E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
மானிய விலையில் "காஸ்' சிலிண்டர் வாங்குவதை கைவிடுங்கள்: அமைச்சர்களுக்கு வேண்டுகோள்
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

மாற்றம் செய்த நாள்

19 டிச
2012
00:21
பதிவு செய்த நாள்
டிச 18,2012 23:37

புதுடில்லி:"தொழில் அதிபர்கள், அரசியல்வாதிகள், அமைச்சர்கள், உயரதிகாரிகள் ஆகியோர், மானிய விலையில், சமையல், "காஸ்' சிலிண்டர் பெறுவதை தவிர்க்க வேண்டும். சந்தை விலைக்கேற்ப, சிலிண்டர்களை வாங்குவதால், அவர்களுக்கு, பெரிய இழப்பு எதுவும் ஏற்பட்டு விடாது' என, பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்து உள்ளன.

"சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளதால், மானிய விலையில் வழங்கப்படும், சமையல், "காஸ்' சிலிண்டர்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும்' என, பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் வலியுறுத்தின.இதையடுத்து, "மானிய விலையில், குடும்பம் ஒன்றுக்கு, ஆண்டுக்கு, ஆறு சிலிண்டர்கள் மட்டுமே வழங்கப்படும்' என, மத்திய அரசு அறிவித்தது. இதற்கு, கடும் எதிர்ப்பு எழுந்ததை அடுத்து, மானிய விலை சிலிண்டர்களின் எண்ணிக்கையை, ஒன்பதாக அதிகரித்தது.

இந்நிலையில், மானிய விலையில், "காஸ்' சிலிண்டர்களை வழங்குவதால், தங்களுக்கு, பெரும் இழப்பு ஏற்படுவதாகக் கூறும், பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள், சில ஆலோசனைகளை முன்வைத்து உள்ளன.

இதுகுறித்து, பொதுத் துறை எண்ணெய் நிறுவனம் ஒன்றின், மூத்த அதிகாரி ஒருவர், கூறியதாவது:மானிய விலையில், ஆண்டுக்கு, ஒன்பது சிலிண்டர்கள் வழங்குவதால், ஒவ்வொரு குடும்பத்துக்கும், ஆண்டுக்கு, 3,000 ரூபாய் முதல், 4,500 ரூபாய் வரை, பலன் கிடைக்கும். இந்த இழப்பை, மத்திய அரசும், பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களும் தான், ஏற்க வேண்டும். ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கு, இந்தத் தொகை, மிகவும் முக்கியமானது. அவர்களை பொறுத்தவரை, இது, கணிசமான தொகையே. இந்த மானியத்தை பெறுவதற்கான முழு தகுதியும், அவர்களுக்கு உண்டு.ஆனால், முன்னணி அரசியல்வாதிகள், தொழில் அதிபர்கள், அமைச்சர்கள், உயரதிகாரிகளுக்கு, ஆண்டுக்கு, 4,500 ரூபாய் என்பது, பெரிய தொகை அல்ல. மேல்தட்டு மக்கள், குடும்பத்துடன் ஒருவேளை உணவு சாப்பிடுவதற்காக, ஓட்டலுக்குச் செல்லும்போது, இந்தத் தொகையை விட, அதிகம் செலவு செய்கின்றனர்.

எனவே, மானிய விலையில், சமையல், "காஸ்' சிலிண்டர்களை பெறுவதை, அவர்கள் தவிர்க்க வேண்டும். தாங்களாகவே முன்வந்து, "மானிய விலை சிலிண்டர்கள், எங்களுக்கு வேண்டாம்' என்பதை, சம்பந்தப்பட்ட, "காஸ்' ஏஜன்சிகளிடம், அவர்கள் தெரிவிக்க வேண்டும். மானிய விலை சிலிண்டருக்கு பதிலாக, அவ்வப்போதைய சந்தை விலைக்கேற்ப, சிலிண்டர்களை அவர்கள் பெறலாம். இவ்வாறு, அந்த அதிகாரி கூறினார்.


தொடர்புடைய செய்திகள்:


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (21)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sundeli Siththar - Hyderabad,இந்தியா
20-டிச-201200:12:37 IST Report Abuse
Sundeli Siththar அதெல்லாம் சரி.. உங்கள் அலுவலக அதிகாரிகளுக்கும் மானிய விலையில் சமையல் காஸ், பெட்ரோல், டீசல் கொடுப்பதை நிறுத்துவீர்களா? மேற்படிப்பு படித்து வேலை அனுபவம் இல்லாதவர்களுக்கு 10 15 லட்சம் ரூபாய் சம்பளம் தருவதை நிறுத்துவீர்களா? உங்கள் செலவை கட்டுப்படுத்தினாலே, பாதி பிரச்சினை தீருமே...
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
saravanan - Dares Salaam,தான்சானியா
19-டிச-201217:56:26 IST Report Abuse
saravanan மொதல்ல பிரதமர், மத்திய அமைச்சர்களிலிருந்து இதை ஆரம்பிக்கலாம்....
Rate this:
0 members
0 members
8 members
Share this comment
Cancel
Rangarajan Pg - CHENNAI,இந்தியா
19-டிச-201217:52:45 IST Report Abuse
Rangarajan Pg நல்ல ஐடியா தான். ஆனால் எந்த அரசியல்வாதி இதற்க்கு ஒத்து கொள்வான். சும்மா கிடைக்குமா என்று தான் பார்ப்பான். அதை விட்டு மானிய விலையில் வேண்டாம் என்று எந்த அரசியல்வாதியாவது கூறுவானா? GOOD IDEA THOUGH . இதை வரவேற்க்கிறேன்.
Rate this:
0 members
0 members
4 members
Share this comment
Cancel
Raj - Chennai,இந்தியா
19-டிச-201215:54:10 IST Report Abuse
Raj ஒரு சுலபமான வழி சொல்றேன் கேளுங்க. ரேஷன் கார்டை பாண் கார்டுடன் இணைத்து விட்டால் வண்டவாளம் தண்டவாளம் ஏறிவிடும்.
Rate this:
0 members
0 members
8 members
Share this comment
Cancel
Veera - Chennai,இந்தியா
19-டிச-201215:30:32 IST Report Abuse
Veera This is definitely required. Everyone who can afford non subsidized LPG should come forward and opt for it. I called my distributor to opt for non subsidized LPG but they are not aware of this news/option.
Rate this:
1 members
0 members
1 members
Share this comment
Cancel
Veera - Chennai,இந்தியா
19-டிச-201215:19:22 IST Report Abuse
Veera This is definitely required. Everyone should honestly come forward and opt for non subsidized cylinders. I called my distributor to opt for non subsidized cylinder but they are not aware about this news/option.
Rate this:
0 members
0 members
2 members
Share this comment
Cancel
Divaharan - Tirunelveli,இந்தியா
19-டிச-201214:18:13 IST Report Abuse
Divaharan அது எப்படி முடியும்? சட்டம் எல்லாம் மக்களுக்குத்தான்
Rate this:
0 members
0 members
2 members
Share this comment
Cancel
19-டிச-201211:11:27 IST Report Abuse
முத்துநகர் மைந்தன் மக்களுக்கு என்றால் உடனே அமுல் படுத்தி விடும் எண்ணெய் நிறுவனங்கள் இதற்கு மட்டும் ஏன் வேண்டுகோள் விடுகிறார்கள்??
Rate this:
0 members
0 members
10 members
Share this comment
Cancel
K SRINIVASAN - chennai,இந்தியா
19-டிச-201210:34:05 IST Report Abuse
K SRINIVASAN இந்த வெளிப்படையாக பேசிய அதிகாரியை எப்படியும் வேறு துறைக்கு மாற்றி விடுவார்கள். வேறென்ன செய்ய முடியும்.
Rate this:
0 members
0 members
5 members
Share this comment
Cancel
KUNDRATTHU BAALAA - MARUTHAI,இந்தியா
19-டிச-201209:12:22 IST Report Abuse
 KUNDRATTHU BAALAA ரூபாய் எட்டு / பத்து லக்ஷத்திற்கு மேல் வருட வருமானம் உள்ளவர்களுக்கு மொத்தமாக மான்யம் / இலவசம் குடுக்க கூடாது.. வ. கோ. கீழே இருப்பவருக்கு எதுக்கு விலை உயர்ந்த காஸ் / மொபைல்.. ( வேலை இல்லாமல் சோம்பி திரிபவனுக்கு எதுக்கு கல்யாணம் / பிள்ளைகுட்டிகள்..) சற்று யோசியுங்கள்..
Rate this:
1 members
0 members
3 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.