வெளிநாட்டில் கறுப்பு பணம் பதுக்கல்: இந்தியாவுக்கு ரூ.7 லட்சம் கோடி இழப்பு
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

மும்பை :கடந்த 2001 முதல் 2010 வரையிலான, 10 ஆண்டுகளில், இந்தியாவில் இருந்து, 12,300 கோடி டாலர் (7 லட்சம் கோடி ரூபாய்) கறுப்பு பணம், வெளிநாடுகளில் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டுள்ளது.


வளரும் நாடுகள்:

இதுகுறித்து, அமெரிக்காவை சேர்ந்த குளோபல் பைனான்ஸ் இன்டெக்ரிட்டி நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையின் விவரம்:வளரும் நாடுகளில் உள்ள கறுப்பு பணம், சட்டவிரோதமாக வளர்ந்த நாடுகளில் பதுக்கி வைக்கப்படுகிறது. இதனால், வளரும் நாடுகள், ஏழை நாடுகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றன.இந்நாடுகளின் வளர்ச்சிப் பணிகளுக்கு, இத்தகைய செயல்பாடு தடையாக உள்ளது.இந்த வகையில், இந்தியாவில் இருந்து, 10 ஆண்டுகளில், 12,300 கோடி டாலர் கறுப்பு பணம், வெளிநாடுகளுக்கு சென்றுள்ளது.


கட்டமைப்பு துறை:

இதில், 10 ஆயிரம் கோடி டாலருக்கும் அதிகமான தொகை, கல்வி, ஆரோக்கிய பராமரிப்பு மற்றும் அடிப்படை கட்டமைப்பு துறையின் மேம்பாட்டிற்கு பயன்பட்டிருக்க வேண்டும்.மேலும், குறிப்பிட்ட தொகை இந்தியாவிலேயே இருந்திருந்தால், தேசிய மின் தொகுப்பு துறையில் முதலீடு செய்யப்பட்டிருக்கும். இதனால், கடந்த ஆண்டு தேசிய அளவில் ஏற்பட்ட மின்தடை பிரச்னைகள், இந்தியாவிற்கு ஏற்பட்டிருக்காது.அண்மை காலங்களில், இந்தியா முன்னேற்றம் கண்டு உள்ளது. எனினும், சட்டவிரோதமாக வெளியேறும் நிதியால், இந்தியா தொடர்ந்து மிகப் பெரிய அளவிலான செல்வத்தை இழந்து வருகிறது.இந்தியாவில் இருந்து, ஏற்கனவே வெளியேறி விட்ட கறுப்பு பணத்தை மீட்பதற்கு தான், ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுக்கின்றன. கறுப்பு பணம் உள்ளவரை இது தொடரும். அரசியல் கொள்கைகளை உருவாக்குவோரும், விமர்சிப்போரும், நாட்டில் இருந்து வெளியேறும் கறுப்பு பணத்தை தடுப்பதற்கு முன்னுரிமை தர வேண்டும்.


சுணக்க நிலை:

கடந்த 2010ம் ஆண்டு, அனைத்து வளரும் நாடுகளில் இருந்தும், 85,880 கோடி டாலர் கறுப்பு பணம், சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு சென்றுள்ளது.இது, 2008ம் ஆண்டில், அமெரிக்க பொருளாதார சுணக்க நிலைக்கு, முன்பான, மிக உயர்ந்த பட்ச தொகையை (87,130 கோடி டாலர்) விட குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.வளரும் நாடுகளை பொறுத்தவரை, அதிக அளவில் கறுப்பு பணத்தை வெளிநாடுகளில் இழந்ததில், சீனா முதலிடத்தில் உள்ளது. இந்நாடு, மதிப்பீட்டிற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட, 10 ஆண்டுகளில், 27.4 லட்சம் கோடி டாலரை இழந்துள்ளது.


பிலிப்பைன்ஸ்:

அடுத்த இடங்களில், மெக்சிகோ (47,600 கோடி டாலர்), சவுதி அரேபியா (20,100 கோடி டாலர்), ரஷ்யா (15,200 கோடி டாலர்), பிலிப்பைன்ஸ் (13,800 கோடி ரூபாய்), நைஜீரியா (12,900 கோடி ரூபாய்) ஆகியவை உள்ளன.இந்த பட்டியலில், இந்தியா (12,300 கோடி டாலர்) எட்டாவது இடத்தில் உள்ளது.

- நமது டில்லி நிருபர் -

Advertisement

தொடர்புடைய செய்திகள்:


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (14)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
iravi - Chennai,இந்தியா
20-டிச-201201:25:28 IST Report Abuse
iravi அந்த அறிக்கையின் படி, நாம் விடுதலை அடைந்ததிலிருந்து இது வரை (1948-2010) கறுப்புப் பணமாக இழந்தது சுமார் 12 லட்சம் கோடி ரூபாய், அதில் 2001-2010 கால கட்டத்தில் இழந்தது சுமார் 7 லட்சம் கோடி ரூபாய். அதாவது 2001 வரை இழந்ததன் ஒன்றரைப் பங்கு 2001-2010 க்குள் இழந்திருக்கிறோம். தாராள மயமாக்கிய காலந்தொட்டு கறுப்புப் பண முதலைகளுக்கு பெரிய வேட்டை. யு பி எ ஆட்சி தொடங்கிய 2004 முதல் 2010 வரை கறுப்புப் பண வெளியேற்றம் சுமார் ஐந்தரை லட்சம் கோடி ரூபாய் ஆகும். இந்த ஆட்சியில் நாட்டுக்கு ஏற்பட்ட இழப்பில் அதிகம் உள்இழப்பா ? வெளிஇழப்பா? பட்டி மன்றத் தலைப்பு தயார். நடத்த முன்வரும் தொலைகாட்சி வழித்தடம் எதுவோ?
Rate this:
Share this comment
Cancel
Thiru - Chennai,இந்தியா
19-டிச-201215:42:31 IST Report Abuse
Thiru கருப்பு பணத்தினால் இந்தியாவின் பொருளாதாரம் மிக கடுமையாக பாதிக்க படும், விரைவில் அரசு கருப்பு பணத்தை மீட்டால் பொருளாதார வீழ்ச்சி வெகுவாக குறைக்க படலாம், திரு அத்வானி அறைகூவல் விட்டபோழுதே அரசு விழித்து செயல் பட்டிருந்தால் பொருளாதார வீழ்ச்சி இல்லாமல் நாடு வழர்ச்சி கண்டிருக்கும், பாவாம் அரசு அரசியல் வியாதிகள் இந்த வியாதியால் ரொம்பத்தான் பாதிக்க பட்டுள்ளார்கள் . இனியாவது நடவடிக்கை எடுக்குமா அல்லது அன்ன ஹசாரே போன்ற சமுக ஆர்வலர்கள் கத்தி கொண்டேதான் இருக்க வேண்டுமா? ஏற்கனவே கட்டுமான தொழிலில் நிறைய பணம் புழக்கத்தில் வந்துவிட்டது ...
Rate this:
Share this comment
Cancel
Baskaran Kasimani - Singapore,சிங்கப்பூர்
19-டிச-201215:21:04 IST Report Abuse
Baskaran Kasimani "கடந்த ஆண்டு தேசிய அளவில் ஏற்பட்ட மின்தடை பிரச்னைகள், இந்தியாவிற்கு ஏற்பட்டிருக்காது.அண்மை காலங்களில், இந்தியா முன்னேற்றம் கண்டு உள்ளது. எனினும், சட்டவிரோதமாக வெளியேறும் நிதியால், இந்தியா தொடர்ந்து மிகப் பெரிய அளவிலான செல்வத்தை இழந்து வருகிறது." - சரியான நெத்தி அடி. ஆனால் நம்மூர் எருமைகளுக்கு உரைக்கவா போகிறது?
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
19-டிச-201214:20:28 IST Report Abuse
Nallavan Nallavan அப்போ, மண் மோகன் சொன்ன "உங்கள் பணம் உங்களுக்கே" டயலாக் கூட வேஸ்ட்டு போல இந்தக் கறுப்புப் பணத்தை மீட்டு ஒரு குடிமகனுக்கு தலா ரூபாய் ஒரு கோடியாவது கொடுக்கலாம் போலிருக்கே
Rate this:
Share this comment
Cancel
saravanan - Dares Salaam,தான்சானியா
19-டிச-201213:48:21 IST Report Abuse
saravanan சே.... நமக்கு எட்டாவது இடமா???? அவமானம்.... விரைவில் முதலிடத்தை பிடிக்க இன்னும் நிறைய உழைக்க வேண்டும் நம் அரசியல்வியாதிகள்..... நாம் இன்னும் நிறைய இழக்க வேண்டும்....
Rate this:
Share this comment
Cancel
Ravichandran - dar salam ,தான்சானியா
19-டிச-201212:26:06 IST Report Abuse
Ravichandran மிஸ்டர் அமெரிக்கன், கவலை படாதீர்கள் மிக சிக்கீரம் முதல் எடத்துக்கு வந்துருவோம். அதாற்குதான் எங்கள் நாட்டு அரசியல் வியாதிகள் இரவும் பகலும் பாடுபடுகிறார்கள். எதுக்கும் நல்ல கணக்கு பாருங்க நாங்க ரெண்டாவது இடத்துல இருந்தாலும் இருப்போம்.
Rate this:
Share this comment
Cancel
Iniya Tamilan - Bangalore,இந்தியா
19-டிச-201212:22:27 IST Report Abuse
Iniya Tamilan சார் அதுக்குதான FDI வந்துருக்கு பொருங்க கருப்ப வெள்ளையாக்கி காட்றோம்
Rate this:
Share this comment
Cancel
Soundar - Chennai,இந்தியா
19-டிச-201211:22:52 IST Report Abuse
Soundar ஐயோ ஐயோ வெளிநாட்டில் கருப்பு பணம் வைத்திருப்பவர்கள் யார்.. 90% அரசியல்வாதிகள்.. கருப்பு பணத்தை இந்தியா கொண்டு வந்து என்ன பண்ண போறோம்... ஏதாவது இலவசம் அது இதுன்னு உருப்படாத திட்டம் போட்டு, திரும்ப அந்த பணம் முழுவதும் அவர்களிடமே போகும்.. மீண்டும் வெளி நாட்டு வங்கிகளுக்கு தான் போக போகிறது.. விடுங்க பாஸ் அது அங்கேயே இருந்திட்டு போகட்டும்
Rate this:
Share this comment
Cancel
mirudan - kailaayam,இந்தியா
19-டிச-201210:40:28 IST Report Abuse
mirudan நான் வேலை பார்க்கும் ஒரு நிறுவனம் எத்தனை இந்திய வங்கிகளில் கணக்கு வைத்து இருக்கிறார்கள் என்றே தெரிய வில்லை ? நம் நாட்டின் வருமான வரித்துறை என்று ஓன்று இருக்கா என்று சந்தேகமாக இருக்கு
Rate this:
Share this comment
Cancel
aymaa midas=vison2023 - kodanaatu, koththadimai kuppam, vilaiyilaa kaiyuttu ,நிய்யூ
19-டிச-201205:50:54 IST Report Abuse
aymaa midas=vison2023 இங்கே எத்தனையோ வெளிநாட்டு நண்பர்கள் கூவோ கூவு என்று கூவுகிறார்கள் இதில் எத்தனை பேர் தங்கள் சம்பாதிக்கும் பணத்தை சட்டப்படி நாட்டுக்கு கொண்டுவருகிறார்கள் 75 சதம் நண்பர்கள் உண்டியல் குருவிகளிடம் கொடுத்து அனுப்புகிறார்கள். இவர்கள் கொடுத்த பணம் எங்கே போனது, இவர்கள் குடும்பத்திற்கு வந்து சேர்ந்த பணம் எங்கு இருந்து வந்தது. இதை பற்றி யோசிப்பதில்லை தெரிந்தாலும் கவலை படுவதில்லை. வாய் கிழிய பேசும் நண்பர்களே மாற்றம் உங்களிடம் இருந்து தொடங்குங்கள், நான் பத்து ஆண்டுகளுக்கு முன்பு இந்த தவறை செய்து கொண்டு இருந்தேன் கடந்த பத்து ஆண்டுகளில் ஒரு சென்ட் கூட உண்டியல் குருவிகளிடம் கொடுத்து அனுப்பியதில்லை. அய்யா குருவிகளா உங்கள் தொழிலை தயவுசெய்து மாற்றுங்கள், முடிந்தவரை உண்மையான குடிமகனா இருங்கள்.
Rate this:
Share this comment
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
19-டிச-201214:18:57 IST Report Abuse
Nallavan Nallavanநான் ஒரு முறை கூட அவ்வாறு பணம் அனுப்பியதில்லை இப்போதெல்லாம் அதற்கான சாத்தியங்களும் குறைவு, அது தெரியுமா உங்களுக்கு?...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்