க தொழில்களுக்கு" - பீடி சுருட்டுதல் அபாயகரமானது.....அருவருக்கதக்க தொழில்...???
Rate this:
0 members
0 members
4 members
Share this comment
LAX - Trichy,இந்தியா
19-டிச-201216:37:50 IST Report Abuse
LAXஅந்த புகையிலையிலிருந்து வரும் நெடி....
Rate this:
0 members
0 members
3 members
Share this comment
arabuthamilan - Manama,பஹ்ரைன்
19-டிச-201211:07:25 IST Report Abuse
arabuthamilan இது என்னங்கடா அநியாயம்.
Rate this:
0 members
0 members
3 members
Share this comment
ஆனந்த் - நாகர்கோவில் ,இந்தியா
19-டிச-201211:05:48 IST Report Abuse
ஆனந்த் அருவருக்கத்தக்க அரசியல் செய்யும் கூட்டம் கோடி கணக்கில் கொள்ளை அடிக்கும். வயிற்று பிழைப்புக்கு வேலை செய்வோர் வரி கட்ட வேண்டும்.. வாழ்க சனநாயகம்
Rate this:
0 members
0 members
20 members
Share this comment
Raj - Chennai,இந்தியா
19-டிச-201209:03:19 IST Report Abuse
Raj அந்நிய நிறுவனங்கள் தொழில் தொடங்க வருடக்கணக்கில் வரி சலுகைகள் ... ஆனால் இந்த மாதிரி சிறு தொழில்களுக்கு அபாண்ட வரி விதிப்பு ... விஞ்ஞான பூர்வமாய் சிந்திக்கிறார்கள். ஏன் இந்த கொல வெறி?
Rate this:
0 members
0 members
26 members
Share this comment
மதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ
19-டிச-201208:29:40 IST Report Abuse
மதுரை விருமாண்டி அது என்ன அருவருக்கத்தக்க வேலை ? அரசாங்கத்தில் வெட்டியாய் பொழுதைப் போக்கி நேரத்தை வீணடிக்கும் முட்டாள்கள், புதுசா வரி போட்டு கொள்ள அடிக்க என்னென்ன சொல்லி ஏமாற்றுவார்களோ...
Rate this:
0 members
0 members
31 members
Share this comment
Thangairaja - Dammam,சவுதி அரேபியா
19-டிச-201208:10:42 IST Report Abuse
Thangairaja ஒ பி நிதியமைச்சராக இருக்கும் பொது தேநீர்க்கடை நடத்துவதை அபாயகரமானது மற்றும் அருவருக்கதக்க தொழிலாக கருதி அதற்கு புது வரியும் விதிப்பது பொருத்தமாக தெரியவில்லை.
Rate this:
0 members
0 members
5 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.